

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
மகரம்
(உத்திராடம் 2, 3, 4 பாதங்கள் திருவோணம் அவிட்டம் 1,2 பாதங்கள்)
கிரகநிலை:
தைரிய ஸ்தானத்தில் செவ்வாய்(வ) - சுக ஸ்தானத்தில் சந்திரன் - பஞ்சம ஸ்தானத்தில் ராஹூ - பாக்கிய ஸ்தானத்தில் புதன், சுக்ரன் - தொழில் ஸ்தானத்தில் சூர்யன் - லாப ஸ்தானத்தில் கேது - அயன, சயன, போக ஸ்தானத்தில் குரு, சனி என கிரகங்கள் வலம் வருகின்றன.
கிரகமாற்றங்கள்:
04-11-2020 அன்று பகல் 11.07 மணிக்கு புதன் பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
15-11-2020 அன்று இரவு 9.48 மணிக்கு குரு பகவான் ராசிக்கு மாறுகிறார்.
16-11-2020 அன்று பகல் 2.42 மணிக்கு சூர்ய பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
17-11-2020 அன்று இரவு 8.09 மணிக்கு சுக்கிர பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
25-11-2020 அன்று காலை 8.39 மணிக்கு புதன் பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்:
பொதுக் காரியங்களில் விருப்பம் உள்ள மகர ராசியினரே!
நீங்கள் திறமைசாலிகளாகவும் இருப்பீர்கள். இந்த மாதம் அறிவுத் திறன் கூடும். இனிமையான பேச்சின் மூலம் பலரது உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். சுக்கிரன் சஞ்சாரத்தால் செல்வம் சேரும். அரசு தொடர்பான பணிகளில் சாதகமான போக்கு காணப்படும். எதிர்ப்புகள் அகலும். உங்கள் செயல்களுக்கு இருந்த தடை நீங்கும்.
தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன்கள் கிடைக்கும். பல வகையான முன்னேற்றங்களும் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலாகும். தேவையான பண உதவியும் கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதையும் சாதிக்கும் திறமையும் சாமர்த்தியமும் உண்டாகும்.
உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தேவையற்ற இடமாற்றம் உண்டாகலாம். மற்றவர்களுக்காக பரிந்து பேசும்போதும் அவர்களுக்கு உதவிகள் செய்யும்போதும் கவனமாக இருப்பது நல்லது. வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் ஏற்படும்.
பெண்களுக்கு அறிவுத் திறமை அதிகரிக்கும். இனிமையான பேச்சின் மூலம் எதிலும் வெற்றி கிடைக்கும். தேவையான பண உதவியும் எதிர்பார்க்கலாம்.
கலைத்துறையினர் அதீத கவனத்துடன் செயல்படுவது நல்லது. உங்களுக்கு பதவி உயர்வு மற்றும் வெற்றியைத் தேடித்தரும். எதிர்பார்த்த வாய்ப்புகள் வந்து சேரும். சிலருக்கு நெடுநாளைய ஆசைகள் நிறைவேறும். லட்சியங்கள் கைகூடும். மனதிற்கு நெகிழ்ச்சியான சம்பவங்கள் நடக்கும். நிதானம் தேவை.
அரசியல்துறையினருக்கு கவனம் தேவை. லாபம் உண்டாகும். கடின உழைப்பு உங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும். சிறு சிக்கல்கள் ஏற்பட்டு மறையும். கவனத்துடன் செயல்பட்டால் சிக்கல்களைத் தவிர்க்கலாம். சின்னச் சின்ன செலவுகளைச் சந்திக்க நேரிடலாம். உழைப்பிற்கான ஊதியம் சற்று குறைவாக கிடைக்கலாம். மன தைரியத்தால் வெற்றி காண்பீர்கள்.
மாணவர்கள் திறமையாக செயல்பட்டு பாராட்டுகள் கிடைக்கப் பெறுவீர்கள். கல்வியில் முன்னேற்றம் காணப்படும்.
உத்திராடம் 2, 3, 4 ம் பாதம்:
இந்த மாதம், தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பது நல்லது. எதிர்பாராத செல்வச் சேர்க்கை உண்டாகும். அதேநேரத்தில் மனதில் வீண்கவலையும் ஏற்படலாம். எதிலும் ஒரு வேகம் உண்டாகும். அடுத்தவர் விஷயங்களில் தலையிடும்போது கவனம் தேவை. உல்லாசப் பயணங்கள் செல்ல நேரலாம். தொழில் வியாபாரத்தில் இருந்த மெத்தனப் போக்கு நீங்கி வேகம் பிடிக்கும். தொழில் விஷயமாக வெளியூர் செல்ல நேரலாம். எதிர்பார்த்த ஆர்டர் கிடைக்க தாமதம் ஏற்படலாம்.
திருவோணம்:
இந்த மாதம் உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பொறுப்புகள் கிடைக்கப் பெற்று அதனால் நன்மை அடைவார்கள். குடும்பத்தில் திருப்தியான நிலை காணப்படும். வீட்டிற்குத் தேவையான பொருள் வாங்குவதால் செலவு ஏற்படலாம். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கி நெருக்கம் ஏற்படும். பிள்ளைகளுடன் மனதுக்கு பிடித்த இடத்திற்கு சென்று பொழுதைக் கழிப்பீர்கள்.
அவிட்டம் 1,2 பாதம்:
இந்த மாதம் எதிர்பார்த்த செல்வச் சேர்க்கை உண்டாகும். மனதில் வீண் கவலை ஏற்படலாம். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு கல்வியை பற்றிய மனக்கவலை உண்டாகும். பயணங்கள் மகிழ்ச்சிகரமாக இருக்கும். வீண் அலைச்சல் காரியத்தடை ஏற்படலாம். கவனம் தேவை. எதிர்ப்புகள் விலகும். எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். மனதில் நிம்மதி உண்டாகும். உதவி என்று வருபவர்களுக்கு தயங்காமல் உதவிகளை செய்வீர்கள். இரவில் நல்ல உறக்கம் வரும்.
பரிகாரம்: சனிக்கிழமைகளில் விநாயக பெருமானை தீபம் ஏற்றி வழிபட்டு வாருங்கள். காரியத் தடைகள் நீங்கும். எதிலும் நன்மை உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, சனி
சந்திராஷ்டம தினங்கள்: 9, 10
அதிர்ஷ்ட தினங்கள்: 2, 3, 4, 30
~~~~~~~~~~~~~~~~~~
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |