மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 25 அக்டோபர் 2026

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 25 அக்டோபர் 2026
Updated on: 
2 min read

மேஷம் : எண்ணங்கள் ஈடேறும். குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளால் வெற்றி காண்பீர்.

ரிஷபம் : தன்னம்பிக்கையுடன் காணப்படுவீர். பணவரவு திருப்திகரமாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். பிள்ளைகள் பொறுப்பு அறிந்து செயல்படுவர். வியாபார போட்டிகளை சமாளிப்பீர்கள். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.

மிதுனம் : பழைய நண்பர்களை சந்திப்பீர். பிள்ளைகள் மனம் விட்டுப் பேசுவர். பண விஷயத்தில் கறாராக இருப்பீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு பழைய வாடிக்கையாளர்களைக் கவருவீர்.

கடகம் : குடும்ப உறுப்பினர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். பணவரவால் மனநிம்மதியுண்டு. பழைய வழக்குகளை இப்போது பேசித் தீர்ப்பீர். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்.

சிம்மம் : வெளியூரிலிருந்து நல்ல செய்திகள் வரும். குடும்பத்தினரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர். அடிக்கடி தொல்லை தந்த வாகனத்தை மாற்றுவீர்கள். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும். வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்துவீர்.

கன்னி : வரவுக்கு மிஞ்சிய செலவு இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் வீண் வாக்குவாதம் வரக்கூடும். சந்திராஷ்டமம் நடப்பதால் எதிலும் முன்யோசனையுடன் செயல்படவும். வியாபாரத்தில் பணியாட்களிடம் கோபம் வேண்டாம். அலுவலகத்தில் மதிப்பு, மரியாதை உயரும்.

துலாம் : தடைபட்டுக் கொண்டிருந்த பணிகள் நல்ல விதத்தில் முடிவடையும். பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் நல்ல தீர்வு காண்பீர்கள். அலுவலகரீதியாக வெளியூர் பயணம் மேற்கொள்வீர். வியாபாரத்தில் பங்குதாரரின் ஆலோசனையை ஏற்பீர்.

விருச்சிகம் : விருந்தினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும். புது எலக்ரானிக்ஸ் சாதனம் வாங்குவீர். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பீர்.

தனுசு : தொட்டது துலங்கும். மனக்குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். அனுபவப்பூர்வமாகப் பேசுவீர்கள். பழைய கடனைப் பைசல் செய்ய புது வழி பிறக்கும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வார்த்தைக்கு மதிப்பளிப்பர். வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்.

மகரம் : விவாதங்களை தவிர்ப்பீர்கள். கடந்த கால சுகமான அனுபவங்களை, சாதனைகளை அவ்வப்போது நினைத்து மகிழ்வீர்கள். எதிலும் உங்கள் கை ஓங்கும். அலுவலகத்தில் அமைதி காக்கவும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் கருத்துக்கு முக்கியத்துவம் அளிக்கவும்.

கும்பம் : பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டாகும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். நீண்டநாள் கனவுகள் நனவாகும். பூர்வீக சொத்து கைக்கு வரும். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர். வியாபாரத்தில் வெற்றி காண்பீர்.

மீனம் : ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் திட்டமிடாத செலவுகளும், பயணங்களும் வரலாம். குடும்பத்தினர் அனுசரணையாக இருப்பர். அலுவலகத்தில் பிறரைப் பற்றி தலைமையிடத்தில் புகார் கூற வேண்டாம். வியாபாரத்தில் பணியாட்களை அன்பாக நடத்தவும்.

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 25 அக்டோபர் 2026
மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கு இந்த வார பலன்கள் @ அக்.22 - 28

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in