

துலாம் (சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்) கிரகநிலை: பஞ்சம ஸ்தானத்தில் சந்திரன், சனி (வ) - ரணருண ரோக ஸ்தானத்தில் ராஹூ - அஷ்டம ஸ்தானத்தில் குரு - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் - லாப ஸ்தானத்தில் புதன் - அயன சயன போக ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன், கேது என கிரகநிலை உள்ளது.
கிரகமாற்றங்கள்: 06-10-2024 அன்று புதன் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார். | 14-10-2024 அன்று சுக்கிரன் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார். | 17-10-2024 அன்று சூர்யன் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார். | 23-10-2024 அன்று செவ்வாய் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார். | 25-10-2024 அன்று புதன் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார்.
பலன்: இந்த மாதம் உங்கள் மன உறுதி அதிகரிக்கும். ராசிநாதன் சுக்கிரன் ராசியில் பயணிக்கிறார். இதனால் பணவரவு அதிகமாகும். குரு பார்வையால் சுபச்செலவு உண்டாகும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த சில காரியங்கள் நடந்து முடியும். தொழில் வியாபாரத்தில் லாபம் கூடும். புதிய ஆர்டர்கள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். வாக்குவன்மையால் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாட்களாக தள்ளிப்போன பதவி உயர்வு வர வேண்டிய பணம் வந்து சேரலாம்.
குடும்பத்தில் எதிர்பார்த்த சுமுகமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவி இருவரும் சேர்ந்து எடுக்கும் முடிவுகள் நல்ல பலன் தருவதாக இருக்கும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கும். பெண்களுக்கு பணவரத்து திருப்தி தரும் விதத்தில் இருக்கும். கலைத்துறையினருக்கு இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக முடியும். அரசியல்துறையினருக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும். மாணவர்களுக்கு சாமர்த்தியமான பேச்சின் மூலம் மற்றவர் மனதில் இடம் பிடிப்பீர்கள்.
சித்திரை: இந்த மாதம் தொழில் வியாபாரம் நன்றாக நடக்கும். வாக்குவன்மையால் லாபம் அதிகரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். அரசாங்கம் தொடர்பான காரியங்கள் சாதகமான பலன் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பதவிகள் கூடுதல் பொறுப்பு கிடைக்க பெறுவார்கள்.
ஸ்வாதி: இந்த மாதம் அலுவலக பணிகளை வெற்றிகரமாக செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். நீண்ட நாட்களாக இருந்த குடும்பம் தொடர்பான பிரச்சனைகள் சாதகமாக முடியும். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும்.
விசாகம்: இந்த மாதம் குழந்தைகள் கல்விக்காக பாடுபட வேண்டி இருக்கும். பயணங்களால் செலவு ஏற்படும். துணிச்சலுடன் எதிலும் ஈடுபட்டு காரிய வெற்றி காண்பீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். விளையாட்டில் கவனம் செலுத்துவீர்கள்.
பரிகாரம்: நவகிரகத்தில் சுக்கிரனுக்கு வெள்ளிக்கிழமையில் தீபம் ஏற்றி வணங்க குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். மனமகிழ்ச்சி ஏற்படும். | அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள் - வெள்ளி | சந்திராஷ்டம தினங்கள்: 20, 21 | அதிர்ஷ்ட தினங்கள்: 14, 15 | இந்த மாதம் கிரகங்களின் நிலை:
- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |