மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 22 பிப்ரவரி 2026

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 22 பிப்ரவரி 2026
Updated on
2 min read

மேஷம்: முன்கோபத்தை தவிர்க்கவும். பிள்ளைகளின் படிப்பு தொடர்பாக அலைச்சல் இருக்கும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். அடிக்கடி தொல்லை தந்த வாகனத்தை மாற்றுவீர். வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்துவீர்கள். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.

ரிஷபம்: சாணக்கியத்தனமாகப் பேசி காரியம் சாதிப்பீர். உங்களிடம் கடன் வாங்கி ஏமாற்றியவர்கள் பணத்தை திருப்பித் தருவார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். பங்குதாரர்களின் ஆலோசனையை ஏற்று செயல்படவும். அலுவலகத்தில் விவாதம் வேண்டாம்.

மிதுனம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். ஆன்மிகத்தில் ஈடுபாடு கூடும். உங்களின் வெளிப்படையான பேச்சை அனைவரும் ரசிப்பர். அலுவலகத்தில் மேலதிகாரிகள் பாராட்டுவர். வியாபாரத்தில் பழைய சரக்குகளை விற்க முயற்சிப்பீர்கள். புதிய பங்குதாரர்கள் கிடைப்பார்கள்.

கடகம்: பணவரவு உண்டு. பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த பயம் விலகும். பழுதான வாகனம் சீராகும். புது வீடு, மனை வாங்குவீர். வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாண்டு வாடிக்கையாளர்களை கவருவீர். அலுவலக ரீதியாக பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரும்.

சிம்மம்: சகோதர வகையில் உதவி கிட்டும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனைவிவழியில் ஒத்துழைப்பு கூடும். தந்தைவழி உறவினர்களின் ஆதரவு உண்டு. பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்ட முயற்சிப்பீர்கள். வியாபாரம், உத்தியோகம் சிறக்கும்.

கன்னி: பேச்சில் கவனம் தேவை. குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். அக்கம் பக்கத்தினரின் அன்புத் தொல்லை நீங்கும். வியாபாரத்தில் பணிச்சுமை கூடும். கடையை புதிய இடத்துக்கு மாற்றுவீர். அலுவலகத்தில் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பது நல்லது.

துலாம்: பழைய நல்ல நினைவுகளில் மூழ்குவீர். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர். ஆன்மிகத்தில் நாட்டம் கூடும். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பர். பயணங்களால் ஆதாயம் உண்டு. அலுவலக ரீதியாக பிரபலங்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

விருச்சிகம்: தம்பதிக்குள் இருந்த ஈகோ பிரச்சினை தீரும். முக்கிய பிரமுகர்களை சந்திப்பதால் மனநிறைவு கிட்டும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர். பழைய பணியாட்களை மாற்றிவிட்டு புது ஆட்களை சேர்ப்பீர். அலுவலகத்தில் சக ஊழியர் மத்தியில் மதிப்பு உயரும்.

தனுசு: எதிர்பாராத பணவரவால் மனமகிழ்ச்சி உண்டு. உறவினர், நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவர். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு கூடும். வியாபாரத்தை விரிவுபடுத்த முற்படுவீர். பங்குதாரர்களின் கருத்துக்கு மதிப்பு கொடுக்கவும். அலுவலகத்தில் அமைதி காப்பீர்.

மகரம்: பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து யோசிப்பீர். மனைவி வழி உறவினர் மத்தியில் மதிப்பு உயரும். விரும்பிய பொருட்களை வாங்குவீர். பிரியமானவர்களை சந்திப்பீர். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் மீண்டும் வருவார்கள். உத்தியோகத்தில் ஏற்றம் உண்டு.

கும்பம்: சொன்ன சொல்லைக் காப்பாற்ற பரபரப்புடன் செயல்படுவீர். மனதுக்குப் பிடித்தவர்களுக்காக அதிகம் செலவு செய்வீர். தாயார், மகனின் உடல் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டு. பெரிய மனிதர்களை சந்திப்பீர். உத்தியோகம் சிறக்கும்.

மீனம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். உடல் சோர்வு ஏற்படும். வேலைகளை முடிக்க போராடுவீர்கள். வியாபாரத்தில் நிதானம் தேவை. அலுவலகத்தில் அடுத்தவர் பிரச்சினைகளில் தலையிடுவதை தவிர்க்கவும். மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம்.

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 22 பிப்ரவரி 2026
மீண்டும் ரூ.1.17 லட்சத்தை தாண்டியது தங்கம்: வியாபாரிகள் சொல்வது என்ன?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in