துலாம் ராசிக்கான மார்ச் மாத பலன்கள் முழுமையாக | 2025 

துலாம் ராசிக்கான மார்ச் மாத பலன்கள் முழுமையாக | 2025 
Updated on
2 min read

துலாம் (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதங்கள்) கிரகநிலை - பஞ்சம ஸ்தானத்தில் சூரியன், சந்திரன், சனி - ரண ருண ரோக ஸ்தானத்தில் ராகு, சுக்கிரன், புதன் - அஷ்டம ஸ்தானத்தில் குரு -பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் -அயன சயன போக ஸ்தானத்தில் கேது என வலம் வருகிறார்கள்.

கிரகமாற்றங்கள்: 04-03-2025 அன்று சுக்கிர பகவான் வக்ரம் ஆகிறார் | 09-03-2025 அன்று புதன் பகவான் வக்ரம் ஆகிறார் | 14-03-2025 அன்று சூரிய பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 18-03-2025 அன்று வக்ர நிலையில் இருக்கும் புதன் பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 30-03-2025 அன்று புதன் வக்ர நிவர்த்தி ஆகிறார்.

பலன்கள்: நடக்காது என்று எதையும் நினைக்காமல் எல்லாவற்றையும் செய்ய வேண்டும் என்ற துடிப்புடைய துலா ராசியினரே! இந்த மாதம் சுபகாரியங்களில் இருந்து வந்த தடங்கல்கள் நீங்கும். கிரகங்களின் சஞ்சாரத்தால் எதையும் ஒரு முறைக்கு பலமுறை ஆலோசித்து செய்வது நல்லது, மனம் நிலை கொள்ளாமல் ஏதாவது சிந்தித்து கொண்டே இருக்கும். புதிய முயற்சிகளை தள்ளி போடுவது நல்லது. ஆனால் ராசியைப் பார்க்கும் தனாதிபதி செவ்வாயால் பணவரத்து அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் பெறும்.

தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். தேவையான சரக்குகள் கையிருப்பில் இருக்கும். புது நபர்கள் கூறும் வியாபாரம் தொடர்பான விஷயங்களில் முடிவு எடுக்கும் போது கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவிகள் அல்லது புதிய பொறுப்புகள் கிடைக்கும். உங்களது பணி திறமையால் மேலதிகாரிகள் திருப்தி அடைவார்கள்.

குடும்பத்தில் இருப்பவர்களுடன் கோபமாக பேசும் சூழ்நிலை ஏற்படும். கவனமாக இருப்பது நல்லது. மனைவி குழந்தைகளின் உடல்நலத்தில் கவனம் தேவை. சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. வயிறு தொடர்பான நோய் வந்து நீங்கும்.

பெண்களுக்கு சதா எதையாவது யோசித்துக் கொண்டே இருப்பீர்கள். எந்த காரியத்திலும் முடிவு எடுக்கும் முன்பு தீர ஆலோசிப்பது நல்லது. கலைத்துறையினர் உக்திகளைக் கையாண்டு தொழிலில் முன்னேறுவீர்கள். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். உதவிகளின் மூலம் வெற்றி காண்பீர்கள். மிகவும் நன்றாகவே இருக்கும்.

அரசியல்துறையினருக்கு முன்னேற்றம் கிடைக்கும். தாங்கள் மேன்மையடைந்திட புதிய வாய்ப்புகள் வந்து சேரும். வெளிநாடு வாய்ப்புகள் வரலாம். வாய்ப்புகள் குவியும். வீண் அலைச்சல் ஏற்படலாம். வாழ்க்கையில் முன்னேற்றம் காணப்படும். மாணவர்களுக்கு கல்வியை பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். பாடங்களை படிக்கும் போது மனதை ஒருமுகபடுத்தி படிப்பது நல்லது.

சித்திரை 3, 4 பாதங்கள்: அசையும் அசையா சொத்துக்கள் சேரும். கடன்கள் குறையும். உடல் ஆரோக்கியமானது ஒரளவுக்கு சுமாராக இருக்கும். உடல் நிலையில் சோர்வு கை, கால் மூட்டுகளில் வலி, எதிலும் விரைந்து செயல்பட முடியாத நிலை ஏற்படும். எனவே கவனம் தேவை. மனைவியின் உடல் நிலையிலும் பாதிப்புகள் உண்டாகி மருத்துவச் செலவினை ஏற்படுத்தும்.

சுவாதி: முன் கோபத்தைக் குறைத்து பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. கணவன் மனைவியிடையே ஒற்றுமை ஏற்படும். பணவரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். திருமண சுப காரியங்கள் கை கூடி மகிழ்ச்சி அளிக்கும். ஆடம்பர செலவுகளைக் குறைப்பது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் சற்று அனுகூலப்பலனை அடைய முடியும்.

விசாகம் 1, 2, 3 பாதங்கள்: எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். அசையும் அசையா சொத்துகளால் சிறு சிறு விரயங்கள் தோன்றும். புத்திரவழியில் சிறுசிறு மனசஞ்சலங்கள் தோன்றி மறையும். உத்தியோக ரீதியாக எதிர்பார்க்கும் உயர்வுகள் சற்று தடைகளுக்குப் பின் கிட்டும்.

பரிகாரம்: சுமங்கலி பூஜை செய்து சுக்கிர பகவானுக்கு அர்ச்சனை செய்ய குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். பொருள் சேர்க்கை உண்டாகும் | அதிர்ஷ்ட கிழமைகள்: சந்திரன், சுக்கிரன் | சந்திராஷ்டம தினங்கள்: 5, 6, 7 | அதிர்ஷ்ட தினங்கள்: 26, 27, 28

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in