

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
மகரம்
(உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)
கிரகநிலை:
ராசியில் குரு, சனி - தைரிய ஸ்தானத்தில் சூர்யன், புதன், சுக்கிரன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய், ராகு - லாப ஸ்தானத்தில் கேது என கிரகநிலை அமைந்திருக்கிறது
கிரக மாற்றங்கள்:
5ம் தேதி - குரு பகவான் அதிசாரமாக தனவாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
10ம் தேதி - புதன் பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
11ம் தேதி - சுக்கிரன் பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
13ம் தேதி - செவ்வாய் பகவான் ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
14ம் தேதி - சூர்ய பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
28ம் தேதி - புதன் பகவான் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
மகர ராசி அன்பர்களே!
இந்த மாதம் நன்மைகள் நடக்கும் மாதம்.
எல்லாவகையிலும் நல்லதே நடக்கும். பணவரத்து அதிகரிக்கும். எதிர்ப்புகள் விலகும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். விரும்பிய காரியங்களைச் செய்து சாதகமான பலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.
தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். வியாபார போட்டிகள் குறையும். பழைய பாக்கிகள் வசூலாகும். தொழில் விரிவாக்கத்திற்குத் தேவையான பண உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கப் பெறுவார்கள். பணி நிமித்தமாக வெளிநாடு செல்ல வேண்டி வரும்.
குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகள் உங்கள் சொல்படி நடப்பது மனதுக்கு திருப்தி தரும். உறவினர்கள் - நண்பர்கள் மூலம் நன்மைகள் நடக்கும்.
பெண்களுக்கு பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். எடுத்த காரியங்களில் சாதகமான பலன்கள் கிடைக்கும்.
அரசியல்வாதிகள் எதிர்ப்புகளையும் மீறி முன்னேறுவர். சகாக்கள் மத்தியில் ஆதரவு பெருகும். வீண், வறட்டு கௌரவத்துக்காக சேமிப்புகளைக் கரைத்துக்கொள்ள வேண்டாம்.
கலைத்துறையினரின் படைப்புத் திறன் வளரும். பொது நிகழ்ச்சிக்கு தலைமை தாங்குமளவுக்குப் பிரபலமாவார்கள். நல்ல வாய்ப்புகள் வரும். உங்கள் முன்னேற்றத்திற்கு பாதை வகுக்கும் காலமாக இருக்கும்.
மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும். உற்சாகமாகக் காணப்படுவீர்கள்.
உத்திராடம்:
இந்த மாதம் உங்களது உடமைகளை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் மெத்தனமான போக்கு காணப்படும். சரக்குகளை அனுப்பும்போதும் பாதுகாத்து வைக்கும் போதும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
திருவோணம்:
இந்த மாதம் உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளிடம் அனுசரித்துச் செல்வது நல்லது. செய்யும் வேலை பற்றி மனதில் திருப்தியற்ற எண்ணம் உண்டாகும். குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் உங்களுக்கு மனவருத்தத்தைத் தருவதாக இருக்கலாம். கவனமாகக் கையாள்வது நல்லது.
அவிட்டம்:
இந்த மாதம் பிள்ளைகளுடன் அனுசரித்துச் செல்வது நன்மையைத் தரும். கணவன், மனைவிக்கிடையே திடீர் மனவருத்தம் அடையும்படியான சூழ்நிலை வரலாம். கவனம் தேவை. உங்களது பொருள்களை கவனமாகப் பாதுகாத்துக்கொள்வது நல்லது. வீண் பிரச்சினைகளில் தலையிடாமல் ஒதுங்கிவிடுவது நன்மைதரும்.
பரிகாரம்: சனிக்கிழமையில் ஆஞ்சநேயரை வழிபடுவது கஷ்டங்களைப் போக்கும். மனதில் தைரியம் உண்டாகும்.
சந்திராஷ்டம தினங்கள்: 22, 23
அதிர்ஷ்ட தினங்கள்: 3, 4, 5
அதிர்ஷ்ட கிழமை: திங்கள், செவ்வாய், வெள்ளி
அதிர்ஷ்ட எண்: 2, 6, 9
அதிர்ஷ்ட திசை: தெற்கு, தென்மேற்கு
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு
*********************************
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |