மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 25 டிசம்பர் 2025

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 25 டிசம்பர் 2025
Updated on
1 min read

மேஷம்: மனதுக்குப் பிடித்தவர்களுக்காக அதிகம் செலவு செய்வீர்கள். உடல் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். வியாபாரத்தை விரிவுபடுத்துவது குறித்து முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சமூகத்தில் பிரபலமானவரைச் சந்திப்பீர்கள்.

ரிஷபம்: எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். சொன்ன சொல்லைக் காப்பாற்ற சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். பொறுப்புகள், பதவிகள் தேடி வரும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வெளிவட்டாரத்தில் உங்கள் வார்த்தைக்கு மரியாதை கூடும். கலைப்பொருட்கள் சேரும்.

மிதுனம்: அடிக்கடி பழைய நினைவுகளில் மூழ்குவீர்கள். மனதில் நிம்மதி பிறக்கும். ஆடம்பரப் பொருட்களை வாங்குவீர்கள். வெளிவட்டாரத்தில் பெரிய பொறுப்புகளை உங்களை நம்பி ஒப்படைப்பார்கள். பால்ய நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள்.

கடகம்: மறைமுக அவமானம் ஏற்படக்கூடும். பழைய கடன் சுமையை நினைத்து அவ்வப்போது நிம்மதியிழப்பீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லுங்கள். அடுத்தவர் விவகாரங்களில் அநாவசியமாகத் தலையிட வேண்டாம்.

சிம்மம்: சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். கணவன் - மனைவிக்குள் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி அன்யோன்யம் ஏற்படும். வருமானத்தை பெருக்க வழி கிடைக்கும். ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

கன்னி: எப்பாடுபட்டாவது கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றி விடுவீர்கள். குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கி கலகலப்பான சூழல் ஏற்படும். பணப்புழக்கம் கணிசமாக அதிகரிக்கும். வெளியூர் பயணங்கள் அலைச்சல் தந்தாலும் நன்மை கிடைக்கும்.

துலாம்: சோர்வு, களைப்பு நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். குடும்பத்தில் இருந்துவந்த சலசலப்புகள் முடிவுக்கு வரும். விலகியிருந்த சொந்தபந்தங்கள் விரும்பி வருவார்கள். பூர்வீக வீட்டை ரசனைக்கேற்ப சீர்படுத்துவீர்கள். தாயாரின் உடல்நலனில் முன்னேற்றம் ஏற்படும்.

விருச்சிகம்: நினைத்த காரியங்கள் மளமளவென்று நிறைவேறும். புது முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். கணவன் - மனைவிக்குள் இருந்துவந்த மனக்கசப்புகள் விலகும். அலைச்சல் குறையும். வியாபார ரீதியாக முக்கிய நபரைச் சந்திப்பீர்கள். பணவரவு உண்டு.

தனுசு: அநாவசிய செலவுகளைத் தவிர்த்து சேமிக்கும் எண்ணம் வரும். பேச்சில் தன்னம்பிக்கை பிறக்கும். குடும்ப வருமானத்தை உயர்த்த ஆலோசனை செய்வீர்கள். வியாபாரத்தில் நிலவிய சங்கடங்கள் விலகும். ஆன்மிகக் காரியங்களில் ஈடுபடுவீர்கள்.

மகரம்: மனதில் பட்டதை பளிச்சென்று பேசுவீர்கள். விருந்தினர், நண்பர்கள் வருகையால் குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். மனைவிவழி உறவினர்களால் சில காரியங்கள் நிறைவேறும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள்.

கும்பம்: திடீர் பயணங்கள், ஆழ்ந்த உறக்கமின்மை வந்து செல்லும். அரசு விவகாரங்களில் அலட்சியம் காட்ட வேண்டாம். உடன்பிறந்தவர்களால் சங்கடங்கள் வந்து போகும். அதிரடியான முடிவுகளை எடுக்காதீர்கள். எதிலும் நிதானமுடன் செயல்படுவது நல்லது.

மீனம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளை பொறுப்பாக வளர்க்க வேண்டும் என எண்ணுவீர்கள். உடல் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். வேலைக்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in