நவம்பர் மாத பலன்கள் ; விருச்சிக ராசி அன்பர்களே! காரியத்தில் வெற்றி; பூமி லாபம்; விருந்தினர் வருகை; கூடுதல் கவனம் தேவை! 

நவம்பர் மாத பலன்கள் ; விருச்சிக ராசி அன்பர்களே! காரியத்தில் வெற்றி; பூமி லாபம்; விருந்தினர் வருகை; கூடுதல் கவனம் தேவை! 
Updated on
2 min read

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

விருச்சிகம்

(விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)

கிரகநிலை:

ராசியில் கேது - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் குரு, சனி - பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய்(வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் சந்திரன் - களத்திர ஸ்தானத்தில் ராஹு - லாப ஸ்தானத்தில் புதன், சுக்ரன் - அயன சயன போக ஸ்தானத்தில் சூர்யன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரகமாற்றங்கள்:

04-11-2020 அன்று பகல் 11.07 மணிக்கு புதன் பகவான் விரய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

15-11-2020 அன்று இரவு 9.48 மணிக்கு குரு பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

16-11-2020 அன்று பகல் 2.42 மணிக்கு சூர்ய பகவான் ராசிக்கு மாறுகிறார்.

17-11-2020 அன்று இரவு 8.09 மணிக்கு சுக்கிர பகவான் விரய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

25-11-2020 அன்று காலை 8.39 மணிக்கு புதன் பகவான் ராசிக்கு மாறுகிறார்.

பலன்கள்:

மற்றவர்களை அறிந்து அவர்களுக்கு ஏற்ப நடந்து கொண்டு காரியம் சாதிக்கும் திறமை உடைய விருச்சிக ராசியினரே!

இந்த மாதம் உங்களின் சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரியவெற்றி உண்டாகும். எந்தவொரு வேலையிலும் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். உங்களுடன் பக்கபலமாக ஒருவர் இருந்து தேவையான உதவிகளைச் செய்வார். நண்பர்கள் மூலம் புதிய வசதிகள் கிடைக்கப் பெறுவீர்கள்.

தொழில், வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறும். புதிய ஆர்டர்கள் வருவதில் இருந்த தடைகள் விலகும். தேவையான பணவசதி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். புதிய பொறுப்புகளும் அதனால் வருமானமும் இருக்கும். எதிர்ப்புகள் அகலும்.

குடும்பத்தில் சுப காரியம் நடக்கும். பூமி மூலம் லாபம் கிடைக்கும். சகோதரர்களால் நன்மை உண்டாகும். வாழ்க்கைத் துணைக்கு தேவையான வசதிகள் செய்து தருவீர்கள். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். ராசியாதிபதி செவ்வாய் சஞ்சாரம் எல்லா வகையிலும் நன்மையையும் மகிழ்ச்சியையும் தரும்.
பெண்களுக்கு திறமையான பேச்சின் மூலம் காரியவெற்றி உண்டாகும். எதிர்பார்த்த பணவரவு இருக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும்.

கலைத்துறையினர் கிடைத்த வாய்ப்பை தவறவிடாமல் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம். எதிலும் சாதகமான பலன் கிடைக்கும். பயணங்கள் செல்ல நேரிடலாம். மனதிருப்தியுடன் செயலாற்றுவீர்கள். புத்திசாதுர்யம் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதன் மூலம் மற்றவர்களிடம் மதிப்பு கூடும்.

அரசியல்துறையினருக்கு பாராட்டு கிடைக்கும். மனக்கவலை ஏற்படும். உடல் சோர்வு உண்டாகும். ஆன்மிக நாட்டமும், மன தைரியமும் உங்களுக்கு உற்சாகத்தைக் கொடுக்கும். கட்சியில் முன்னேற்றம் காண புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள்.

மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். மனமகிழ்ச்சி உண்டாகும். சிறப்பாக செயல்படுவீர்கள்.

விசாகம் 4ம் பாதம்:

உத்தியோகத்தில் இருப்பவர்கள் இந்த மாதம் நினைத்ததை சாதிக்க வேண்டும் என்ற வேகத்தில் பணிபுரிவார்கள். சிலருக்கு புதிய பதவி அல்லது புதிய பொறுப்புகள் கிடைக்கப் பெறுவார்கள். சிலர் குடும்பத்தை விட்டு வெளியே சென்று தங்க நேரிடலாம். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி நீடிக்கும். விருந்தினர்கள் வருகை இருக்கும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். திருமண முயற்சிகள் சாதகமான பலன்களைத் தரும். பிள்ளைகளுடன் சந்தோஷமாக பொழுதைக் கழிப்பீர்கள்.

அனுஷம்:

இந்த மாதம் அடுத்தவர்களின் வேலைக்காக வீணாக அலைய நேரிடும். மனோ தைரியம் அதிகரிக்கும். எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற முழுமூச்சாக பாடுபடுவீர்கள். புதிய நட்பு கிடைப்பதுடன் அவர்களது ஆலோசனையும் வெற்றிக்கு உதவும். ஆனால் எதிலும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.

கேட்டை:
இந்த மாதம் எதிர்பார்த்த காரிய அனுகூலம் உண்டாகும். கொடுக்கல் வாங்கல் சீர்படும். புதுமையான சிந்தனைகளும் சிறந்த கற்பனையாற்றலும் ஏற்படும். எனினும் எதிலும் கவனமாக இருப்பது நல்லது. திடீரென்று கோபம் வரும். ஏதாவது ஒருவகையில் அடுத்தவரிடம் வீண்பேச்சு கேட்க நேரலாம், கவனம் தேவை. மற்றவர்கள் செய்கைகளால் மனவருத்தம் உண்டாகலாம். நீண்டநாள் இழுபறியாக இருந்து வந்த பிரச்சினை முடிவுக்கு வரும்.

பரிகாரம்: செவ்வாய்க் கிழமை விரதம் இருந்து நவக்கிரகத்தில் செவ்வாய் பகவானுக்கு தீபம் ஏற்றி வழிபட எல்லா நன்மையும் உண்டாகும். உடல் ஆரோக்கியம் கூடும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்

சந்திராஷ்டம தினங்கள்: 5, 6

அதிர்ஷ்ட தினங்கள்: 25, 26

~~~~~~~~~~~~~~~~~~~

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in