மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 24 நவம்பர் 2025

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 24 நவம்பர் 2025
Updated on
2 min read

மேஷம் : குழப்பங்கள் நீங்கி குடும்பத்தில் அமைதி திரும்பும். வெளிநாட்டு பயணத்துக்கான விசா கிட்டும். வேற்றுமொழி, வேற்றுமதத்தினரால் ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் ஏற்றம் காண்பீர். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாண்டு வாடிக்கையாளர்களை கவருவீர்.

ரிஷபம் : கல்யாண முயற்சி வெற்றி அடையும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. நண்பர்கள் மத்தியில் மதிப்பு உயரும். சகோதரர்களின் ஆதரவுடன் பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர். வியாபாரம் சிறக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகள் பாராட்டுவர்.

மிதுனம் : குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக் கொடுத்து போவது நல்லது. முன்கோபத்தை கட்டுப்படுத்தவும். பணத்தை கவனமாக கையாள வேண்டும். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். முடிவுகள் எடுப்பதில் நிதானமாக செயல்படவும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பீர்.

கடகம் : ஈகோ பிரச்சினை நீங்கி குடும்பத்தில் அமைதி தங்கும். பணவரவால் விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். பங்குதாரர்களின் ஆலோசனையை ஏற்று செயல்படுவது நல்லது. அலுவலகத்தில் மேலதிகாரியின் ஆதரவுண்டு.

சிம்மம் : குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் உங்கள் கை ஓங்கும். பிரச்சினையில் இருந்து விடுபடுவதற்கான மாற்றுவழியை கண்டறிவீர். மனைவி, தாயாரின் உடல் நலத்தில் முன்னேற்றம் காண்பீர். வியாபாரத்தில் லாபம் பார்க்கலாம். அலுவலகத்தில் மேலதிகாரிகள் ஆதரிப்பர்.

கன்னி : சொன்ன சொல்லைக் காப்பாற்ற துடிப்புடன் செயல்படுவீர். தாயாரின் உடல்நிலை சீராகும். உறவினர், நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். பிள்ளைகளால் பெருமையுண்டு. வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சி மேற்கொள்வீர்கள். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.

துலாம் : வெளிப்படையான பேச்சால் சில காரியங்களை முடித்துக் காட்டுவீர். அனைத்திலும் வெற்றி கிடைக்கும். தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார். வியாபாரத்தை பெரியளவில் விரிவுபடுத்துவீர். பங்குதாரர்கள் ஆலோசனை தருவர்.

விருச்சிகம் : வெளியூரில் இருந்து மனதுக்கு இதமான செய்தி வரும். உடல் உபாதைகள் நீங்கும். தந்தைவழி சொத்துகள் கைக்கு வரும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். பணியாட்கள் ஆதரவாக இருப்பர். அலுவலகத்தில் மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள்.

தனுசு :குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போகவும். திடீர் பயணம் வரும். பிள்ளைகளின் உடல்நலத்தில் அக்கறை காட்டவும். அக்கம் பக்கத்தினர் அனுசரணையாக நடந்து கொள்வர். வியாபாரம் சூடு பிடித்து ஓரளவு லாபமுண்டு. அலுவலகத்தில் உழைப்புக்கேற்ற அங்கீகாரம் கிட்டும்.

மகரம் : வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை உயரும். நவீன மின்னணு சாதனம் வாங்குவீர். மனைவிவழியில் பணவரவு உண்டு. வாகனப் பழுது நீங்கும். வியாபார ரீதியாக சில முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

கும்பம் : குடும்பத்தில் நல்ல காரியங்கள் ஏற்பாடாகும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை உயரும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வியாபாரம் சூடு பிடித்து லாபம் பார்க்கலாம். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரை செய்யப்படுவீர். பொறுப்புகள் அதிகரிக்கும்.

மீனம் : ஆடம்பர செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். அடுத்தவர் விஷயத்தில் தலையிடுவதை தவிர்க்கவும். வியாபாரத்தை விரிவுபடுத்த சில முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். அலுவலகரீதியான பிரச்சினைகள் ஓயும்.

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 24 நவம்பர் 2025
ஜோதிட நாள்காட்டி 23.11.2025 | கார்த்திகை 07 - விசுவாவசு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in