Published : 01 Mar 2021 10:44 am

Updated : 01 Mar 2021 10:44 am

 

Published : 01 Mar 2021 10:44 AM
Last Updated : 01 Mar 2021 10:44 AM

மேஷ ராசி அன்பர்களே! மார்ச் மாத பலன்கள் - காரிய வெற்றி; விவாதம் வேண்டாம்; பண வரவு; மதிப்பு கூடும் 

march-mesham-palangal

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)


கிரகநிலை:

தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய், ராகு - ரண ருண ரோக ஸ்தானத்தில் சந்திரன் - அஷ்டம ஸ்தானத்தில் கேது - தொழில் ஸ்தானத்தில் புதன், குரு, சனி - லாப ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரக மாற்றங்கள்
07-03-2021 அன்று புதன் பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
18-03-2021 அன்று சுக்ர பகவான் அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
25-03-2021 அன்று புதன் பகவான் அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள் :

நண்பர்கள் வட்டாரம் அதிகம் கொண்டுள்ள மேஷ ராசி அன்பர்களே.

இந்த மாதம் தெளிவான சிந்தனைகள் தோன்றும். எந்தக் காரியத்தையும் செய்வதற்கு முன் ஆலோசனை செய்து அதில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். சாமர்த்தியமான உங்களது செயல் கண்டு மற்றவர்கள் ஆச்சரியப்படுவார்கள். முக்கிய நபர்கள், மிகப்பெரிய அந்தஸ்தில் உயர்ந்தவர்கள் முதலானோரின் நட்பு கிடைக்கும். அதனால் கவுரவம் அதிகரிக்கும். புதிய தொடர்புகள் மகிழ்ச்சி தரும்.

குடும்பத்தில் வாழ்க்கைத் துணை உங்களுக்கு ஆதரவாக இருப்பார். பிள்ளைகளின் நலனுக்காக பாடுபடுவீர்கள். விருந்தினர் வருகை இருக்கும். தடைப்பட்டு வந்த திருமண காரியங்கள் சாதகமாக நடக்கும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். குடும்பத்தில் வீண் விவாதங்கள் தோன்றும். கவனம் தேவை.

தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். வரவேண்டிய பணம் தாமதமாக வரும். சரக்குகள் வருவதும் புதிய ஆர்டர்கள் கிடைப்பதும் எதிர்பார்த்ததை விட குறைவாக இருக்கும். தொழில், வியாபாரம் தொடர்பான அலைச்சல்களும் ஏற்படும். கவனமாக இருப்பது அவசியம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கடுமையான வேலை இருக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைச் சுமை குறையும். முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். கடினமாக காரியங்களையும், திறமையாகச் செய்து முடிப்பீர்கள்.

பெண்கள் எடுத்த வேலையை வெற்றிகரமாகச் செய்து முடிப்பீர்கள். பெரியோர் மூலம் அனுகூலம் உண்டாகும். பணவரத்து திருப்தி தரும்.
கலைத்துறையினருக்கு நீங்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த பட வாய்ப்புகள் கிடைக்கப்பெற்று உங்களின் திறமைகளை வெளியுலகத்திற்குத் தெரியப்படுத்துவீர்கள். கலை சம்பந்தப்பட்ட துறைகளிலும் நல்ல உயர்வுகளைப் பெறமுடியும். நிலுவையில் இருந்த பண பாக்கிகளும் திருப்திகரமாக கைக்கு வந்து சேரும்.

அரசியல்வாதிகளின் பெயர், புகழ் அதிகரிக்கக்கூடிய காலம். எடுக்கும் காரியங்களில் வெற்றி கிட்டும். மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியும். பதவிக்கு இருந்த இடையூறுகள் விலகி எதிர்பார்க்கும் உயர்வுகளை அடைவீர்கள். உங்களின் வார்த்தைகளுக்கு மதிப்பும், மரியாதையும் உயரும்.

மாணவர்கள் கவனம் சிதற விடாமல் பாடங்களை படிப்பது நல்லது. விளையாட்டுகளில் கவனம் தேவை.

அஸ்வினி:
இந்த மாதம் பொன்னான வாய்ப்புகள் தேடி வரும். வாழ்க்கை வளம் முன்னேறும். தைரியமாகவும் அதே வேளையில் தெய்வ அனுகூலத்துடனும் காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். சகோதர சகோதரிகளிடம் நெருக்கம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தினில் சிற்சில பிரச்சினைகள் வரலாம். உடன் வேலை செய்வோரின் ஆதரவால் அதனைச் சமாளிப்பீர்கள்.

பரணி:
இந்த மாதம் குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் தங்கு தடையின்றி நடக்கும். தேவைகள் பூர்த்தியாகும். கணவன் மனைவி இடையே அன்பு நீடிக்கும். ஆனாலும் வீட்டில் சின்னச் சின்ன வாக்குவாதங்கள் தலைதூக்கலாம். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போவதால் நிலைமையைச் சமாளிக்கலாம். உறவினர் வகையில் மனஸ்தாபம் உருவாகலாம்.

கார்த்திகை 1ம் பாதம்:
இந்த மாதம் அதீத எதிர்பார்ப்புகள் வேண்டாம். சிலருக்கு தூரத்திலிருந்து விரும்பத்தகாத செய்திகள் வரலாம். தீவிர முயற்சிகளின் பேரில் சிலருக்கு சுபமான நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். உழைப்புக்கு ஏற்ற பிரதிபலன் கிடைக்காமல் இருந்தவர்களுக்கு தற்போதைய காலகட்டத்தில் நன்மைகள் நடக்கும்.

பரிகாரம்: அருகிலுள்ள முருகன் கோயிலுக்கு தினமும் சென்று வணங்கி வாருங்கள். பிரச்சினைகள் நீங்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், செவ்வாய்

சந்திராஷ்டம தினங்கள்: 5, 6

அதிர்ஷ்ட தினங்கள்: 26, 27
***********************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

தவறவிடாதீர்!மேஷ ராசி அன்பர்களே! மார்ச் மாத பலன்கள் - காரிய வெற்றி; விவாதம் வேண்டாம்; பண வரவு; மதிப்பு கூடும்மேஷம்மேஷ ராசிமார்ச் மாத பலன்கள்பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்MeshamMesha rasiMarch month palangal

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x