மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 27 டிசம்பர் 2025

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 27 டிசம்பர் 2025
Updated on
2 min read

மேஷம்: குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். பெற்றோரின் பேச்சுக்கு மதிப்பளியுங்கள். ஓரளவு பணவரவு உண்டு. வியாபாரத்தில் பாக்கிகளை வசூலிப்பதில் சிரமம் இருக்கும். தவிர்க்க முடியாத பயணங்கள் வரும். அடுத்தடுத்த செலவுகளால் கடன் வாங்கும் சூழல் ஏற்படும்.

ரிஷபம்: சாதுர்யமாகச் செயல்பட்டு சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். வியாபாரத்தில் குறிப்பிடத்தக்க அளவில் லாபம் கிடைக்கும்.

மிதுனம்: பளிச்சென்று பேசி எல்லோரையும் கவர்ந்து விடுவீர்கள். கணவன் - மனைவிக்குள் மனம்விட்டுப் பேசுவீர்கள். வீட்டில் சுபகாரியங்களுக்கு ஏற்பாடாகும். நீண்ட நாட்களாக விலகியிருந்த உறவினர்கள் தேடி வருவார்கள். தாயாரின் உடல் நலனில் முன்னேற்றம் ஏற்படும்.

கடகம்: இழுபறியாக இருந்துவந்த காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். வெளியூர் பயணங்கள் சாதகமாகும். பழைய மின் சாதனங்களை மாற்றி புதியது வாங்குவீர்கள். பணவரவு திருப்தி தரும்.

சிம்மம்: கணவன் - மனைவிக்குள் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. சிறு வாக்குவாதம் கூட பெரிய பிரச்சினையாக வாய்ப்புள்ளது. எதிலும் நிதானமுடன் செயல்படுங்கள். கடந்தகால கசப்பான சம்பவங்கள் மனதை சஞ்சலப்படுத்தும். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள்.

கன்னி: தன்னம்பிக்கை பிறக்கும். விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். கணவன் - மனைவிக்குள் நிலவிய பனிப்போர் முடிவுக்கு வரும். எதிர்பாராத இடத்தில் இருந்து பணவரவு உண்டு.

துலாம்: நெடுநாட்களாக தடைபட்டுவந்த காரியங்களெல்லாம் இன்று முடிவுக்கு வரும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழல் காணப்படும். சொந்த பந்தங்களுக்கு மத்தியில் மதிப்பு உயரும். உறவினர் வீட்டு விசேஷத்தை முன்னின்று நடத்துவீர்கள். வீடு, வாகனத்தை சீரமைப்பீர்கள்.

விருச்சிகம்: நீண்ட நாட்களுக்குப் பிறகு குடும்பத்தில் உள்ளவர்களிடம் மனம்விட்டுப் பேசுவீர்கள். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். அரசியல்வாதிகளின் அறிமுகம் கிடைக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிப்பீர்கள். பழைய வாகனத்தை மாற்றி புதியது வாங்குவீர்கள்.

தனுசு: வீண் குழப்பங்கள் விலகும். வீட்டில் நிம்மதி பிறக்கும். வராது என்றிருந்த தொகை கைக்கு வரும். பழைய கடன் பிரச்சினையை தீர்க்க வழிபிறக்கும். சகோதரர் வகையில் சுபச்செலவு உண்டு. மனைவிவழி உறவினர் உங்கள் உதவியை நாடுவார். ஆன்மிகக் காரியங்களில் மனம் ஈடுபடும்.

மகரம்: மனநிறைவுடன் சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். சொந்தபந்தங்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி கிட்டும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். குடும்பத்துடன் வெளியூர் செல்ல திட்டமிடுவீர்கள். கலைப்பொருட்கள் சேரும்.

கும்பம்: முகப்பொழிவு கூடும். சோர்வு, களைப்பு நீங்கும். வங்கிக் கடனுக்காக முயற்சித்தவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சிலர் புது வாகனம் வாங்குவீர்கள். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்லுங்கள்.

மீனம்: குடும்பத்தில் உள்ளவர்களுடன் சின்னச்சின்ன மனக்கசப்புகள் வரக்கூடும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. யாருக்கும் எந்த உத்தரவாதமோ, உறுதிமொழியோ தர வேண்டாம். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. பணப்பற்றாக்குறை ஏற்படும்.

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 27 டிசம்பர் 2025
தவெகவை நோக்கி நகரும் கட்சிகள்... தடுக்க முடியாமல் திணறும் பாஜக!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in