மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 07 அக்டோபர் 2026

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 07 அக்டோபர் 2026
Updated on: 
2 min read

மேஷம் : எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். தந்தையின் உடல்நலம் சீராகும். புதிய பொறுப்புகளால் மகிழ்ச்சி அடைவீர். உறவினர், பால்ய நண்பர்களை சந்திப்பீர். அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார். வியாபார ரீதியாக பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரும்.

ரிஷபம் : சுபச்செலவு வரும். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவீர். நல்ல இடவசதியுடன் கூடிய வீட்டுக்கு குடிபுகுவீர். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையான்டு பழைய வாடிக்கையாளர்களைக் கவருவீர். அலுவலகத்தில் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.

மிதுனம் : பிரபலங்களின் அறிமுகம் கிட்டும். குழப்பம் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். புது திட்டங்கள் தீட்டுவீர்கள். தியானம், யோகா, ஆன்மிகத்தில் ஈடுபாடு கூடும். வியாபாரத்தில் லாபம் உண்டு. அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடுவதை தவிர்க்கவும்.

கடகம் : மறைமுக எதிர்ப்புகளை வெல்வீர். தம்பதிக்குள் நிலவி வந்த பனிப்போர் மறையும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. வெளியூரிலிருந்து நற்செய்தி வரும். வியாபாரம் சிறக்கும். அலுவலகத்தில் தானுண்டு தன் வேலை உண்டு என்று இருப்பது நல்லது.

சிம்மம் : மனக்குழப்பம் ஏற்படும். சில வேலைகளை போராடி முடிப்பீர். குடும்பத்தினருடன் அனுசரித்துப் போகவும். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர். அலுவலகத்தில் பணிச்சுமையால் உடல் சோர்வு வரக்கூடும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்.

கன்னி : பூர்வீகச் சொத்துப் பிரச்சினைகளை பேசித் தீர்க்க வழி பிறக்கும். பணப் பற்றாக்குறை விலகும். குடும்ப உறுப்பினர்களுடன் குலதெய்வம் கோயிலுக்கு சென்று வருவீர்கள். வியாபாரத்தில் லாபம் உண்டு. அலுவலக ரீதியாக பிரபலங்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும்.

துலாம் : பால்ய நண்பர்கள் உதவுவார்கள். குடும்பத்தில் சின்னச் சின்ன வாக்குவாதங்கள் வரலாம். பூர்வீக வீடு, மனை, விவசாய நிலங்களை விற்க முயற்சிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்.

விருச்சிகம் : பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். பிள்ளைகள் அன்பாக நடந்து கொள்வார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வரும். வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்த சிலரின் உதவியை நாடுவீர்கள். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்த்துவிடவும்.

தனுசு : ஈகோ பிரச்சினை தீர்ந்து கணவன் மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். வராது என்றிருந்த பணம் வரும். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்துப் பேசுவர். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய பங்குதாரர்கள் ஆதரிப்பர். உத்தியோகம் சிறக்கும்.

மகரம் : சந்திராஷ்டமம் தொடர்வதால் திடீர் செலவு, மன உளைச்சல் வந்து போகும். வாகனத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் பணியாட்களால் தொந்தரவு வரும். வாடிக்கையாளர்களிடம் கனிவாக பேசுவது நல்லது. அலுவலகத்தில் தேடிய ஆவணம் தென்படும்.

கும்பம் : குடும்பத்தில் எல்லாவற்றையும் இழுத்துப் போட்டுப் பார்க்க வேண்டியிருக்கும். பழைய கடன் பைசலாகும். தாய்வழி உறவினர்களால் ஆதாயமுண்டு. வியாபார போட்டி உடைபடும். ஓரளவு லாபம் கிட்டும். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர்.

மீனம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பெரியோரின் ஆசி கிடைக்கும். மகனுக்கு நல்ல வேலை கிடைக்கும். மகளின் கல்யாண முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும். வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்துவீர்கள். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர்.

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 07 அக்டோபர் 2026
மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான இந்த வார பலன்கள் @ அக்.1 - 7

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in