மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 26 டிசம்பர் 2025

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 26 டிசம்பர் 2025
Updated on
2 min read

மேஷம்: அடிமனதில் இருந்த பயம் விலகும். துணிச்சலுடன் சில முடிவுகள் எடுப்பீர்கள். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவுக்கு வரும். கணவன் - மனைவிக்குள் விட்டுக்கொடுத்து செல்வீர்கள். குல தெய்வப் பிரார்த்தனையை குடும்பத்துடன் சென்று நிறைவேற்றுவீர்கள்.

ரிஷபம்: அநாவசிய செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். எதிர்காலத்துக்கான அதிரடி திட்டங்களைத் தீட்டுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். மனைவிவழி உறவினர்கள் உங்களைத் தேடிவந்து உதவி கேட்பார்கள். ஆன்மிகவாதிகளின் சந்திப்பு நிகழும்.

மிதுனம்: பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். அக்கம்பக்கத்தினரின் செயல்பாடுகள் எரிச்சலை ஏற்படுத்தும். பங்குதாரர்களின் ஆதரவு உண்டு. வெளியூர் பயணம் செல்ல திட்டமிடுவீர்கள்.

கடகம்: அலைச்சல், தலைவலி, உடல் அசதி வரக்கூடும். நண்பகல் முதல் குழப்பங்கள் நீங்கும். எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்கும் சூழல் ஏற்படும். மனதுக்குப் பிடித்தவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். மனநிறைவுடன் சில வேலைகளை செய்து முடிப்பீர்கள்.

சிம்மம்: எந்தக் காரியத்தைத் தொட்டாலும் இழுபறியில் போய் முடியும். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் திட்டமிட்டதை விட அதிகரிக்கும். உடல் நலத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும்.

கன்னி: உற்சாகமான பேச்சால் அனைவரையும் கவருவீர்கள். தந்தைவழி சொத்துகள் கைக்கு வரும். வியாபாரத்தில் லாபம் உண்டு. வீண் குழப்பங்கள் நீங்கும். உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். பிள்ளைகள் கேட்டதை உடனுக்குடன் வாங்கித் தருவீர்கள்.

துலாம்: குடும்பத்தினருடன் மனம்விட்டுப் பேசுவீர்கள். பழைய மின்சாதனங்களை மாற்றி புதியது வாங்குவீர்கள். குடும்பத்தினருடன் ஆன்மிகப் பயணம் செல்வீர்கள். பால்ய நண்பர்களால் சில காரியங்கள் நிறைவேறும். பூர்வீக வீட்டை ரசனைக்கேற்ப மாற்றியமைப்பீர்கள்.

விருச்சிகம்: அடிமனதில் இருந்த பயம் நீங்கி, துணிச்சலாக சில முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளால் பெருமை ஏற்படும். கணவன் - மனைவிக்குள் நிலவிய பனிப்போர் முடிவுக்கு வரும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். தாயார் ஆதரவாக இருப்பார்.

தனுசு: மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். வெளியூரிலிருந்து உறவினர்கள், நண்பர்களின் வருகையுண்டு. அநாவசிய செலவுகளை தவிர்த்து விடுவீர்கள். குடும்பத்தினரின் எண்ணங்களை உடனுக்குடன் பூர்த்தி செய்வீர்கள். வீடு பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.

மகரம்: உங்களின் குறிக்கோளை எட்டிப்பிடிக்க முயற்சிப்பீர்கள். பணவரவு திருப்தி தரும். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். தந்தையின் உடல்நிலை சீராகும். அக்கம்பக்கத்தினர் ஆதரவாக இருப்பார்கள். கலைப்பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

கும்பம்: பழைய பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்கும். வீண் பயம், கவலைகள் வரும். குடும்பத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்லுங்கள். மின்சார சாதனங்களைக் கவனமாக கையாளுங்கள். வாகனம் அடிக்கடி செலவு வைக்கும். பணப்பற்றாக்குறை ஏற்படும்.

மீனம்: வீடு, மனை வாங்குவது குறித்து குடும்பத்தினருடன் ஆலோசிப்பீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். தந்தைவழியில் செலவுகள் வரும். உறவினர்கள் சிலர் உதவி கேட்டு சங்கடப்படுத்துவார்கள். வியாபாரத்தில் போட்டிகளை சாமர்த்தியமாக சமாளித்து விடுவீர்கள்.

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 26 டிசம்பர் 2025
மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ டிச.25 - 31

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in