Published : 25 May 2020 18:48 pm

Updated : 25 May 2020 18:49 pm

 

Published : 25 May 2020 06:48 PM
Last Updated : 25 May 2020 06:49 PM

மகரம், கும்பம், மீனம் ; ஜூன் மாத பலன்கள்

june-palangal

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்


மகரம்:
(உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2-ம் பாதம்)


இந்த மாதம் நீண்டகாலமாக காத்திருந்தவர்களுக்கு திருமணம் கைகூடும்.


குழந்தைபாக்கியமும் கிடைக்கும். நீங்கள் எதிர்பார்த்திருந்தவர்கள் உங்களை வந்து சேருவார்கள். பூர்வீகச் சொத்துக்களில் இருந்த பிரச்சினைகள் தீரும். பிரச்சினை கொடுத்தவர்கள் தானாக விலகி உங்களுக்கு வர வேண்டியதை கொடுக்கும் சூழல் உருவாகும்.


குடும்பத்தில் நிம்மதி இருக்கும். பணவரவு சிறப்பாக இருக்கும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். உறவினர்களுடன் கேளிக்கை விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சந்தோஷம் அடைவீர்கள்.


திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் இனிதே நடைபெறும். கோயில் சார்ந்த பணிகளில் குடும்பத்துடன் கலந்து கொள்வீர்கள். மனதில் இருந்த குழப்பங்கள் மாறி நிம்மதி இருக்கும்.


தொழில் - வியாபாரம் நினைத்ததை விட சிறப்பாக இருக்கும். லாபமும் இரட்டிப்பாகவே கிடைக்கும். பெண்களால் உங்கள் தொழிலில் முன்னேற்றம் உண்டு. புதிய முயற்சிகளை உங்கள் குடும்பத்துப் பெண்களைக் கொண்டு தொடங்குவது சிறப்பாக இருக்கும்.


உத்தியோகஸ்தர்களுக்கு சில இடர்பாடுகள் இருந்தாலும் அவை உங்கள் சாமர்த்தியத்தால் அகலும். எனவே கவலை இல்லாமல் துணிவுடன் செயல்படலாம்.
பெண்களுக்கு வேலை செய்யும் இடத்தில் சலுகைகள் கிடைக்கும். அவற்றை உரிய முறையில் பயன்படுத்தினால் உங்கள் முன்னேற்றத்திற்கு உதவும்.
மாணவர்களுக்கு இதுவரை இருந்த சோம்பல், உடல் உபாதைகள் போன்றவை மாறி சுறு சுறுப்பாக காணப்படுவீர்கள். இதனால் படிப்பில் சிறந்து விளங்குவீர்கள்.
கலைத்துறையில் இருப்பவர்கள் ஏகப்பட்ட வாய்ப்புகள் வந்து சேரும். எதிர்பார்த்த ஏற்றங்கள் கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் மூலமாக அனைத்து விதமான நன்மைகளும் கிடைக்கும்.


அரசியல்வாதிகள் அரசு சார்ந்த விஷயங்களில் கையெழுத்து இடும்பொழுது கவனம் தேவை. வீடு, மனை வாகன விஷயங்களில் ஒப்பந்தங்களில் நல்ல முடிவுகள் ஏற்படும். மற்ற விஷயங்களில் சாதகமான சூழ்நிலை நிலவும். முக்கிய முடிவுகள் வெற்றியைத் தரும்.


உத்திராடம் 2, 3, 4ம் பாதம்:
இந்தமாதம் உங்கள் நம்பிக்கைக்கு உகந்த ஆளாக ஒருவரை நீங்கள் தேர்வு செய்து அவருடன் மனம் விட்டு பேச முயலுவீர்கள். தொழில் புரிவோருக்கு இருந்து வந்த மந்த நிலை மறையும். படிப்படியாக லாபம் அதிகரித்துக் கொண்டே இருக்கும்.


திருவோணம்:
இந்த மாதம் புதிய தொழில் தொடங்குவதற்கான வேலைகளுக்கு அரசாங்க அனுகூலம் கிடைக்கும். சிறு தொழில் நடத்துபவர்களுக்கு அரசிடம் இருந்து கிடைக்க வேண்டிய உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள்.


அவிட்டம் 1,2ம் பாதம்:
இந்த மாதம் நீங்கள் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற சிறிது போராட வேண்டி வரலாம். தொழில் புரியும் பெண்கள் நல்ல ஆதாயத்தை எதிர்பார்க்கலாம். சேமிப்புகள் அதிகரிக்கும். ஓய்வில்லாமல் உழைத்தாலும் உங்களுக்கு குடும்பத்தில் கிடைக்க வேண்டிய ஆறுதல்கள் கிடைக்கும்.

