

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
மேஷம்
(அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)
கிரகநிலை:
தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய், ராகு - அஷ்டம ஸ்தானத்தில் கேது - தொழில் ஸ்தானத்தில் குரு, சனி - விரய ஸ்தானத்தில் சூர்யன், புதன், சுக்கிரன் என கிரகநிலை அமைந்திருக்கிறது.
கிரக மாற்றங்கள்:
5ம் தேதி - குரு பகவான் அதிசாரமாக லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
10ம் தேதி - புதன் பகவான் ராசிக்கு மாறுகிறார்.
11ம் தேதி - சுக்கிரன் பகவான் ராசிக்கு மாறுகிறார்.
13ம் தேதி - செவ்வாய் பகவான் தைரிய வீர்ய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
14ம் தேதி - சூர்ய பகவான் ராசிக்கு மாறுகிறார்.
28ம் தேதி - புதன் பகவான் தனவாக்கு ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
மேஷ ராசி அன்பர்களே!
இந்த மாதம் ராசிநாதன் செவ்வாய் மூலம் நல்ல பலன்களைப் பெறப் போகிறீர்கள்.
மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும். மனக்கவலை குறையும். எல்லாவகையிலும் சாதகமான பலன் கிடைக்கப் பெறுவீர்கள். சுபச் செலவு உண்டாகலாம். பயணங்கள் திட்டமிட்டபடி நடக்கும்.
தொழில் வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும் என்ற தன்னம்பிக்கை ஏற்படும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும்போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலைச் சந்திக்க வேண்டி வரும். அலுவலக வேலைகள் உடனே முடியாமல் இழுபறியாக இருக்கும். நல்ல பெயர் கிடைக்கப் பெறுவீர்கள்.
குடும்பத்தில் வெளிநபர்களால் இருந்த குழப்பம் நீங்கும். சொந்த விஷயங்களுக்கு அடுத்தவர் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பது நல்லது. கணவன் மனைவி ஒருவருக்கொருவர் மனம் விட்டுப் பேசுவதன் மூலம் இடைவெளி குறையும். பிள்ளைகள் நலனுக்காக செலவுகள் செய்ய வேண்டி இருக்கும்.
பெண்களுக்கு எதிலும் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பாராமல் பயணத்தில் தடங்கல் ஏற்படலாம்.
கலைத்துறையினருக்கு தொழில் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். சக கலைஞர்களிடம் நிதானத்தை கடைபிடிப்பது நன்மை தரும். கோபத்தைக் குறைத்து தன்மையாகப் பேசுவதால் காரிய வெற்றி உண்டாகும். எதிர்பாராத செலவு இருக்கும்.
அரசியல் துறையினருக்கு தேவையற்ற அலைச்சலைக் குறைத்துக் கொள்வது நல்லது. எல்லாவகையிலும் நன்மை உண்டாகும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்யத் தூண்டும். பிரிந்து சென்றவர்களை மீண்டும் சந்திக்க நேரலாம்.
மாணவர்களுக்கு கல்வியில் மேன்மை அடைய கூடுதல் கவனத்துடன் படிப்பது அவசியம்.
அஸ்வினி:
இந்த மாதம் வீண் அலைச்சல், காரிய தாமதம் போன்றவை ஏற்படலாம். புதிய முயற்சிகளை தள்ளிப் போடுவதும் நல்லது. காரிய அனுகூலம் ஏற்படும். உணர்ச்சிகரமாகப் பேசி மற்றவர்களைக் கவருவீர்கள். எல்லாவற்றிலும் எதிர்பார்த்த நன்மை உண்டாகும். பணம் வரத்து கூடும்.
பரணி:
இந்த மாதம் கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சினை தீரும். நீண்ட நாளாக இருந்த கஷ்டம் நீங்கும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். அரசாங்கம் மூலம் லாபம் ஏற்படும். வெளியூர் அல்லது வெளிநாட்டுப் பயணம் சாதகமாக இருக்கும்.
கார்த்திகை:
இந்த மாதம் தொழில் வியாபாரம் லாபகரமாக நடக்கும். வாக்கு வன்மையால் புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்கப் பெறுவீர்கள். தடைபட்ட ஆர்டர்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி புதிய பொறுப்புகள் ஏற்படலாம். மேல் அதிகாரிகள் கொடுத்த வேலையை செய்து முடித்து அவர்களின் நன்மதிப்புக்கு ஆளாவீர்கள்.
பரிகாரம்: ஸ்ரீரங்கநாதரை வணங்கி வாருங்கள். வாழ்க்கையில் சுபிட்சம் உண்டாகும்.
சந்திராஷ்டம தினங்கள்: 1, 2, 29, 30
அதிர்ஷ்ட தினங்கள்: 10, 11, 12
அதிர்ஷ்ட கிழமை: திங்கள், செவ்வாய்
அதிர்ஷ்ட எண்: 2, 6, 9
அதிர்ஷ்ட திசை: கிழக்கு, வடமேற்கு
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, பச்சை, வெள்ளை
*******************
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |