மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 20 நவம்பர் 2025

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 20 நவம்பர் 2025
Updated on
2 min read

மேஷம்: திட்டமிட்ட வேலையை முடிக்க போராட வேண்டியிருக்கும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடக்கவும். பிள்ளைகளின் விருப்பத்தை கேட்டறிந்து செயல்படவும். அலுவலகத்தில் யாரைப் பற்றியும் விமர்சனம் வேண்டாம். வியாபாரத்தில் குழப்பம் வரும்.

ரிஷபம்: உறவினர் மத்தியில் மதிப்பு, மரியாதை உயரும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவி கிட்டும். மனைவி வழியில் ஆதாயம் உண்டு. அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கவும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்.

மிதுனம்: பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். தாய்வழி உறவினர்கள் வீடு தேடி வருவர். பழைய நண்பர்களால் ஆதாயம் உண்டு. கையில் பணம் புரளும். அலுவலகரீதியாக இருந்து வந்த பிரச்சினைகள் தீரும். வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்துவீர்கள்.

கடகம்: சமயோஜித புத்தியுடன் பல காரியங்களையும் முடித்துக் காட்டுவீர். தம்பதிக்குள் பரஸ்பரம் புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் பாக்கி வசூலாகும். புதிய பங்குதாரர்களின் ஆலோசனையை கேட்டு நடக்கவும். குழப்பங்கள் நீங்கி அலுவலகத்தில் நிம்மதி பிறக்கும்.

சிம்மம்: உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அக்கறை காட்டுவார்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். கையில் பணம் புரளும். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சி மேற்கொள்வீர்கள். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.

கன்னி: முன்கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர். பிள்ளைகள் பொறுப்பு உணர்ந்து செயல்படுவர். யோகா, ஆன்மிகத்தில் ஈடுபாடு கூடும். வியாபாரத்தில் லாபமுண்டு. அலுவலகத்தில் பிறரைப் பற்றி தலைமையிடத்தில் புகார் கூறுவதை தவிர்க்கவும்.

துலாம்: அரசால் ஆதாயம் உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர் அறிமுகமாவார். ஷேர் மூலம் பணம் வரும். முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளிடம் கடுமையாக நடந்து கொள்ளாதீர். வியாபாரத்தில்பாக்கி வசூலாகும். அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார்.

விருச்சிகம்: குடும்ப உறுப்பினர்களுடன் விவாதங்கள் வேண்டாம். பயணங்கள் அலைச்சல் தரும். பணிகளை முடிக்க போராடுவீர். வியாபாரத்தில் நிதானம் தேவை. பங்குதாரர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். அலுவலக ரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திக்க வேண்டிவரும்.

தனுசு: தம்பதிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர். அக்கம் பக்கத்தினரின் அன்புத் தொல்லை நீங்கும். முன் கோபம் விலகும். வியாபாரத்தில் பாக்கி வசூலாகும். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.

மகரம்: பெற்றோரின் விருப்பங்களை கேட்டறிந்து நிறைவேற்றுவீர். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். மனவலிமையுடன் எதையும் முடித்துக் காட்டுவீர்கள். அலுவலகத்தில் உங்கள் கை ஓங்கும். வியாபாரரீதியாக பயணங்கள் மேற்கொள்வீர். ஓரளவு லாபம் பார்க்கலாம்.

கும்பம்: தன்னம்பிக்கையுடன் பொது காரியங்களில் ஈடுபடுவீர். உறவினர். நண்பர்களால் ஆதாயம் உண்டு. கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களுடன் இருந்த குழப்பம் நீங்கும். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரை செய்யப்படுவீர். தலைமையிடத்தில் செல்வாக்கு கூடும்.

மீனம்: நம்பிக்கைக்கு உரியவரை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பீர். குழப்பம் நீங்கி குடும்பத்தில் நிம்மதி உண்டு. வியாபாரத்தில் பழைய பணியாட்களை மாற்றுவீர். திடீர் பயணம் மேற்கொள்ள வேண்டிவரும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in