சந்திராஷ்டம தினங்கள்: 26, 27
அதிர்ஷ்ட தினங்கள்: 19, 20
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய் - புதன்
பரிகாரம்: சனிபகவானுக்கு எள் சாதம் நைவேத்தியம் செய்து அனைவருக்கும் விநியோகம் செய்யலாம். தோஷங்கள் விலகும். தடைப்பட்ட காரியங்கள் அனைத்தும் ஜெயமாகும்.
**************************************************************


கும்பம்:
(அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதம்)


இந்த மாதம் வயதானவர்களின் உடல்நிலையில் முன்னேற்றம் இருக்கும்.


வீட்டில் எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் பெரியவர்களின் ஆலோசனை பெற்று நடந்து கொள்வது நல்லது. பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அனுபவமிக்கவர்களின் ஆலோசனை படி நடந்து கொண்டால் சில சிக்கல்களில் இருந்து விடுபடுவீர்கள்.


குடும்பத்தில் கணவன் - மனைவி உறவு பலப்படும். உங்களுக்குள் இருந்த மனக்கவலைகள் நீங்கி மகிழ்ச்சி பிறக்கும். பிள்ளைகள் உங்கள் சொல்படி நடந்து கொள்வார்கள்.
பிள்ளைகளுக்கு கல்விக்குத் தேவையானதை செய்து கொடுப்பதன் மூலம் அவர்களின் அன்பைப் பெறுவீர்கள். மனதில் சிறு குழப்பங்கள் அவ்வப்போது ஏற்படலாம். அவற்றை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.


தொழில் - வியாபாரத்தில் சிறிது கவனமுடன் செயல்படுவது நல்லது. வாக்கு கொடுக்கும் போது கவனம் தேவை. போதிய இருப்பு உள்ளதா என்பதை நீங்களே நேரடியாகப் பார்த்து விட்டு வாக்கு கொடுப்பது நல்லது. புதிய ஆட்களின் பேச்சைக் கேட்கும் போதும் கவனம் தேவை.


உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு. உங்கள் மேற்பார்வையிலேயே அனைத்து வேலைகளையும் செய்து வாருங்கள். சில ஏற்றத் தாழ்வுகள் வேலையில் வந்து கொண்டு தான் இருக்கும். அதைப்பற்றி கவலையில்லாமல் உழைத்துக் கொண்டிருப்பீர்கள்.


பெண்கள் யாரிடமும் நம்பி பணத்தை கொடுக்க வேண்டாம். உங்கள் தனிப்பட்ட வேலைகளை நீங்களே செய்து வாருங்கள்.


மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். மேற்கல்வி பயில விரும்புவோர் படிப்பைத் தொடரலாம்.


கலைஞர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடலாம். வெற்றி வாய்ப்புகள் கடனிலிருந்து விடுபட வாய்ப்புகள் கிட்டும். நற்காரியங்கள் அனைத்துக்கும் அனுபவசாலிகளின் ஆலோசனைப் படி நடந்து கொள்ளுங்கள்.


அரசியல்வாதிகள் முக்கிய முடிவுகளை மூத்த அரசியல்வாதிகளின் ஆலோசனைப்படி எடுப்பது உத்தமம். சங்கடங்கள் வந்து விலகும். நேர்மையாக நடந்து நல்ல பெயரை எடுப்பீர்கள். சொத்து, பத்திர விவகாரங்களில் படித்துப் பார்த்து பின் கையெழுத்திடவும்.


அவிட்டம் 3, 4 பாதம்:
இந்த மாதம் குடும்பப் பிரச்சினைகளை கட்டுக்குள் வைத்திருப்பீர்கள். கலைத்துறையினருக்குப் புதிய வாய்ப்புகள் வந்து சேரும். வழக்கு, விவகாரங்களில் சாதகமான சூழ்நிலை இருக்கும்.


சதயம்:
இந்த மாதம் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் இப்பொழுது நல்ல முன்னேற்றத்தைக் காண முடியும். ஏற்கெனவே இருந்து வந்த பிரச்சினைகளிலிருந்து விடுபடுவீர்கள். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும்.


பூரட்டாதி 1, 2, 3ம் பாதம்:
இந்த மாதம் அரசியல்வாதிகள் மூத்த அறிஞர்களுடன் வாக்குவாதம் ஏற்படலாம். நீங்கள் நினைத்ததை நிறைவேற்றிக் கொள்ள வாய்ப்புகள் உண்டு. தேவையில்லாத இடங்களில் வாக்கு கொடுத்து மாட்டிக் கொள்ள வேண்டாம்.

