

கும்பம் (அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதம்) கிரகநிலை: ராசியில் சந்திரன், சனி (வ) - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராஹூ - சுக ஸ்தானத்தில் குரு - பஞசம ஸ்தானத்தில் செவ்வாய் - களத்திர ஸ்தானத்தில் புதன் - அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன், கேது என கிரகநிலை உள்ளது.
கிரகமாற்றங்கள்: 06-10-2024 அன்று புதன் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். | 14-10-2024 அன்று சுக்கிரன் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார். | 17-10-2024 அன்று சூர்யன் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். | 23-10-2024 அன்று செவ்வாய் பஞசம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார். | 25-10-2024 அன்று புதன் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்: இந்த மாதம் சுகஸ்தான ராசியில் குரு பகவான் வக்ரமாக இருக்கிறார். குறிக்கோளற்ற பயணங்கள் அதன் மூலம் அலைச்சல், உடல்நலக் கேடு போன்றவை ஏற்படலாம். திட்டமிட்டு எதையும் செய்வது நல்லது. மனதில் வீண்கவலைகள் உண்டாகக் கூடும். அடுத்தவரை நம்பி எதையும் ஒப்படைப்பதை தவிர்ப்பது நல்லது. சுபச்செலவுகள் ஏற்படும். தொழில் வியாபாரம் திட்டமிட்டபடி நடந்தாலும் சற்று நிதானமாக இருக்கும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்புவதில் தாமதம் ஏற்படலாம்.
போட்டிகள் தலைதூக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலான வேலைப்பளுவால் உடல் சோர்வடைவார்கள். குடும்பத்தில் இறுக்கமான சூழ்நிலை அகலும். மனதில் இருப்பதை வெளியில் காட்டிக் கொள்ள மாட்டீர்கள். ராசிக்கு 5ல் செவ்வாய் - 09ல் சுக்கிரன் சஞ்சாரம் செய்கிறார்கள். உடல் ஆரோக்கியம் சிறக்கும். கணவன், மனைவிக்கிடையில் இணக்கமான போக்கு காணப்படும். பெண்களுக்கு வீண்கவலைகள், எதிர்பாராத அலைச்சல் ஏற்படலாம். கலைத்துறையினர் எதையும் திட்டமிட்டு செய்வது நன்மை தரும். அரசியல்துறையினருக்கு அதிர்ஷ்டங்கள் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய பயம் ஏற்பட்டு நீங்கும்.
அவிட்டம்: இந்த மாதம் உறவினர்கள் மூலம் நன்மை உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் சேரும். நம்பிக்கையுடன் காரியங்களில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். மற்றவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைப்பதில் கவனம் தேவை.
சதயம்: இந்த மாதம் மாணவர்கள் கல்வி தொடர்பான பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். சக மாணவர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். புத்தி சாதூரியத்துடன் காரியங்களை செய்வீர்கள். எதிர்பார்த்த பணம் வரலாம். எதிர்ப்புகள் விலகும்.
பூரட்டாதி: இந்த மாதம் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வரலாம். எந்த காரியம் செய்தாலும் தாமதம் உண்டாகும். எல்லாவற்றிலும் ஒரு பயம் ஏற்படும். புதியநபர்களின் நட்பு உண்டாகும். வீடு வாகனம் தொடர்பான விஷயங்களில் கூடுதல் கவனம் தேவை.
பரிகாரம்: விநாயக பெருமானை தேங்காய் உடைத்து தீபம் ஏற்றி வணங்கி வர வீண் அலைச்சல் குறையும். காரிய தடை நீங்கும். கல்வி அறிவு அதிகரிக்கும். | அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள் - புதன் | சந்திராஷ்டம தினங்கள்: 2, 3, 29, 30, 31 | அதிர்ஷ்ட தினங்கள்: 22, 23 | இந்த மாதம் கிரகங்களின் நிலை:
- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |