மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 02 ஜனவரி 2026

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 02 ஜனவரி 2026
Updated on
2 min read

மேஷம்: பழைய சொந்தங்கள் தேடி வருவார்கள். குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். அலுவலகத்தில் வேலைச்சுமை குறையும். எதிர்காலத் திட்டங்கள் குறித்து நண்பர்களுடன் ஆலோசிப்பீர்கள்.

ரிஷபம்: எதிர்ப்புகள், தடைகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் திட்டமிட்டதைவிட அதிகரிக்கும். நவீன சாதனங்கள் வாங்குவீர்கள். குழப்பங்கள் நீங்கி தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். வெளியூர் பயணம் செல்ல திட்டமிடுவீர்கள்.

மிதுனம்: கோபம், டென்ஷன் அதிகரிக்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை உணர்ந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் ஓரளவு லாபமுண்டு. தலை சுற்றல், அசதி ஏற்படக் கூடும். தானுண்டு, தன் வேலையுண்டு என்று இருப்பது நல்லது. எதிலும் நிதானம் தேவை.

கடகம்: எதிரிகளை சாமர்த்தியமாகக் கையாளுவீர்கள். கணவன் -மனைவிக்குள் இருந்த கருத்துவேறுபாடுகள் நீங்கும். விருந்தினர்கள், நண்பர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும். வெளியூர் பயணங்கள் திருப்தி தரும். சிலர் பழைய வாகனத்தை மாற்றி புதிய வாகனம் வாங்குவீர்கள்.

சிம்மம்: எத்தனை தடைகள் வந்தாலும் உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. கணவன் –மனைவிக்குள் நிலவிய பனிப்போர் முடிவுக்கு வரும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். ஆன்மிகக் காரியங்களில் ஈடுபடுவீர்கள்.

கன்னி: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். பால்ய நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். பங்கு வர்த்தகத்தில் குறிப் பிடத்தக்க லாபம் கிடைக்கும். வெளியூர் பயணம் நன்மை தரும்.

துலாம்: எந்தக் காரியத்தைத் தொட்டாலும், இழுபறிக்குப் பின்னரே முடியும். குடும்பத்தினருடன் அனுசரித்து செல்லுங்கள். எதிர்பாராத செலவுகள் வரக்கூடும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் உண்டு. மனதில் ஏதோ ஒரு வெறுமை, குழப்பம் நிலவக் கூடும். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை.

விருச்சிகம்: குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வரக் கூடும். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். வெளியிடங்களில் கோபத்தைக் காட்ட வேண்டாம். யாருக்கும் எந்த உறுதிமொழியோ, உத்தரவாதமோ கொடுப்பதைத் தவிர்த்து விடுங்கள். திடீர் பயணம் ஏற்படும்.

தனுசு: தைரியமான முடிவுகளை எடுத்து வெற்றி காண்பீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு கூடும். பொதுக்காரியங்களில் ஈடுபடுவீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கும் எண்ணம் வரும். சகோதரர் வகையில் மகிழ்ச்சி உண்டு. ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

மகரம்: புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். உங்களின் சிந்தனைத் திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளின் உடல்நலம் சீராக இருக்கும். வீடு, மனை வாங்குவது குறித்து குடும்பத்தினருடன் ஆலோசிப்பீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.

கும்பம்: மனக்குழப்பங்கள் விலகி தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். குடும்பத்தினரின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். வாகனத்தில் செல்லும்போது கூடுதல் கவனம் தேவை. பயணங்கள் அலைச்சல் தருவதாக அமையும். அக்கம்பக்கத்தினரால் சில சங்கடங்கள் ஏற்படக் கூடும்.

மீனம்: கணவன் - மனைவிக்குள் இருந்துவந்த ஈகோ பிரச்சினை, வீண்சந்தேகம் விலகும். புது பொறுப்புகளும், பதவிகளும் தேடி வரும். உங்களின்இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். ஆன்மிகக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். மனைவிவழி உறவினர் உங்கள் உதவியை நாடுவார்.

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 02 ஜனவரி 2026
பொங்கலை முன்னிட்டு ‘சி’, ‘டி’ பிரிவு ஊழியர், ஓய்வூதியர் 9.90 லட்சம் பேருக்கு போனஸ்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in