நவம்பர் மாத பலன்கள் ; கும்ப ராசி அன்பர்களே! காரிய தாமதம்; கடன் பிரச்சினை குறையும்; நிதானம் தேவை; தைரியம் பிறக்கும்; லாபம் உண்டு! 

நவம்பர் மாத பலன்கள் ; கும்ப ராசி அன்பர்களே! காரிய தாமதம்; கடன் பிரச்சினை குறையும்; நிதானம் தேவை; தைரியம் பிறக்கும்; லாபம் உண்டு! 
Updated on
2 min read

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

கும்பம்

(அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்)

கிரகநிலை:

தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய்(வ) - தைரிய ஸ்தானத்தில் சந்திரன் - சுக ஸ்தானத்தில் ராஹூ - அஷ்டம ஸ்தானத்தில் புதன், சுக்ரன் - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன் - தொழில் ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் குரு, சனி என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரகமாற்றங்கள்:
04-11-2020 அன்று பகல் 11.07 மணிக்கு புதன் பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

15-11-2020 அன்று இரவு 9.48 மணிக்கு குரு பகவான் விரய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

16-11-2020 அன்று பகல் 2.42 மணிக்கு சூர்ய பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

17-11-2020 அன்று இரவு 8.09 மணிக்கு சுக்கிர பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

25-11-2020 அன்று காலை 8.39 மணிக்கு புதன் பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள் :

எந்தக் காரியத்தையும் தீர ஆலோசித்து அதில் ஈடுபடும் குணம் உடைய கும்ப ராசியினரே!

இந்த காலகட்டத்தில் எல்லாக் காரியங்களும் முன்னேற்றமாக நடக்கும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். சுக்கிரன் சஞ்சாரம் புதிய தொடர்புகளை ஏற்படுத்தும். திறமை வெளிப்படும். பல வகையிலும் முன்னேற்றம் உண்டாகும். செவ்வாய் சஞ்சாரத்தால் சொத்து தொடர்பான விஷயங்களில் இழுபறியான நிலை காணப்படும். இடமாற்றம் உண்டாகும். சுபச் செலவுகள் ஏற்படும்.

தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் தாமதப்போக்கு காணப்படும். செலவும் அதிகரிக்கும் தேவையான பணவசதி கிடைக்கும். விரிவாக்கம் தொடர்பான முயற்சிகள் இழுபறியான நிலையில் இருந்து பின்னர் முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பயணம் செல்ல வேண்டி இருக்கும். சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு, இடமாற்றம் தாமதப்படலாம். எந்தவொரு விஷயத்திலும் ஈடுபடும் முன்பு தயக்கம் ஏற்பட்டு பின்னர் தெளிவு உண்டாகும்.

குடும்பத்தில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். கணவன் மனைவிக்கிடையே எதையும் பேசி தெளிவுபடுத்திக் கொள்வது நன்மை தரும். குழந்தைகளுக்கான பொருட்களை வாங்குவீர்கள்.

பெண்களுக்கு இழுபறியாக இருந்த காரியங்கள் முடிவுக்குவரும். புதிய தொடர்புகளால் லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். இடமாற்றம் ஏற்படலாம்.

கலைத்துறையினர் பொறுப்புகள் அதிகரிக்கும். உற்சாகமாக எதையும் கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். விருந்து கேளிக்கைகளில் பங்கு கொள்வீர்கள். கடன் பிரச்சினை குறையும். வீண் அலைச்சல் வீண் பயம் குறையும். அடுத்தவர் செய்யும் இடையூறுகளையும் உங்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் சாமர்த்தியத்தைப் பெறுவீர்கள்.

அரசியல்துறையினருக்கு எடுத்த காரியத்தை எப்படியும் செய்து முடித்து விடுவீர்கள். வீண் செலவு உண்டாக்கும். வேலை காரணமாக வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம். திட்டமிடுவதில் பின்னடைவு ஏற்படும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். பெரியோர் நேசம் கிடைக்கும். வாகன யோகம் உண்டாகும். ஆன்மிகத் தலங்களுக்கு சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும். மாணவர்களுக்கு கல்விக்கான செலவு உண்டாகும். திறமை வெளிப்படும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். அதன் மூலம் நன்மை ஏற்படும்.

அவிட்டம் 3, 4 பாதம்:

இந்த மாதம் மற்றவர்களுக்கு ஆலோசனை கூறும் நிலை உருவாகலாம். ஆடை, ஆபரணம் வாங்குவதால் செலவு உண்டாகும். தொழில் வியாபாரம் தொடர்பான செலவுகள் அதிகரிக்கும். எதிலும் ஒரு முறைக்கு மறுமுறை யோசித்து முடிவெடுப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. இல்லையெனில் பலரையும் விரோதித்துக்கொள்ள வேண்டி இருக்கும். வரவேண்டிய பணம் வந்து சேரும்.

சதயம்:

இந்த மாதம் குடும்பத்தில் இருப்பவர்கள் உங்கள் யோசனையைக் கேட்டு நடந்துகொள்வது மனதுக்குத் திருப்தியைத் தரும். கணவன் மனைவிக்கிடையே இருக்கும் அன்பு நீடிக்கும். பிள்ளைகளுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொடுத்து மகிழ்வீர்கள். விருந்தினர் வருகை இருக்கும். உங்களது ஆலோசனையைக் கேட்டு அதன்படி சிலர் நடந்து காரிய வெற்றி அடைவார்கள்.

பூரட்டாதி 1, 2, 3 பாதம்:

இந்த மாதம் தேவையானப் பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். மாணவர்கள் வீண் அலைச்சலைக் குறைத்துக் கொண்டு கல்வியில் கவனம் செலுத்துவது நன்மை தரும். மனநிம்மதி உண்டாகும்.எதிலும் நேரிடையாக ஈடுபடாமல் மறைமுகமாக காரியம் சாதித்துக் கொள்வீர்கள். மனதில் இருந்த கவலை நீங்கி தைரியம் உண்டாகும். எதிலும் லாபம் உண்டாகும். எல்லா நன்மையும் உண்டாகி உடல் ஆரோக்கியம் பெறும். வாக்கு வன்மையால் எந்தக் காரியத்தையும் சுலபமாகச் செய்து முடிப்பீர்கள்.

பரிகாரம்: சனிக்கிழமையில் ஆஞ்சநேயரை வழிபட்டு வருவதால் மனதில் துணிச்சல் உண்டாகும். எதிலும் வெற்றி கிடைக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, சனி

சந்திராஷ்டம தினங்கள்: 11, 12, 13

அதிர்ஷ்ட தினங்கள்: 5, 6
~~~~~~~~~~~~~~~~~

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in