கடக ராசி அன்பர்களே! மார்ச் மாத பலன்கள் - அவசர முடிவு வேண்டாம்; புதிய வாய்ப்புகள்; மதிப்பு உயரும்; லாபம் உண்டு

கடக ராசி அன்பர்களே! மார்ச் மாத பலன்கள் - அவசர முடிவு வேண்டாம்; புதிய வாய்ப்புகள்; மதிப்பு உயரும்; லாபம் உண்டு
Updated on
2 min read

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

கடகம் (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)

கிரகநிலை:

தைரிய வீரிய ஸ்தானத்தில் சந்திரன் - பஞ்சம ஸ்தானத்தில் கேது - களத்திர ஸ்தானத்தில் புதன், குரு, சனி - அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன் - லாப ஸ்தானத்தில் செவ்வாய், ராகு என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரகமாற்றங்கள்
07-03-2021 அன்று புதன் பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
18-03-2021 அன்று சுக்ர பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
25-03-2021 அன்று புதன் பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள் :

புதுமையை அதிகம் விரும்பும் கடக ராசிக்காரர்களே!

நீங்கள் புதுமை படைக்க எண்ணுபவர்கள். இந்த மாதம் பணவரவு இருக்கும். எடுத்த முடிவை செயல்படுத்தும் முன் ஒரு முறைக்கு இருமுறை ஆலோசிப்பது நல்லது. மனம் எந்தவொரு காரியத்திலும் அவசர முடிவு எடுக்கத் தூண்டும். வீண் வாக்குவாதங்களால் பகையை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. வீண் அலைச்சலுக்குப் பிறகே எந்தக் காரியமும் நடந்து முடியும்.

குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே திடீர் பூசல்கள் ஏற்பட்டு சரியாகும். குடும்பச் செலவுகள் கூடும். குடும்பம் பற்றிய கவலைகள் உண்டாகும். உறவினர்கள், நண்பர்களிடம் பேசும்போது நிதானமாகப் பேசுவது நன்மைகளைத் தரும். நெருப்பு மற்றும் ஆயுதங்களைப் பயன்படுத்தும்போது மிகவும் எச்சரிக்கை தேவை.

தொழில், வியாபாரம் தொடர்பான பேச்சுவார்த்தைகளின் போது மிகவும் நிதானமாக பேசுவது நன்மை தரும். எதிர்பார்த்த பணம் தாமதப்படும். புதிய ஆர்டர்கள் கிடைக்க அலைய வேண்டி இருக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாகச் செயல்பட்டு பாராட்டுகளைப் பெறுவார்கள். நினைத்த காரியத்தை நினைத்தபடி நடத்தி முடிக்க முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.

பெண்களுக்கு புதிய தொடர்புகள் மூலம் லாபம் உண்டாகும். மனம் மகிழும்படியான நிகழ்ச்சிகள் நடக்கும்.

கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடிவந்து கதவைத்தட்டும். தடைப்பட்ட பணவரவுகள் யாவும் தடையின்றிக் கிடைக்கும். தொழிலில் இருந்த போட்டி பொறாமைகள் விலகி உடனிருக்கும் கலைஞர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நீங்கள் பணியாற்றி வெளிவந்த படங்களும் வெற்றியடைவதால் ரசிகர்களின் ஆதரவு அமோகமாக இருக்கும். வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடிய வாய்ப்பு அமையும்.

அரசியல்துறையினருக்கு உங்களின் பெயர், புகழ் யாவும் உயரக்கூடிய காலமாகும். எதிர்பார்த்த கௌரவப் பதவிகள்கூட கிடைக்கும். பெரிய மனிதர்களின் தொடர்பும் தொண்டர்களின் ஆதரவும் சிறப்பாக அமையும். வெளியூர், வெளிநாட்டுக்குச் செல்லக்கூடிய வாய்ப்புகள் அமையும். மறைமுக வருவாய் அதிகரிக்கும்.

மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற கூடுதல் கவனம் செலுத்திப் படிப்பது நல்லது. வீண் அலைச்சல் உண்டாகும். சக மாணவர்களிடம் கவனமாகப் பேசுவது நல்லது.

புனர் பூசம் 4ம் பாதம்:
இந்த மாதம் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவுடன் இருப்பார்கள். வேலையின்றி இருப்பவர்கள் நல்ல வேலை கிடைக்கப் பெறலாம். வியாபாரிகளுக்கு தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். அலைச்சல் இருக்கும். ஆனால் கடந்த காலத்தை விட கூடுதல் வருவாயைப் பெறலாம். புதிய வியாபாரம் தொடங்குவதற்கு முன் ஒன்றுக்கு மேற்பட்டவர்களிடம் ஆலோசனைகள் செய்யவும்.

பூசம்:
இந்த மாதம் இருப்பதை சிறப்பாக நடத்துவதற்கு முயற்சி செய்யவும். அறிவைப் பயன்படுத்தி ஏற்றம் காணலாம். பெண்கள் உற்சாகமாக காணப்படுவர். கணவர் மற்றும் அண்டை அயலாரின் அன்பும் பாசமும் கிடைக்கும். பிள்ளை வளர்ப்பில் பெருமை அடைவீர்கள். கலைஞர்கள், புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவர். புகழ் பாராட்டு கிடைக்கும்.

ஆயில்யம்:
இந்த மாதம் மாணவர்கள் தொடர்ந்து சிறப்பான நிலையில் இருப்பர். நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். பலருக்கு வெற்றி நிச்சயம். பொதுநல சேவகர்கள் நல்ல முன்னேற்றம் காண்பர். அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பதவியை அடையலாம். இறுக்கமான சூழ்நிலையிலும் சில நல்ல முன்னேற்றங்களைப் பெறப் போகிறீர்கள். வாகனம் மூலம் லாபம் வரும். மற்றவர்கள் பிரச்சினைகளில் வாதாடி வெற்றி பெறுவீர்கள்.

பரிகாரம்: ஸ்ரீ ராகவேந்திரரை பூஜை செய்யுங்கள். மனதார பிரார்த்தனை செய்யுங்கள். கவலைகள் நீங்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: 11, 12, 13
அதிர்ஷ்ட தினங்கள்: 5, 6
******************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in