

மேஷம்: குடும்பத்தில் நிலவி வந்த காரசாரமான விவாதங்கள் மறையும். பிள்ளைகளின் சாதனைகளால் பெருமையடைவீர். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தை பெரியளவில் விரிவுபடுத்த முயற்சிப்பீர். அலுவலகத்தில் உயரதிகாரிகள் நேசக்கரம் நீட்டுவர்.
ரிஷபம்: கேட்ட இடத்தில் பணம் கிட்டும். குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். வெளிவட்டாரத்தில் மகிழ்ச்சி தங்கும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். தொழிலில் போட்டிகள் குறையும். அலுவலகத்தில் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பது நல்லது.
மிதுனம்: பழைய கசப்பான சம்பவங்களை பேசிக் கொண்டிருக்க வேண்டாம். உடல் நலத்தை கவனித்துக் கொள்ளவும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து செயல் படவும். தொல்லை தந்த வாகனத்தை மாற்றுவீர்கள். வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்.
கடகம்: பணவரவு திருப்திகரமாக இருக்கும். புதியவர் நண்பராவர். கொடுக்கல் - வாங்கலில் சுமுகமான நிலை காணப்படும். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும். மேலதிகாரி பாராட்டுவார். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்களால் சரக்குகள் விற்றுத் தீரும்.
சிம்மம்: வெளிவட்டாரத்தில் புதியவர்களின் நட்பு கிடைக்கும். தள்ளிப் போன வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். உறவினர், நண்பர்கள் உங்களைத் தேடி வருவார்கள். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.
கன்னி: மனப் போராட்டங்கள், குழப்பங்கள் விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். பழைய நண்பர்கள் தேடி வருவர். வாகனப் பழுது சீராகும். வியாபாரத்தில் பாக்கி வசூலாகும். பங்குதாரர்களின் ஆலோசனையை ஏற்று செயல்படவும். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.
துலாம்: குடும்பத்தில் விவாதங்கள் வந்து போகும். பூர்வீக சொத்து விவகாரத்தில் உடன்பிறந்தவர்களை அனுசரித்து செயல்படவும். பயணங்கள் அலைச்சல் தரும். வியாபாரத்தில் அவசர முடிவுகள் வேண்டாம். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர்.
விருச்சிகம்: உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்து கொள்வார்கள். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். அலுவலகத்தில் அமைதி காப்பீர். வியாபாரத்தில் பங்குதாரரை அலட்சியப்படுத்தாதீர்.
தனுசு: பழைய பிரச்சினைக்கு தீர்வு கிட்டும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவர். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்திகள் வரும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலையுண்டு என்றிருக்க பழகிக் கொள்வது நல்லது.
மகரம்: மின்சார சாதனங்களை மாற்றி அமைக்கும் முயற்சிகளில் இறங்குவீர். பழைய கடனை நினைத்து வருந்த வேண்டாம். புதுவழி பிறக்கும். வியாபாரத்தில் பங்குதாரரின் ஆதரவு உண்டு. கடையை மக்கள் அதிகம் கூடும் இடத்துக்கு மாற்றுவீர். உத்தியோகம் சிறக்கும்.
கும்பம்: தொட்டது துலங்கும். தடைகள் நீங்கும். இழுபறியாக இருந்து வந்த வேலைகள் முடிவடையும். அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் உடனடியாக நிறைவு பெறும். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரை செய்யப்படுவீர். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.
மீனம்: குடும்பத்தினரை அனுசரித்துப் போவது நல்லது. அக்கம் பக்கத்தினர் தக்க சமயத்தில் உதவி புரிவார்கள். அலுவலகத்தில் மேலதிகாரியுடன் கருத்துமோதல் வரலாம். வியாபாரத்தில் நிதானம் தேவை. புதிய பங்குதாரர்களின் ஆலோசனைப்படி செயல்படவும்.