

மேஷம்: குடும்ப பிரச்சினைகள் ஓயும். பெற்றோரின் பேச்சுக்கு மதிப்பளிக்கவும். ஓரளவு பணவரவு உண்டு. வியாபாரத்தில் பழைய பாக்கிகளை வசூலிப்பதில் சிரமம் இருக்கும். தவிர்க்க முடியாத பயணங்கள் வரும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.
ரிஷபம்: திறமையுடன் செயல்பட்டு சில காரியங்களை முடிப்பீர். மனக்குழப்பம் நீங்கும். தம்பதிக்குள் நெருக்கம் கூடும். வெளிவட்டாரத்தில் மதிப்பு,மரியாதை உயரும். மனைவிவழி உறவினர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் லாபம் கிட்டும். உத்தியோகம் சிறக்கும்.
மிதுனம்: பளிச்சென்று பேசி எல்லோரையும் கவருவீர். தம்பதிக்குள் இருந்த ஈகோ பிரச்சினை, கருத்துமோதல் தீர்ந்து அன்யோன்யம் பிறக்கும். வீட்டில் சுபகாரியங்கள் ஏற்பாடாகும். வராதிருந்த உறவினர், நண்பர்கள் தேடி வருவார்கள். வியாபாரம், உத்தியோகத்தில் ஏற்றமுண்டு.
கடகம்: யாருக்கும் எதற்காகவும் எந்த வகையிலும் உறுதி மொழி தர வேண்டாம். திடீர் செலவு கூடும். புண்ணிய தலங்களுக்குச் சென்று வரதிட்டமிடுவீர். வியாபாரத்தில் பங்குதாரர்களின் கருத்துகளை அலட்சியப்படுத்தாதீர். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.
சிம்மம்: தடைபட்ட காரியம் நல்ல விதத்தில் முடியும். விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு மிகப் பெரிய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். வெளியூர் பயணம் சாதகமாகும். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிப்பீர். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர்.
கன்னி: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர். தன்னம்பிக்கை பிறக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவு தருவர். தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பணப் பற்றாக்குறை நீங்கும். வியாபாரம் சூடு பிடித்து லாபம் தரும். அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார்.
துலாம்: நெடுநாட்களாக தடைபட்டு வந்த காரியங்கள் சுமுகமாக முடியும். தம்பதிக்குள் இருந்த பிரச்சினைகள் தீரும். உறவினர் மத்தியில் மதிப்பு, மரியாதை உயரும். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு பழைய வாடிக்கையாளர்களை கவருவீர். உத்தியோகம் சிறக்கும்.
விருச்சிகம்: குடும்பத்தில் உள்ளவர்களிடம் மனம் விட்டு பேசுவீர். பிரியமானவர், அரசியல்வாதிகளை சந்திப்பீர். வீடு, வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய யுக்திகளைக் கையாள்வீர். அலுவலகத்தில் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.
தனுசு: தம்பதிக்குள் விட்டுக் கொடுத்து போவது நன்மை தரும். பழைய பிரச்சினைகளை நினைத்து வருந்தாதீர்கள். அக்கம் பக்கத்தினரை பகைத்துக் கொள்ள வேண்டாம். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர் மத்தியில் மதிப்பு உயரும்.
மகரம்: விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். மனநிறைவுடன் சில காரியங்களை செய்து முடிப்பீர். வீட்டில் உள்ள பெரியவர்களின் ஆலோசனைகளை ஏற்று நடக்கவும். அலுவலகப் பணிகளை விரைந்து முடிப்பீர். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவர்.
கும்பம்: சோர்வு நீங்கி சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். வங்கிக் கடன் உதவி கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உதவிகரமாக நடந்து கொள்வார்கள். சிலர் புது வாகனம் வாங்குவீர். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரை செய்யப்படுவீர். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.
மீனம்: குழப்பம் விலகி இல்லத்தில் நிம்மதி பிறக்கும். எதிர்பாராத பணவரவு உண்டு. சகோதர வகையில் சுபச் செலவு இருக்கும். கடன் பிரச்சினையை தீர்க்க புது வழி கிட்டும். உடல்நலம் சீராகும். வியாபாரம் சூடு பிடித்து லாபம் பார்க்கலாம். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.