

மேஷம்: தைரியமான முடிவுகளை எடுத்து வெற்றி காண்பீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கும் எண்ணம் வரும். சகோதரர் வகையில் அனுகூலம் உண்டு. வீடு, வாகன பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.
ரிஷபம்: புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். இழுபறியாக இருந்துவந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். நீண்டநாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும்.
மிதுனம்: உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை உணர்வீர்கள். சொந்தபந்தங்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி கிட்டும். வியாபாரத்தில் நல்ல லாபம் உண்டு. பழைய மின்சாதனங்களை மாற்றி புதியது வாங்குவீர்கள்.
கடகம்: எந்த காரியத்தைத் தொட்டாலும் பலமுறை முயன்று முடிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். நண்பர்கள், உறவினர்கள் உங்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்வார்கள். யாருக்கும் எந்த உத்தரவாதமோ உறுதிமொழியோ தர வேண்டாம்.
சிம்மம்: எதிரிகளை சாமர்த்தியமாகக் கையாள்வீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். விருந்தினர்கள், நண்பர்களின் வருகையால் வீடு கலகலப்பாகும். வெளியூர் பயணங்கள் திருப்தி தரும். கலைப்பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.
கன்னி: கடந்தகால இனிய சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். கணவன் - மனைவிக்குள் இருந்துவந்த கருத்துவேறுபாடுகள் நீங்கும். அடிக்கடி செலவு வைத்த வாகனத்தை மாற்றுவீர்கள். ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். தாயார் ஆதரவாக இருப்பார்.
துலாம்: உங்களுக்குள் மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். சகோதரர் வகையில் நன்மை உண்டு. கல்யாணப் பேச்சுவார்த்தை நம்பிக்கையைத் தரும். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. பிள்ளைகளால் வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும்.
விருச்சிகம்: புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வீட்டுக்குத் தேவையான மின்சாதனங்கள் வாங்குவீர்கள். ஆன்மிகக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பழைய சிக்கலில் ஒன்று தீரும். எதிர்பாராத இடத்தில் இருந்து பணவரவு உண்டு. பங்கு வர்த்தகம் லாபம் தரும்.
தனுசு: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். சொத்து தொடர்பான வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். உறவினர் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். பால்ய நண்பர்களைச் சந்திப்பீர்கள்.
மகரம்: ஒருவித படபடப்பு வந்து செல்லும். கணவன் - மனைவிக்குள் ஈகோ பிரச்சினை ஏற்படக் கூடும். வியாபாரத்தில் போராடி பாக்கிகளை வசூலிப்பீர்கள். அலுவலகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். எந்தக் காரியத்தைத் தொட்டாலும் இழுபறிக்குப் பிறகே முடியும்.
கும்பம்: சிந்தனைத்திறன் அதிகரிக்கும். புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு, மனை வாங்குவதற்கான காலம் கனிந்து வரும். பிள்ளைகளின் உடல் நலம் சீராக இருக்கும். வெளியூர் பயணம் நன்மையைத் தரும்.
மீனம்: சாதுர்யமாகப் பேசி சில காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். சகோதரர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வீட்டில் சுபநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடாகும். அக்கம்பக்கத்தினரின் அன்புத் தொல்லை உண்டு. வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.