சந்திராஷ்டம தினங்கள்: 1, 2, 28, 29
அதிர்ஷ்ட தினங்கள்: 21, 22, 23
அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன் - வெள்ளி
பரிகாரம்: சனிக்கிழமை தோறும் காகத்திற்கு அன்னமிட்டு வழிபடவும். முன்னோர் ஆசி கிடைக்கும். சந்ததி சிறக்க வாழ்வீர்கள்.

*************************************************************************
மீனம்:
(பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)


இந்த மாதம் திருமணம் கைகூடும் காலம். கணவன் - மனைவிக்கிடையே இருந்து வந்த சில கருத்து மோதல்கள் முடிவுக்கு வரும். மற்றவர்களிடம் பேசும்போது கவனமுடன் வார்த்தைகளைப் பிரயோகப்படுத்துவது நல்லது. வர வேண்டிய பணம் வந்து சேரும். உடல் நிலையில் முன்னேற்றம் இருக்கும்.


குடும்பத்தில் அடிக்கடி பூசல்கள் வந்து போகும். பூர்வீகச் சொத்துகள் தொடர்பான வழக்குகள் தள்ளிப் போகலாம். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கப் பெறுவீர்கள். உடல் உபாதைகள் வந்து அடிக்கடி தொல்லைகள் தரலாம். முன்னோர் வழிபாடு செய்யுங்கள். நீண்ட நாட்களாக தடைப்பட்டிருந்த விஷயங்கள் இப்போது ஓரளவிற்கு நடைபெறுவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன.


தொழிலில் உன்னத நிலைக்கு உயருவீர்கள். அவ்வப்போது தொழிலில்பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அதை திறம்படச் சமாளிக்கக் கூடிய ஆற்றல் உங்களுக்கு உண்டு. தொழிலாளர்கள் ஒத்துழைப்பு தருவதால் உங்களுக்கு தொழிலைப் பற்றிய கவலை வேண்டாம்.


உத்தியோகஸ்தர்கள் தங்களது வேலைகளில் ஆர்வமுடன் செயல்படுவார்கள். இதுவரை இருந்து வந்த பிரச்சினைகளை நீங்களே உங்கள் சாமர்த்தியத்தால் சமாளித்து விடுவீர்கள்.


பெண்களுக்கு யோகமான காலகட்டம். விரும்பிய பொருட்கள் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரும்பிய மணவாளன் கிடைப்பார்.


மாணவர்கள் உடல்நிலையில் கவனம் செலுத்தவும். உஷ்ணம் சம்பந்தமான பிரச்சினைகள் தலை தூக்கலாம். கவனம் தேவை.


கலைஞர்கள் சக நடிகர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பெரியோரின் ஆசி கிட்டும். மூத்த கலைஞர்களின் பாராட்டும் அன்பும் உங்களைத் திக்குமுக்காட வைக்கும். பிறமொழிப் படங்களில் ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறலாம்.


அரசியல்வாதிகள் மூத்த அரசியல்வாதிகள் ஆலோசனையின்படி நடந்துகொண்டால் பிரச்சினைகளை சுலபமாக சமாளிக்கலாம். நல்ல எண்ணங்களுக்கு எப்பொழுதுமே வலிமை அதிகம். ஆகவே, நீங்கள் நல்லதையே எண்ணி நல்லது செய்யுங்கள்.


பூரட்டாதி 4ம் பாதம்:
இந்த மாதம் உங்களுக்கு வேண்டாத சிலரால் பிரச்சினைகளை சந்திக்க வாய்ப்பு உண்டு. எல்லா இடங்களிலும் கவனம் தேவை. மாணவர்கள் கல்வியில் சிறப்பான முன்னேற்றத்தை அடையலாம்.


உத்திரட்டாதி:
இந்த மாதம் கடந்த சில நாட்களாக இருந்த மந்த நிலை அடியோடு மாறும். மருத்துவச் செலவு குறையும். ஆசிரியர்களிடம் நல்ல பெயரைப் பெறுவீர்கள்.


ரேவதி:
இந்த மாதம் பிரச்சினைகளை முறியடிக்கும் வல்லமை உங்களை வந்து சேரும். மனதில் நிம்மதியும் ஆனந்தமும் ஏற்படும். உங்கள் முயற்சி அனைத்தும் வெற்றி பெறும். புதிய வீடு, மனை வாங்குவதில் தடைகள் ஏற்படலாம்.

சந்திராஷ்டம தினங்கள்: 3, 4, 30
அதிர்ஷ்ட தினங்கள்: 24, 25,
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள் - செவ்வாய்
பரிகாரம்; நவகிரகத்தில் உள்ள குருபகவானுக்கு நெய் தீபம் ஏற்றுங்கள். இறையருளும் குருவருளும் கிடைக்கப் பெறுவீர்கள்.
**************************************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!


மகரம்கும்பம்மீனம் ; ஜூன் மாத பலன்கள்பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author