

மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்) கிரகநிலை: தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சந்திரன், சனி (வ) - தைரிய வீரிய ஸ்தானத்தில் ராஹூ - பஞசம ஸ்தானத்தில் குரு - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய் - அஷ்டம ஸ்தானத்தில் புதன் - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன், கேது என கிரகநிலை உள்ளது.
கிரகமாற்றங்கள்: 06-10-2024 அன்று புதன் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார். | 14-10-2024 அன்று சுக்கிரன் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். | 17-10-2024 அன்று சூர்யன் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார். | 23-10-2024 அன்று செவ்வாய் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார். | 25-10-2024 அன்று புதன் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்: இந்த மாதம் யோககாரகன் சுக்கிரன் மிக அனுகூலமாக இருக்கிறார். வீண்செலவுகள் குறையும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படும். எனவே முன் திட்டமிடல் அவசியம். கொடுத்த வாக்கை காப்பாற்ற எப்பாடுபட்டாவது காப்பாற்றுவீர்கள். மற்றவர்களின் பிரச்சனைகளுக்கு
வலிய சென்று உதவிகள் செய்வதை தவிர்ப்பது நல்லது. இல்லாத இடமாற்றம் உண்டாகலாம். தொழில் வியாபாரம் முன்னேற்றம் காண மிகவும் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். பார்ட்னர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்தபடி பணிகள் முடியாமல் மனசங்கடத்திற்கு ஆளாக நேரிடும்.
குடும்பத்தில் இருப்பவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய பாடுபடுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே வெளியில் சொல்ல முடியாத மனக்குறைகள் வரலாம். பிள்ளைகள் கல்வி மற்றும் அவர்கள் எதிர்காலம் பற்றிய கவலை ஏற்பட்டு நீங்கும். பெண்களுக்கு விருப்பம் இல்லாமல் பயணம் செல்ல நேரிடலாம். கலைத்துறையினருக்கு யோகம் ஏற்படும். அரசியல்துறையினருக்கு எதிலும் கவனம் தேவை. மாணவர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் அதிகரிக்கும்.
உத்திராடம்: இந்த மாதம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். உங்களது பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. வாகனங்களால் செலவு ஏற்படும். தந்தையுடன் கருத்து வேற்றுமை வரலாம். சொத்துக்களை அடைவதில் தாமதம் ஏற்படும்.
திருவோணம்: இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் லாபம் கிடைப்பது குறையலாம். சரக்குகளை விற்பதில் மிகவும் வேகம் காட்டுவீர்கள். தொழில், வியாபாரம் விரிவாக்கம் செய்வது தொடர்பாக முக்கிய முடிவு எடுப்பீர்கள்.
அவிட்டம்: இந்த மாதம் உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகம் தொடர்பான பயணம் செல்ல வேண்டி வரலாம். சக ஊழியர்களின் உதவியும் கிடைக்கும். குடும்பத்தில் சுப காரியம் நடக்கும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளின் செயல்பாடுகளில் கவனம் தேவை.
பரிகாரம்: சனிக்கிழமையில் சனிபகவானுக்கு எள் சாதம் நைவேதியம் செய்ய காரிய தடை, எதிர்ப்புகள் அகலும். உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும். | அதிர்ஷ்ட கிழமைகள்: புதன் - வெள்ளி | சந்திராஷ்டம தினங்கள்: 1, 27, 28 | அதிர்ஷ்ட தினங்கள்: 20, 21 | இந்த மாதம் கிரகங்களின் நிலை:
- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |