விருச்சிக ராசி அன்பர்களே! ஏப்ரல் மாத பலன்கள்; வீடு - மனை யோகம்; பண வரவு கூடும்; காரியத்தில் வெற்றி; தடைகள் விலகும்! 

விருச்சிக ராசி அன்பர்களே! ஏப்ரல் மாத பலன்கள்; வீடு - மனை யோகம்; பண வரவு கூடும்; காரியத்தில் வெற்றி; தடைகள் விலகும்! 
Updated on
2 min read

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

விருச்சிகம்
(விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)

கிரகநிலை:
ராசியில் கேது - தைரிய ஸ்தானத்தில் குரு, சனி - பஞ்சம பூர்வ ஸ்தானத்தில் சூர்யன், புதன், சுக்கிரன் - சப்தம ஸ்தானத்தில் செவ்வாய், ராகு என கிரகநிலை அமைந்திருக்கிறது.

கிரக மாற்றங்கள்:
5ம் தேதி - குரு பகவான் அதிசாரமாக சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
10ம் தேதி - புதன் பகவான் ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
11ம் தேதி - சுக்கிரன் பகவான் ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
13ம் தேதி - செவ்வாய் பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
14ம் தேதி - சூர்ய பகவான் ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
28ம் தேதி - புதன் பகவான் சப்தம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

விருச்சிக ராசி அன்பர்களே!

இந்த மாதம் வீடு - மனை - வாகனம் சம்பந்தமான காரியங்களில் எதிர்பார்த்த பலன்கள் கிட்டும். காரியத் தடைகள் நீங்கும். எதுவும் நடக்காமல் இழுபறியாக இருந்த சொத்து சம்பந்தமான காரியங்கள் அகலும். மனம் மகிழும்படியாக எல்லாம் நடந்து முடியும்.

தொழில் வியாபாரம் நன்றாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் வேகம் இருக்கும். கொடுக்கல், வாங்கலில் இருந்த சுணக்க நிலை மாறும். பணவரத்து இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகம் தொடர்பான பயணம் செல்ல வேண்டி இருக்கலாம். உங்களுக்கு நற்பெயர் கிடைப்பதில் எந்த இடையூறும் இருக்காது.

குடும்பத்தில் இருந்து வந்த மனம் நோகும்படியான சூழ்நிலைகள் மாறும். ஆனாலும் அனைத்து விஷயங்களிலும் நீங்கள் அனுசரித்துச் செல்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே எதிர்பாராத மனவருத்தம் ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் பற்றிய கவலை உண்டாகும். நிதானமாகச் செய்யும் செயல்கள் வெற்றியைத் தரும்.

பெண்களுக்கு எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.
அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். தொகுதி மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வது அவசியம். கட்சித் தலைமையின் அன்புக்கு பாத்திரமாவீர்கள்.


கலைத்துறையினர் புதுமையான சில படைப்புகளை வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பார்கள். படைப்புகளை வெளியிட சில போராட்டங்களைச் சந்திக்க வேண்டி இருக்கும்.
மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை குறையும். அதிக மதிப்பெண் எடுக்க ஆர்வமாக படிப்பீர்கள்.

விசாகம்:
இந்த மாதம் உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் செயலாற்றுவார்கள். வேலை பார்க்கும் இடத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். குடும்பத்தில் சுபகாரியம் நடக்கும். திருமண முயற்சிகள் சாதகமான பலன்களைத் தரும். சிலருக்கு புத்திர பாக்கியம் உண்டாகும்.

அனுஷம்:
இந்த மாதம் வாய்க்கு ருசியான உணவு உண்பீர்கள். கணவன் மனைவி பரஸ்பரம் ஒருவரது பேச்சை மற்றவர் கேட்பதன் மூலம் நன்மைகள் உண்டாகும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எடுத்த காரியத்தை திறமையாகச் செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். தடைகள் விலகும். பணவரத்து திருப்திதரும்.

கேட்டை:
இந்த மாதம் பலவகைகளிலும் நன்மை உண்டாகும். இழுபறியாக இருந்த சில வேலைகள் சாதகமாக நடந்து முடியும். பணவரத்து அதிகரிக்கும். தெளிவான முடிவு எடுப்பதன் மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும். அரசாங்கம் தொடர்பான விவகாரங்களில் சாதகமான போக்கு காணப்படும்.

பரிகாரம்: சஷ்டிக் கவசம், சண்முக கவசம் பாராயணம் செய்து முருகப் பெருமானை வழிபடுவது காரியத் தடைகளை நீக்கும். எதிர்ப்புகள் நீங்கும்.
சந்திராஷ்டம தினங்கள்: 18, 19
அதிர்ஷ்ட தினங்கள்: 27, 28
அதிர்ஷ்ட கிழமை: செவ்வாய், புதன்
அதிர்ஷ்ட எண்: 6, 9
அதிர்ஷ்ட திசை: கிழக்கு, தென்மேற்கு
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, பச்சை
*********************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in