மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 02 மார்ச் 2026

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 02 மார்ச் 2026
Updated on
1 min read

மேஷம்: புதிய வீடு, மனை, வாகனம் வாங்குவது குறித்து யோசிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். வியாபாரத்தில் போட்டிகள் விலகும். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். யாரையும் எடுத்தெறிந்து பேசக்கூடாது.

ரிஷபம்: நேர்கொண்ட பார்வையுடன் சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பிரபலங்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள். வெளியூர் பயணங்கள் சிறப்பாக அமையும். தொழில், வியாபாரத்தில் ஊழியர்கள் தங்கள் கடமையை உணர்ந்து செயல்படுவார்கள்.

மிதுனம்: உங்களது நீண்டகால தேவைகள் பூர்த்தியாகும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். பழைய கடனைத் தீர்க்க தீவிர முயற்சி மேற்கொள்வீர்கள். வியாபாரத்தில் வீண் அலைச்சல் டென்ஷன் விலகும். ஆன்மிகத்தில் ஈடுபாடு உண்டாகும்.

கடகம்: மனதில் நிம்மதி பிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டு. பணவரவு சீராக இருக்கும். வாகனப் பழுது நீங்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். நாடி வந்தவர்களுக்கு உங்களால் இயன்ற உதவிகளை செய்வீர்கள். பொருட்கள் சேரும்.

சிம்மம்: வெளியூர் பயணம், வீண் அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும். மூத்தோர் சொல்பேச்சை கேட்டு முக்கிய முடிவுகளை எடுங்கள். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் இருந்தாலும் சமாளிப்பீர்கள். அரசு, வங்கி வகையில் அனுகூலம் ஏற்படும்.

கன்னி: குடும்பத்தினரின் உணர்வுகளைப் புரிந்துகொள்வீர்கள். பிள்ளைகளால் மரியாதை, அந்தஸ்து உயரும். வழக்கில் இருந்த தேக்க நிலை மாறும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகத்தால் உங்களது வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும்.

துலாம்: நீங்கள் ஏற்கெனவே செய்த உதவிகளுக்கு இப்போது பாராட்டு கிடைக்கும். உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து கூடும். வியாபாரத்துக்காக அதிக சரக்குகளை கொள்முதல் செய்வீர்கள். ஆன்மிகம், தியானம், யோகாவில் நாட்டம் ஏற்படும்.

விருச்சிகம்: உங்கள் இங்கிதமான, சாதுர்யமான பேச்சால் அனைவரையும் கவருவீர்கள். உற்சாகம், தோற்றப் பொலிவு அதிகரிக்கும். பிள்ளைகள் பொறுப்பை உணர்ந்து நடப்பார்கள். வெளியூர் பயணங்கள் சிறப்பாக அமையும். தொழிலில் போட்டிகள் குறையும்.

தனுசு: சுறுசுறுப்புடன் செயல்பட்டு வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். சிந்தனைத் திறன் அதிகரிக்கும். உடல்நலம் சீராகும். தொழில், வியாபாரம் சூடுபிடிக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும்.

மகரம்: தேவையற்ற அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும். அலுவலகத்தில் வேலைப் பளு அதிகரிக்கும். வியாபாரத்தில் பாக்கிகளை நிதானமாக வசூலிக்கப் பாருங்கள். வீண், ஆடம்பர செலவுகளை கட்டுப்படுத்தி சேமிப்பில் கவனம் செலுத்துவீர்கள்.

கும்பம்: வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். மனைவி வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. நண்பர்கள் உதவியுடன் பெரிய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். தொழில், வியாபாரம் லாபம் தரும். பேச்சில் பொறுமை தேவை.

மீனம்: நினைத்தது நிறைவேறும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். உங்களை சுற்றி இருப்பவர்களில் நல்லவர்கள்யார் என்பதை கண்டறிவீர்கள். உற்சாகம், தோற்றப் பொலிவு அதிகரிக்கும். மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள்.

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 02 மார்ச் 2026
ஜோதிட நாள்காட்டி 02.03.2026 | மாசி 18 - விசுவாவசு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in