

மேஷம்: மனதில் இருந்த பயம் விலகும். துணிச்சலுடன் சில முடிவுகளைஎடுப்பீர். அலைச்சல் தந்த வேலைகளை உடனே முடிப்பீர். கணவன் - மனைவிக்குள் அனுசரித்து போவீர். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு வாடிக்கையாளர்களை கவருவீர். உத்தியோகம் சிறக்கும்.
ரிஷபம்: செலவுகளை கட்டுப்படுத்தி சேமிப்பீர்கள். அதிரடி திட்டங்களை தீட்டுவீர். பணவரவு திருப்தி தரும். உங்களை தேடி வந்து சிலர் உதவி கேட்பார்கள். வெற்றி பெற்றவர்கள், ஆன்மிகவாதிகளை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும். வியாபாரம், உத்தியோகத்தில் ஏற்றம் உண்டு.
மிதுனம்: தம்பதிக்குள் இருந்த ஈகோ பிரச்சினை தீரும். பூர்வீக சொத்து பிரச்சினையில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிட்டும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஆதரவு உண்டு. அலுவலகத்தில் அமைதி காப்பது நன்மை தரும்.
கடகம்: பழைய பிரச்சினைகள் தலை தூக்கும். மனதில் பயம் தோன்றும். குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக் கொடுத்து போகவும். மின்சார சாதனங்களை கவனமாக கையாளவும். வியாபாரத்தில் பங்குதாரரை அனுசரித்து நடக்கவும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பீர்.
சிம்மம்: மனதுக்குப் பிடித்தவர்களை சந்தித்து மகிழ்வீர். பணப் பற்றாக்குறை விலகும். மனைவிவழி உறவுகளை நிராகரிக்காதீர்கள். பிள்ளைகளை நல்வழிப்படுத்துவீர். மனநிறைவுடன் சில வேலைகளை செய்து முடிப்பீர்கள். வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்.
கன்னி: உற்சாகமான பேச்சால் அனைவரையும் கவருவீர். தந்தைவழி சொத்து கைக்கு வரும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை உயரும். வியாபாரத்தில் ஓரளவு லாபமுண்டு. அலுவலகத்தில் மேலதிகாரியை பகைத்துக் கொள்ளாதீர்.
துலாம்: குடும்பத்தினருடன் மனம் விட்டுப் பேசுவீர்கள். வீட்டில் இருந்த பழைய பொருட்களை மாற்றுவீர்கள். குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. வியாபாரம் சிறக்கும். அலுவலகத்தில் மதிப்பு கூடும்.
விருச்சிகம்: மனதில் இருந்த பயம் நீங்கி, துணிச்சலாக சில முடிவுகளை எடுப்பீர். பிள்ளைகளின் சாதனைகளால் பெருமையுண்டு. கணவன் - மனைவிக்குள் அனுசரித்து போவீர். வியாபாரத்தில் லாபம் கிட்டும். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் இணக்கமாக இருந்து செயல்படவும்.
தனுசு: மகனின் வேலை, மகளின் திருமணம் தொடர்பாக அலைச்சல், செலவு இருக்கும். உடல்நலத்திலும் கவனம் தேவை. வியாபாரத்தில் பழையபாக்கிகள் வசூலாகும். புதிய யுக்திகளைக் கையாண்டு வாடிக்கையாளர்களைக் கவருவீர். அலுவலகத்தில் மேலதிகாரி ஆதரவு தருவார்.
மகரம்: குறிக்கோளை எட்டிப்பிடிக்க முயற்சிப்பீர்கள். பணவரவு உண்டு. குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். தந்தையின் உடல்நிலை சீராகும். அண்டை வீட்டாரின் ஆதரவு கிட்டும். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சி மேற்கொள்வீர். அலுவலகத்தில் நற்பெயர் கிடைக்கும்.
கும்பம்: பணவரவு ஓரளவு திருப்திகரமாக இருக்கும். அதிரடி திட்டங்களை தீட்டுவீர். தந்தைவழியில் ஆதாயம் உண்டு. சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர். வியாபாரம் நல்ல லாபம் தரும். அலுவலகத்தில் பெரிய பதவிக்கு பரிந்துரை செய்யப்படுவீர். மேலதிகாரி பாராட்டுவார்.
மீனம்: குடும்பத்தினரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். விருந்தினர் வருகையால் வீடு களை கட்டும். மனக் குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபாரரீதியாக பிரபலங்களை சந்திப்பீர். உத்தியோகம் சிறக்கும்.