

தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்) கிரகநிலை - தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி (வ), ராகு - களத்திர ஸ்தானத்தில் புதன், குரு, சுக்கிரன் - அஷ்டம ஸ்தானத்தில் சூரியன் - பாக்கிய ஸ்தானத்தில் கேது - தொழில் ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய் என கிரக நிலைகள் உள்ளன.
கிரகமாற்றம்: 03.08.2025 அன்று களத்திர ஸ்தானத்தில் இருந்து புதன் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 17.08.2025 அன்று அஷ்டம ஸ்தானத்தில் இருந்து சூரியன் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 21.08.2025 அன்று சுக்கிரன் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 25.08.2025 அன்று அஷ்டம ஸ்தானத்தில் இருந்து புதன் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்: இந்த மாதம் பேச்சின் இனிமையால் காரியம் கைகூடும். பஞ்சம விரையாதிபதி செவ்வாயின் சஞ்சாரம் சுப பலன்களை தரும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரம் திருப்தியாக நடக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நல்லது.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக வேலையாக அலைய வேண்டி இருக்கும். புதிய பொறுப்புகள் சிலருக்கு கிடைக்கலாம். வெளிநாடு முயற்சிப்பவர்களுக்கு அனுகூலம் கிடைக்கும். குடும்பத்தில் சகஜ நிலை காணப்படும். உறவினர்கள் மூலம் நல்ல தகவல் வந்து சேரும். கணவன் மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும்.
பெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அரசியல்வாதிகள் கட்சித் தலைமையின் ஆணையை மீறி செயல்படக் கூடாது. கலைத்துறையினருக்கு வெளிநாட்டு புது நிறுவனங்கள் உங்களுக்கு வாய்ப்பளிக்கும். மாணவர்களுக்கு மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கல்வியில் திருப்தி உண்டாகும்.
மூலம்: இந்த மாதம் மிகச் சிறந்த பலன்களை உழைப்பின் மூலம் அடையலாம். நண்பர்களுக்கும் உற்றார் உறவினர்களுக்கும் தேவையான உதவி களைச் செய்து மன நிறைவு அடைவீர்கள். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். மழலைச் செல்வம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
பூராடம்: இந்த மாதம் உங்கள் எதிரிகளின் பலம் குறையும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். தர்ம காரியங்களில் ஈடுபடுவீர்கள். மன அழுத்தம் மறையும். சிந்தனையில் தெளிவு உண்டாகும்.
உத்திராடம் 1ம் பாதம்: இந்த மாதம் சகோதர, சகோதரிகள் மற்றும் நண்பர்கள் மூலமாக நன்மை அடைவீர்கள். புதிய சொத்துக்களை வாங்கு வீர்கள். ஆன்மீகப் பெரியோர்களைச் சந்தித்து அவர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள். உங்கள் தோற்றத்தில் பொலிவு உண்டாகும். புத்திசாலிகளின் நட்பைப் பெற்று பலனடைவீர்கள்.
பரிகாரம்: குருவிற்கு சாமந்தி மலரை சமர்பித்து வியாழக்கிழமையில் வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும் | சந்திராஷ்டம தினங்கள்: ஆகஸ்ட் 21, 22 | அதிர்ஷ்ட தினங்கள்: ஆகஸ்ட் 03, 04, 05, 30, 31
இந்த மாதம் கிரகங்களின் நிலை: