Published : 28 Dec 2020 23:19 pm

Updated : 28 Dec 2020 23:19 pm

 

Published : 28 Dec 2020 11:19 PM
Last Updated : 28 Dec 2020 11:19 PM

கும்ப ராசி அன்பர்களே!  2021 ஜனவரி மாத ராசிபலன்கள்; சிக்கல்கள் தீரும்; எதிர்பார்த்த பண வரவு; கடன் சுமை குறையும்! 

january-month-rasipalangal-kumba-rasi

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

கும்பம் (அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதம்)


கிரகநிலை:

தைரிய ஸ்தானத்தில் செவ்வாய் - சுக ஸ்தானத்தில் ராகு - ரண ருண ரோக ஸ்தானத்தில் சந்திரன் - தொழில் ஸ்தானத்தில் சுக்கிரன், கேது - லாப ஸ்தானத்தில் சூரியன் - அயன சயன போக ஸ்தானத்தில் புதன், குரு, சனி என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரகமாற்றங்கள்:

06-01-2021 அன்று சுக்கிர பகவான் காலை 07:18 மணிக்கு தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

30-01-2021 அன்று சுக்கிர பகவான் காலை 07:18 மணிக்கு லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்:

வீரத்தை விட விவேகமே சிறந்தது என்பதை மனதில் கொண்டு எதையும் சாதிக்கும் திறன் உடைய கும்ப ராசியினரே!

நீங்கள் வெள்ளை மனம் கொண்டவர்கள். இந்த மாதம் இனிமையான பேச்சின் மூலம் சிக்கலான காரியங்களையும் எளிதாகச் செய்து முடிப்பீர்கள். உங்கள் திறமையைக் கண்டு அடுத்தவர்கள் வியப்பார்கள். ஆனால் திடீர் கோபம் வரும். அதை கட்டுப்படுத்துவது நல்லது. அலைச்சலைத் தவிர்ப்பதன் மூலம் களைப்பு ஏற்படாமல் தடுத்துக் கொள்ள முடியும். வேளை தவறி உணவு உண்ணாமல் பார்த்துக் கொள்வது நல்லது. பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும்.

தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் சாதுர்யமாக செயல்பட்டு முன்னேற்றம் காண்பார்கள். ஆனால் வேலை செய்பவர்களிடம் கோபப்படாமல் தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது நன்மையைத் தரும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு பாராட்டு பெறுவார்கள். ஆனால் கடுமையான பணியின் காரணமாக சோர்வு உண்டாகலாம். கவனம் தேவை. எடுத்துக் கொண்ட பணிகளில் இருந்து வந்த தொய்வு நீங்கும்.

குடும்ப விஷயங்களில் ஆர்வம் காட்டுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவதில் கவனம் செல்லும். பிள்ளைகள் முன்னேற்றத்திற்காக பாடுபடுவீர்கள். உறவினர்கள் நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

பெண்களுக்கு திடீர் என்று கோபம் உண்டாவதை தவிர்ப்பது நல்லது. திறமையைக் கண்டு மற்றவர்கள் பாராட்டுவார்கள். எதிர்பார்த்த பணவரத்து இருக்கும்.
கலைத்துறையினருக்கு லாபங்கள் பெருகும். தடைப்பட்ட புதிய கடன்கள் இனி ஏற்படாது. இருக்கும். கடன் சுமையும் குறையும். வெளிநாடு செல்லும் திட்டம் வெற்றி பெறும். சம்பளம் உயரும். சிக்கல்கள் தோன்றினாலும் அதை வெற்றி கொள்ளும் திறன் உண்டாகும்.

அரசியல் துறையினர் செயல்களை செம்மையுற திருத்தமாகச் செய்வீர்கள். சூரியன் பத்தாமிடத்தில் உலா வருகிறார். உங்களுக்கு அற்புதமான நல்ல பலன்கள் கிட்டும். வசதிகள் ஓங்கும். புதிய சொத்துகள் சேரும். வெற்றிகளைச் சுவைக்கலாம்.

மாணவர்களுக்கு கோபத்தைக் குறைத்து நிதானத்தைக் கடைபிடிப்பது முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும். பாடங்களை நன்கு படித்து பாராட்டு பெறுவீர்கள்.

அவிட்டம் 3, 4 பாதம்:

இந்த மாதம் மற்றவர்களுக்கு ஆலோசனை கூறும் நிலை உருவாகலாம். ஆடை, ஆபரணம் வாங்குவதால் செலவு உண்டாகும். தொழில் வியாபாரம் தொடர்பான செலவுகள் அதிகரிக்கும். எதிலும் ஒரு முறைக்கு மறுமுறை யோசித்து முடிவெடுப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. இல்லையெனில் பலரையும் விரோதித்துக்கொள்ள வேண்டி இருக்கும். வரவேண்டிய பணம் வந்து சேரும்.

சதயம்:
இந்த மாதம் குடும்பத்தில் இருப்பவர்கள் உங்கள் யோசனையைக் கேட்டு நடந்துகொள்வது மனதுக்கு திருப்தியைத் தரும். கணவன் மனைவிக்கிடையே இருக்கும் அன்பு நீடிக்கும். பிள்ளைகளுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொடுத்து மகிழ்வீர்கள். விருந்தினர் வருகை இருக்கும். உங்களது ஆலோசனையைக் கேட்டு அதன்படி சிலர் நடந்து காரிய வெற்றி அடைவார்கள்

பூரட்டாதி 1, 2, 3 பாதம்:

இந்த மாதம் தேவையான பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். மாணவர்கள் வீண் அலைச்சலை குறைத்துக் கொண்டு கல்வியில் கவனம் செலுத்துவது நன்மை தரும். மனநிம்மதி உண்டாகும்.எதிலும் நேரிடையாக ஈடுபடாமல் மறைமுகமாக காரியம் சாதித்துக் கொள்வீர்கள். மனதில் இருந்த கவலை நீங்கி தைரியம் உண்டாகும். எதிலும் லாபம் உண்டாகும். எல்லா நன்மையும் உண்டாகி உடல் ஆரோக்கியம் பெறும். வாக்கு வன்மையால் எந்தக் காரியத்தையும் சுலபமாக செய்து முடிப்பீர்கள்.

பரிகாரம்: ஆஞ்சநேய கவசத்தை படித்து வருவதுடன், ஆதரவற்றோர் இல்லங்களுக்குச் சென்று தொண்டு செய்து வாருங்கள். மனக் குழப்பங்கள் நீங்கும். காரியம் உண்டாகும். தடைபட்ட காரியங்கள் நன்கு நடந்து முடியும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி

சந்திராஷ்டம தினங்கள்: 5, 6

அதிர்ஷ்ட தினங்கள்: 26, 27

************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

தவறவிடாதீர்!கும்ப ராசி அன்பர்களே!  2021 ஜனவரி மாத ராசிபலன்கள்; சிக்கல்கள் தீரும்; எதிர்பார்த்த பண வரவு; கடன் சுமை குறையும்!கும்பம்கும்ப ராசிகும்ப ராசி பலன்கள்ஜனவரி மாத பலன்கள்ஜனவரி மாத ராசிபலன்கள்கும்ப ராசிக்கான ஜனவரி மாத பலன்கள்பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்KumbumKumba rasiJanuary month palangalJanuary month rasipalangalJanuary month rasipalangal - kumba rasi

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x