

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
மிதுனம்
(மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்)
கிரகநிலை:
ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது - அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ), குரு, சுக்கிரன், சனி - லாப ராசியில் செவ்வாய் - விரய ராசியில் ராகு என கிரகநிலை அமைந்திருக்கிறது.
10ம் தேதி புதன் வக்ர நிவர்த்தி அடைகிறார்.
14ம் தேதி சூரியன் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
19ம் தேதி செவ்வாய் விரய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
27ம் தேதி சுக்கிரன் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
மிதுன ராசி அன்பர்களே!
இந்த மாதம் வீண்கவலை நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உங்களது சொத்து தொடர்பான விவகாரங்களில் தாமதம் ஏற்படும். பக்தியில் நாட்டம் அதிகமாகும். நெருங்கிய நண்பர்களிடம் மனஸ்தாபம் ஏற்படலாம்.
தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பார்ட்னர்கள் மற்றும் வாடிக்கையாளர்களிடம் அனுசரித்துச் செல்வது நன்மை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைப்பளு ஏற்பட்டாலும், எப்படியாவது செய்து முடித்து விடுவார்கள். சக ஊழியர்கள் ஒத்துழைப்பும் இருக்கும்.
குடும்பத்தில் இருப்பவர்களுடன் ஏதாவது ஒருவகையில் வாக்குவாதம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே சிறுசிறு மனஸ்தாபம் உண்டாகும். சகோதரர்களிடம் கருத்து வேற்றுமை ஏற்படலாம். வெளியூர்ப் பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். நண்பர்கள் உறவினர்கள் ஆதரவுக் கரம் நீட்டுவார்கள்.
பெண்களுக்கு அடுத்தவர்களிடம் பேசும்போது யாரைப் பற்றியும் விமர்சிக்காமல் இருப்பது நல்லது. பணவரத்தில் தாமதம் இருக்கும்.
கலைத்துறையினருக்கு எப்போதும் நிதானமாக பேசிப் பழகுவது நல்லது. சக கலைஞர்களிடம் அனுசரித்துச் செல்வது நன்மைகளைத் தரும். பொருட்களைப் பாதுகாப்பாக வைப்பது அவசியம்.
அரசியல் துறையினருக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. வீண் அலைச்சல், தடை, தாமதம் ஏற்படலாம். புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது. எதிர்ப்புகள் விலகும். எல்லா நன்மைகளும் உண்டாகும். பயணம் மூலம் நன்மை கிடைக்கும்.
மாணவர்களுக்கு கல்வியில் பின்தங்கிய நிலை மாற கூடுதல் கவனத்துடன் அதிக நேரம் ஒதுக்கி பாடங்களை படிப்பது அவசியம்.
மிருகசீரிஷம்:
இந்த மாதம் பணம் கையாளும்போது கவனத்துடன் இருப்பது நன்மைகளைத் தரும். எதிர்பார்த்த பணவரவு இருக்கும். குழந்தைகளின் கல்வி பற்றிய கவலை குறையும். எல்லா துன்பங்களும் நீங்கி வாழ்வில் இன்பம் உண்டாகும். மனக் குழப்பங்கள் நீங்கும். எதிர்ப்புகள் அகலும்.
திருவாதிரை:
இந்த மாதம் உங்கள் பேச்சின் இனிமையால் எடுத்த காரியம் கைகூடும். சுப பலன்கள் உண்டாகும்.. எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆனால் எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. வெளியூர்ப் பயணம் செல்ல நேரிடலாம்.
புனர்பூசம்:
இந்த மாதம் தொழில் வியாபாரம் திருப்தியாக நடக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கலாம். வாடிக்கையாளர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக வேலையாக அலைய வேண்டி இருக்கும். புதிய பொறுப்புகள் சிலருக்கு கிடைக்கலாம்.
பரிகாரம்: கல்யாண கோலத்தில் இருக்கும் வெங்கடாஜலபதியை வணங்கி வாருங்கள். வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன்
***********************************************
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |