Published : 25 May 2020 16:35 pm

Updated : 25 May 2020 16:36 pm

 

Published : 25 May 2020 04:35 PM
Last Updated : 25 May 2020 04:36 PM

மேஷம், ரிஷபம், மிதுனம் ; ஜூன் மாத பலன்கள்

june-palangal


- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்


மேஷம்:

(அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)


இந்த மாதம் உடல் நலம் சீராகும். நீண்ட நாட்களாக தொல்லை கொடுத்து வந்த உடல் பாதிப்புகள் அகலும்.


மனதில் உற்சாகம் பிறக்கும். எதையும் சாதிக்கும் துணிவு உண்டாகும். புதிய முயற்சிகள் செய்ய முற்படுவீர்கள். பல வகையில், லாபம் தரக்கூடிய திட்டங்களை யோசித்து செயல்படுத்துவீர்கள்.


குடும்பத்தில் பெரியோர்களின் நல்லாசியும் ஆதரவும் கிடைக்கப் பெறுவீர்கள். சொந்தங்கள் வீட்டிற்கு வருவதற்கு வாய்ப்பு உண்டு. அவர்களின் வருகை மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். நீண்ட நாட்களாக வாங்க இருந்த பொருட்களை வாங்கத் திட்டமிடுவீர்கள். எல்லோரிடமும் விட்டுக் கொடுத்துப் பேசி, அனைவரையும் தங்கள் பக்கம் வைத்திருக்க முயற்சி செய்வீர்கள். சொத்து விவகாரங்களில் மற்றவர்களின் பேச்சைக் கேட்க வேண்டாம்.


தொழிலில் எதிர்பார்த்தபடி லாபம் கிடைக்கும். சிறு வியாபாரிகள் உழைப்புக்கேற்றாற்போல் ஆதாயத்தை எதிர்பார்க்க முடியும். சக பங்கு தாரர்களுடன் நல்லிணக்கம் ஏற்படும். கொடுக்கல் வாங்கலில் பிரச்சினை எதுவும் இருக்காது. புதுக் கடன்களை வாங்கி பழைய கடன்களை அடைக்க நேரிடும். .


உத்தியோகத்தில் தேவையில்லாத பிரச்சினைகளில் தலையிடாதீர்கள். சக ஊழியர்களால் பிரச்சினை ஏற்படலாம். இழுபறியாக இருந்த வேலைகளை நீங்களே முன்னின்று முடிக்க வேண்டி வரும். வேலைக்கு விண்ணப்பித்துக் காத்திருக்கும் அன்பர்களுக்கு இப்போது நல்ல செய்தி வரும்.


பெண்கள் பொறுமையாக இருக்க வேண்டியது அவசியம். கணவரை விட்டுப் பிரிந்து சென்றவர்கள் மீண்டும் இணைவார்கள்.


மாணவர்கள் கல்வியில் மேன்மை அடைய கவனமுடன் படிக்க வேண்டியது அவசியம். ஆசிரியர்கள் உறுதுணையாக இருப்பார்கள்.


அரசியல் துறையினருக்கு எதிர்பார்த்த பண உதவி கிடைக்கலாம். மேலிடத்தை அனுசரித்துச் செல்வது நல்லது. எடுத்துக் கொண்ட பணிகளை முடிக்க அலைய வேண்டி இருக்கும். புதிய பொறுப்புகள் சிலருக்கு கிடைக்கலாம்.


கலைத்துறையினருக்கு சகஜநிலையே காணப்படும். நண்பர்கள் மூலம் நல்ல தகவல் வந்து சேரும். சக கலைஞர்களுடன் இருந்து வந்த இடைவெளி குறையும். ஆலோசனை கேட்டு மற்றவர்கள் உங்களை நாடி வருவார்கள். உங்களை விட்டுப் பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேருவார்கள்.


அஸ்வினி:
இந்த மாதம் நல்ல பணப்புழக்கமும் பொருளாதார ஏற்றமும் இருக்கும். காரியத் தடைகள் நீங்கி, அனுகூலம் பிறக்கும். எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் சந்தித்து முறியடிக்கும் வல்லமையைப் பெறலாம்.


பரணி:
இந்த மாதம் வேலையில் உங்கள் தனித்தன்மை வெளிப்படும். எதிரிகளின் தொல்லைகள் அனைத்தும் இருக்கும் இடம் தெரியாமல் போகும். முன்னேற்றம் உண்டு என்பதை உறுதியாகச் சொல்லலாம்.


கார்த்திகை 1 :
இந்த மாதம் குடும்பத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தின் தேவைகள் பூர்த்தியாகும். தூரத்தில் இருக்கும் உறவினரால் நன்மை ஏற்படும். கணவன் மனைவியரிடையே அவ்வப்போது பிரச்சினைகள் வந்து போகும்.

சந்திராஷ்டம தினங்கள்: 5, 6
அதிர்ஷ்ட தினங்கள்: 26, 27
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - புதன்
பரிகாரம்: தினமும் சிவபுராணம் வாசியுங்கள். சிவபெருமானுக்கு வில்வமாலை சாற்றுங்கள். நினைத்த காரியம் யாவும் கைகூடும்.
******************************************************************************************************************


ரிஷபம்:

(கார்த்திகை 2, 3, 4 பாதம், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2-ம் பாதம்)

இந்த மாதம் மிகவும் தெளிவாக முடிவுகளை எடுப்பீர்கள்.


நீங்கள் எடுக்கும் முடிவுகள் மற்றவர்களுக்கும் நன்மை அளிக்கக்கூடியதாக இருக்கும். தெய்வ அனுகூலம் நிறைந்ததாகவும் இருக்கும்.


உங்கள் குடும்பத்தில் பெரியவர்களின் ஆசையை நிறைவேற்றி அவர்களின் மனம் குளிரும்படி நடந்து கொள்ள முற்படுவீர்கள்.


குடும்பத்தில் அவ்வப்போது கணவன் - மனைவிக்கிடையே சிறு சிறு பூசல்கள் வந்து கொண்டிருக்கும். சிலருக்கு அடி வயிற்றுவலி ஏற்படும். எனவே உடல்நலனில் அக்கறை செலுத்தி மருத்துவரிடம் ஆலோசனை செய்வது நல்லது.


புதிய வீடு வாங்க வேண்டும் என்ற எண்ணம் அடிக்கடி வந்து போய்க் கொண்டிருக்கும். பழைய வாகனத்தை கொடுத்துவிட்டு புதிய வாகனம் வாங்குவதற்கு முயற்சி செய்வீர்கள்.


தொழிலில் ஏற்பட்ட தடங்கல்களை களைந்து விடுவீர்கள். தொழில் துறையினர் கடின உழைப்பு மேற்கொள்ள வேண்டியதிருக்கும். அதனால் உடல் சோர்வு ஏற்படும். எதிர்பார்த்த லாபம் கிடைக்க வில்லையே என மனம் கவலைப்படும். புதிய முயற்சிகளை இப்போது ஆரம்பிக்கலாம்.


உத்தியோகஸ்தர்கள் வேலைபார்த்து வரும் இடத்தில் மேலதிகாரியிடமோ, அல்லது சக ஊழியரிடமோ கோபப் பட்டு பேசுவதைத் தவிர்க்கவும். அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது. உங்களுடைய பொருட்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பது நல்லது.


பெண்கள் எதிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டி வரும். எதிர்பாராமல் பயணத்தில் தடை ஏற்படலாம்.


மாணவர்களுக்கு சோம்பேறித்தனம் அதிகமாகலாம். கல்வியில் அதிக கவனம் தேவை.


அரசியல் துறையினருக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கூடுதல் கவனத்துடன் செய்யும் காரியங்கள் சாதகமான பலன்களைத் தரும். மற்றவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.எல்லாவகையிலும் நல்லதே நடக்கும். சூரியன் சஞ்சாரம் அனுகூலமான பலன்களைத் தரும். பணவரத்து அதிகரிக்கும்.


கலைத்துறையினர் திட்டமிட்டு காரியங்களைச் செய்து வெற்றி காண்பீர்கள். மனதில் தைரியம் அதிகரிக்கும். வீட்டிலும் வெளியிலும் உங்களது செயல்களுக்கு ஆதரவு கிடைக்கும்.


கார்த்திகை 2, 3, 4
இந்த மாதம் மதிப்பு மரியாதை சுமாராகவே இருக்கும். தந்தை, தந்தை வழி உறவினர்கள் வழியே பிரச்சினைகள் வரலாம். நண்பர்களிடம் மனக்கிலேசம் ஏற்படும்.


ரோகிணி 1, 2, 3, 4
இந்த மாதம் செய்யும் வேலையில் உங்கள் தனித் தன்மை வெளிப்படும். காரியங்களை செம்மையாக முடித்து வெற்றிகளைப் பெறுவீர்கள். வருமானம் திருப்திகரமாக இருக்கும்.


மிருக சீரிஷம் 1, 2
இந்த மாதம் எதிர்காலத்திற்குத் தேவையான முறையான சேமிப்புகளுக்கான ஏற்பாடுகளை செய்வீர்கள். தொழில், வீடு, நிலம் ஆகியவற்றில் இருந்து வந்த சுணக்க நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்படும்.

