ரிஷப ராசி அன்பர்களே! பிப்ரவரி மாத பலன்கள்; நிதானம் தேவை; பண வரவில் தாமதம்; தெய்வ வழிபாடு கூடும்; தொழில் முன்னேற்றம்! 

ரிஷப ராசி அன்பர்களே! பிப்ரவரி மாத பலன்கள்; நிதானம் தேவை; பண வரவில் தாமதம்; தெய்வ வழிபாடு கூடும்; தொழில் முன்னேற்றம்! 
Updated on
2 min read

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

ரிஷபம்
(கார்த்திகை 2, 3, 4 பாதம், ரோகிணி, மிருகசிரீஷம் 1, 2, பாதம்)

கிரகநிலை:

ராசியில் ராகு - சப்தம ஸ்தானத்தில் கேது - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ), குரு, சுக்கிரன், சனி - விரய ராசியில் செவ்வாய் என கிரகநிலை அமைந்திருக்கிறது.

10ம் தேதி புதன் வக்ர நிவர்த்தி அடைகிறார்.
14ம் தேதி சூரியன் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
19ம் தேதி செவ்வாய் ராசிக்கு மாறுகிறார்.
27ம் தேதி சுக்கிரன் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

ரிஷப ராசி அன்பர்களே!

இந்த மாதம் ராசிநாதன் சுக்கிரனின் சஞ்சாரம் அனுகூலம் தரும் வகையில் அமைந்திருக்கிறது. துன்பம் வருவது போல் இருக்குமே தவிர, ஆனால் வராது. மனதில் ஏதேனும் கவலை, பயம் அவ்வப்போது ஏற்படும். உங்களது பேச்சே உங்களுக்கு எதிர்ப்பை உண்டாக்கலாம். யோசித்துப் பேசுவது நல்லது. ஆன்மிக எண்ணம் அதிகரிக்கும்.
தொழில் வியாபாரம் மூலம் வர வேண்டிய லாபம் தாமதப்படும். எதிர்பார்த்த நிதியுதவி ஓரளவு கிடைக்கும். ஆர்டர்களுக்காக இருந்த அலைச்சல் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விருப்பம் இல்லாத மாற்றம் வரலாம். எதிர்பார்த்த பதவி உயர்வு, பண நிலுவை வந்து சேர தாமதமாகலாம்.

குடும்பத்தில் வீண் வாக்குவாதங்கள் ஏற்படும். கணவன் மனைவிக்கிடையே நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. பிள்ளைகள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்கள், நண்பர்களிடம் கவனமாகப் பழகுவது நல்லது.

பெண்களுக்கு எந்தவொரு காரியத்தையும் செய்து முடிக்கும் வரை அந்தக் காரியம் முடியுமோ, முடியாதோ என்ற மனக்கவலை இருக்கும். வீண் அலைச்சல் குறையும்.
கலைத்துறையினருக்கு திறமையான பேச்சின் மூலம் சாதகமான பலன்கள் கிடைக்கும். காரியத் தடைகள் நீங்கும். தாமதமான வீண் அலைச்சல் ஏற்படலாம். புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது. தேவையான உதவிகள் கிடைக்கும். பணவரத்து அதிகரிக்கும்.

அரசியல் துறையினருக்கு உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். பயணங்களால் வீண் செலவு உண்டாகும். திடீர் தடைகள் ஏற்பட்டு நீங்கும். மேலிடத்தை திருப்திபடுத்த கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். சக மனிதர்களை அனுசரித்துச் செல்வது நன்மை தரும்.

மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெறுவது பற்றிய மனக்கவலை இருக்கும். சக மாணவர்களுடன் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.

கார்த்திகை:
இந்த மாதம் குடும்பத்தில் இருப்பவர்களிடம் இருந்து மனம் நோகும்படியான வார்த்தைகள் வெளிப்படலாம். அனுசரித்துச் செல்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே எதிர்பாராத மனவருத்தம் ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் பற்றிய கவலை உண்டாகும். நிதானமாகச் செய்யும் செயல்கள் வெற்றியைத் தரும்.

ரோகிணி:
இந்த மாதம் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. தெய்வ வழிபாடுகள் உங்களுக்கு வெற்றி உண்டாக்கும். பொறுப்புகள் வாய்ந்த பதவிகள் கிடைக்கும். மேலிடத்தின் உத்தரவுகளைக் கேட்டு நடந்தால் முன்னேற்றம் காணும் காலம்.

மிருகசீரிஷம்:
இந்த மாதம் நண்பர்களின் அனுகூலம் கிடைக்கும். உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்கள் உண்மையாக இருப்பார்கள். அதிக ஆர்வத்துடன் வேலை செய்வார்கள். தொழிலில் முன்னேற்றம் காணப்படும். வியாபாரிகளுக்கு ஆர்டர்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். ஆனாலும் லாபம் ஏற்படும்.

பரிகாரம்: விரதம் இருந்து பூஜை செய்து அம்மனை வணங்கி வாருங்கள். மனக்கவலை நீங்கும். காரிய வெற்றி உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வெள்ளி
**************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in