

மேஷம்: சின்னச் சின்ன சந்தர்ப்பங்களையும் பயன்படுத்தி, காரியம் சாதிப்பீர்கள். பெற்றோர் ஆதரவு அதிகரிக்கும். எதிர்பார்த்திருக்கும் நல்ல செய்தி, வெளியூரில் இருந்து வரும். தொழில், வியாபாரத்தில் பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள்.
ரிஷபம்: நம்பிக்கை, உற்சாகத்துடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பிள்ளைகளின் விருப்பத்தை அறிந்து நிறைவேற்று வீர்கள். வியாபார ரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். செலவைக் குறைத்து சேமிப்பில் கவனம் செலுத்துவீர்கள்.
மிதுனம்: எதையும் தாங்கும் மனவலிமை கிடைக்கும். பண வரவு, பொருள் வரவு உண்டாகும். எதிர்ப்புகள், ஏமாற்றங்களை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். சகோதர உறவுகள் பக்கபலமாக இருப்பார்கள். யாரையும் எடுத்தெறிந்து பேசக் கூடாது.
கடகம்: வெளி வட்டாரத்தில் யாரிடமும் தேவையற்ற பேச்சுகள் வேண்டாம். குடும்பத்தில் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் நிதானம் தேவை. அரசு, வங்கி வகையில் ஆதாயம், அனுகூலம் உண்டாகும்.
சிம்மம்: பழைய சம்பவங்களை நினைத்துப் பார்த்து மகிழ்வீர்கள். வழக்குகளில் சாதகமான திருப்பங்கள் உண்டாகும். அரசால் அனுகூலம் உண்டு. இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
கன்னி: உங்கள் கல்வித் தகுதியை அதிகப்படுத்திக் கொள்வீர்கள். நல்லவர்களின் நட்பும், அதனால் ஆதாயமும் கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி தங்கும். சிலருக்கு பெரிய பொறுப்புகள், புதிய பதவிகள் கிடைக்கும். சகோதர, சகோதரிகள் ஆதரவாக இருப்பார்கள்.
துலாம்: தைரியமாக செயல்பட்டு, சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சகோதர உறவுகள் பக்கபலமாக இருப்பார்கள். நிலம், வீடு வாங்குவது, விற்பது சாதகமாக முடியும். எக்காரியத்திலும் பொறுமை தேவை.
விருச்சிகம்: அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு சுமுகத் தீர்வு கிடைக்கும். நண்பர்கள் தக்க சமயத்தில் ஓடிவந்து உதவுவார்கள். ஆன்மிகம், தியானம், யோகாவில் ஈடுபாடு அதிகரிக்கும்.
தனுசு: எந்த பிரச்சினைகள் வந்தாலும் எதிர்கொள்ளும் மனப் பக்குவம் கிடைக்கும். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். மனதில் நம்பிக்கை, உற்சாகம், புது தெம்பு பிறக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டு. பிள்ளைகள் பொறுப்பை உணர்ந்து நடப்பார்கள்.
மகரம்: சோர்வு, களைப்பு நீங்கி, உற்சாகத்துடன் புதிய முயற்சிகளில் இறங்குவீர்கள். கணவன் - மனைவிக்குள் மனஸ்தாபங்கள் நீங்கி, அன்யோன்யம் கூடும். வீடு, மனை விற்பது, வாங்குவது லாபகரமாக முடியும். நாடி வந்தவர்களுக்கு உதவுவீர்கள்.
கும்பம்: தேவையற்ற அச்சம், கவலை, மன இறுக்கம், குழப்பங்கள் வந்துபோகும். நீண்டதூர பயணங்களை தவிர்க்கவும். குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்கள் வேண்டாம். முக்கிய வேலைகளை நீங்களே நேரடியாக செய்து முடிப்பது நல்லது.
மீனம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உறவினர்களுடன் இருந்த மோதல்கள் விலகும். வியாபாரத்தில் தேங்கிக் கிடந்த சரக்குகள் விற்றுத் தீரும். வருங்கால வளர்ச்சிக்கு திட்டமிடுவீர்கள்.