சந்திராஷ்டம தினங்கள்: 7, 8
அதிர்ஷ்ட தினங்கள்: 1, 2, 28, 29
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய் - சனி
பரிகாரம்: அருகிலுள்ள சிவாலயத்திற்குச் சென்று பைரவரை வணங்கவும். பைரவ வழிபாடு எதிர்ப்புகளைத் தகர்க்கும். காரியத் தடையை அகற்றும்.
******************************************************************************************************************


மிதுனம்:

(மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ம் பாதம்)


இந்த மாதம் அதிக கஷ்டங்கள் இருக்காது.


உங்கள் பணிகள் அனைத்தும் மிகவும் சுலபமாக நடந்து முடியும். உங்களுக்காக வேலை செய்து கொடுக்க சிலர் முன்வருவார்கள். அவர்களை வைத்து உங்கள் காரியங்களை முடித்துக் கொள்வீர்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் பேச்சைக் கேட்டு நடந்து கொள்வது உங்களுக்கு மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும்.
குடும்பத்தில் வருமானம் அதிகமாக இருந்தாலும் அதற்கேற்ற செலவுகளும் இருக்கும். பிள்ளைகளின் கல்வி விஷயத்திற்காக அதிகமாக செலவு செய்ய நேரிடும். ஆரோக்கியம் நல்லபடியாக இருக்கும்.


குடும்பத்துடன் ஆன்மிக ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். உங்கள் கருத்துக்களைக் கொண்டு குடும்பத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பார்கள். புதிய ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டு.


தொழில் - வியாபாரம் சிறப்பாக இருக்கும். வியாபரத்திற்காக புதிய இடம் வாங்குவீர்கள். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். அவர்களிடம் கருத்துக்களைக் கேட்டு உங்கள் வியாபாரத்தை சிறப்பாக மாற்ற முற்படுவீர்கள்.


உத்யோகஸ்தர்களுக்கு இனிமையான செய்திகள் வந்து சேரும். வேலைப்பளு குறையும். உடன் பணிபுரிவோர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். சிலருக்கு விரும்பிய பணியிடமாற்றம் கிடைக்கும் வாய்ப்பு உண்டு.


பெண்களுக்கு வேலை செய்யும் இடத்தில் இருந்த சிக்கல்கள் மாறும். நண்பர்கள் மூலம் நல்ல செய்திகள் வந்து சேரும்.


மாணவர்கள் பாடத்தில் கவனம் செலுத்தி ஆசிரியரிடம் நல்ல பெயர் வாங்குவீர்கள். மனதில் இருந்த குழப்பங்களை தீர்த்துக் கொள்வீர்கள்.


அரசியல்துறையினருக்கு வீண் அலைச்சலும், மனச்சோர்வும் உண்டாகும். மேலிடத்தின் செயல்கள் நிம்மதியைப் பாதிப்பதாக இருக்கும். வீண் செலவு, சிறு பிரச்சினைகள் உண்டாக நேரலாம். கவனமாக இருப்பது நல்லது.


கலைத்துறையினருக்கு உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். ரசிகர்கள் மத்தியில் மதிப்பு கூடும். வாய்ப்புகள் தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.


மிருகசீரிஷம் 3, 4

இந்த மாதம் எடுத்த காரியம் அனுகூலத்தைக் கொடுக்கும். வீடு, மனை ஆகியவற்றை வாங்கும்போது ஒருமுறைக்கு இருமுறை விசாரித்து வாங்குவது மிகச் சிறப்பானதாக அமையும்.


திருவாதிரை 1, 2, 3, 4
இந்த மாதம் உறவினர்கள் அந்நியோன்யமாக இருப்பார்கள். குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த பிரச்சினைகள் சுமுகமாக மறையும். பிரிந்திருந்த உறவுகள் ஒன்று சேரும்.


புனர்பூசம் 1, 2, 3
இந்த மாதம் வீட்டிற்குத் தேவையானஅனைத்து வசதிகளும் செய்துதருவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். சற்று முயற்சி எடுத்தால் பதவி உயர்வு உங்களை வந்து சேரும்.

சந்திராஷ்டம தினங்கள்: 9, 10, 11
அதிர்ஷ்ட தினங்கள்: 3, 4, 30
அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன் - வெள்ளி
பரிகாரம்: பெருமாள் கோயிலுக்கு சென்று துளசி மாலை சாற்றி வணங்குங்கள். தடைப்பட்ட காரியங்கள் இனிதே நடந்தேறும். பொருள் சேர்க்கை உண்டு.
*****************************************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

மேஷம்ரிஷபம்மிதுனம் ; ஜூன் மாத பலன்கள்பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்June palangal

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author