

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)
கிரகநிலை:
தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு, சனி - சுக ஸ்தானத்தில் சூர்யன், புதன், சுக்கிரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய், ராகு - விரய ஸ்தானத்தில் கேது என கிரகநிலை அமைந்திருக்கிறது.
கிரக மாற்றங்கள்:
5ம் தேதி - குரு பகவான் அதிசாரமாக தைரிய வீர்ய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
10ம் தேதி - புதன் பகவான் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
11ம் தேதி - சுக்கிரன் பகவான் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
13ம் தேதி - செவ்வாய் பகவான் சப்தம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
14ம் தேதி - சூர்ய பகவான் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
28ம் தேதி - புதன் பகவான் ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
தனுர் ராசி அன்பர்களே!
இந்த மாதம் பேச்சின் இனிமையால் காரியம் கைகூடும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
தொழில் வியாபாரம் திருப்தியாக நடக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வாடிக்கையாளர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக வேலையாக அலைய வேண்டி இருக்கும். புதிய பொறுப்புகள் சிலருக்குக் கிடைக்கலாம். வெளிநாடு முயற்சிப்பவர்களுக்கு அனுகூலம் கிடைக்கும்.
குடும்பத்தில் சகஜநிலை காணப்படும். உறவினர்கள் மூலம் நல்ல தகவல் வந்து சேரும். கணவன் மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். குடும்பத்தினருடன் ஆன்மிகப் பயணம் செல்லும் நிலை உருவாகும். மற்றவர்கள் ஆலோசனை கேட்டு உங்களை நாடி வருவார்கள். உங்கள் குடும்பத்தை விட்டுப் பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேருவார்கள்.
பெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கூடுதல் கவனத்துடன் செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும்.
அரசியல்வாதிகள் கட்சித் தலைமையின் ஆணையை மீறி தனி ஆவர்த்தனம் காட்ட வேண்டாம். தொகுதி மக்களிடம் நெருங்கிப் பழகுவது அவசியம்.
கலைத்துறையினருக்கு வெளிநாட்டு புது நிறுவனங்கள் உங்களுக்கு வாய்ப்பளிக்கும். அயராத உழைப்பால் சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள்.
மாணவர்களுக்கு மற்றவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. கல்வியில் திருப்தி உண்டாகும்.
மூலம்:
இந்த மாதம் மரியாதையும், அந்தஸ்தும் அதிகரிக்கும். கடினமான முயற்சிகள் கூட எளிமையாகச் செய்ய முடியும். தொழில் வியாபாரத்தில் இருந்த பணத் தட்டுப்பாடு நீங்கும். வசூலாக வேண்டிய கடன்பாக்கிகள் வசூலாகும். வியாபாரம் தொடர்பான பயணங்களால் லாபம் கிடைக்கப் பெறுவீர்கள்.
பூராடம்:
இந்த மாதம் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக ஊழியர்களுடன் இருந்த கருத்து வேற்றுமை குறையும். வர வேண்டிய பணம் வந்து சேரும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். வாழ்க்கை துணையின் உடல் நலத்தில் கவனம் தேவை. அடுத்தவரின் செயல்கள் உங்கள் கோபத்தைத் தூண்டுவதாக இருக்கலாம்.
உத்திராடம்:
இந்த மாதம் அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது. பிள்ளைகளிடம் கனிவாக நடந்து கொள்வது நல்லது. இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக முடியும். கவுரவம் உயரும். மற்றவர்களிடம் நன்மதிப்பு உண்டாகும்.
பரிகாரம்: வியாழக்கிழமையில் முல்லை மலர் சாற்றி தட்சிணாமூர்த்தியை வழிபடுவது கடன் பிரச்சினையைத் தீர்க்கும். செல்வம் சேரும்.
சந்திராஷ்டம தினங்கள்: 20, 21
அதிர்ஷ்ட தினங்கள்: 1, 2, 29, 30
அதிர்ஷ்ட கிழமை: புதன், வியாழன்
அதிர்ஷ்ட எண்: 3, 6, 9
அதிர்ஷ்ட திசை: கிழக்கு, வடகிழக்கு
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, மஞ்சள்
*********************************
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |