மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 11 பிப்ரவரி 2026

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 11 பிப்ரவரி 2026
Updated on
2 min read

மேஷம்: பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பர். விட்டுப் பிடிப்பது நல்லது. சிக்கனமாக இருக்கவும். யாருக்கும் எவ்வித உறுதிமொழியும் தர வேண்டாம். வியாபாரத்தில் நிதானம் தேவை. பங்குதாரர்களின் ஆலோசனைகளைக் கேட்டு செயல்படவும். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.

ரிஷபம்: சமயோஜித புத்தியால் சில காரியங்களை முடிப்பீர்கள். யதார்த்தமாகவும், தத்துவமாகவும் பேசி எல்லோருடைய இதயத்திலும் இடம் பிடிப்பீர்கள். ஈகோ பிரச்சினை தீர்ந்து தம்பதிக்குள் நெருக்கம் கூடும். வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்.

மிதுனம்: எதிர்ப்புகள் அடங்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டு. விண்ணப்பித்து காத்து கொண்டிருந்தவர்களுக்கு புது வேலை கிட்டும். தாய்வழி உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரம் சூடு பிடித்து நல்ல லாபம் பார்க்கலாம். அலுவலகத்தில் விவாதங்கள் வேண்டாம்.

கடகம்: நெருங்கிய நண்பரை சந்தித்து பேசுவீர்கள். முன்கோபம் நீங்கும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். பிள்ளைகளின் நலனில் அதிகம் அக்கறை காட்டுவீர். வெளியூர் பயணங்கள் திருப்தி தரும். வியாபாரத்தில் ஏற்றம் காண்பீர்கள். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.

சிம்மம்: பழைய பிரச்சினைகளை தீர்ப்பீர்கள். நட்பு வட்டம் விரியும். தாயாருடன் விவாதம் வந்து போகும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர். மனக் குழப்பம் நீங்கும். வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்துவீர். உத்தியோகத்தில் முன்னேற்றமுண்டு.

கன்னி: புத்திசாலித்தனமாக நடந்து கொள்வீர். பழைய நண்பர்கள் தேடி வருவர். மனைவி வழி உறவினர்கள் உங்களை புரிந்து கொள்வார்கள். வியாபாரத்தில் புதிய பங்குதாரர்களின் ஆலோசனைகளை ஏற்பது நல்லது. அலுவலகத்தில் அதிகாரிகளை அனுசரித்து நடக்கவும்.

துலாம்: பிரபலங்களின் உதவியை நாடிச் செல்வீர்கள். குடும்பத்தினரின் விருப்பங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவும். வீடு, வாகனப் பராமரிப்பு செலவுகள் வரும். அலுவலகப் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். வியாபாரரீதியாக வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள்.

விருச்சிகம்: பிள்ளைகளின் படிப்பு தொடர்பாக செலவு, அலைச்சல் இருக்கும். பிள்ளைகளிடம் முன்கோபத்தை காட்டாதீர். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். உழைப்புக்கு தகுந்த அங்கீகாரம் கிடைக்கும். வியாபார ரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திக்க நேரிடும்.

தனுசு: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். சகோதரர்கள் உறுதுணையாக இருப்பர். பிரபலங்களின் வீட்டு சுபநிகழ்ச்சிகளில் பங்கேற்பீர். வாகனப் பழுதை சீர் செய்வீர். வியாபாரத்தில் பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர். அலுவலகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள்.

மகரம்: பேச்சில் தன்னம்பிக்கை பிறக்கும். குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். புதியவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்துவீர். அலுவலகத்தில் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருக்கப் பழகிக் கொள்ளவும்.

கும்பம்: சுற்றியிருப்பவர்களால் இருந்த தொல்லைகள் அகலும். குடும்ப உறுப்பினர்களுடன் வெளியூர் பயணம் மேற்கொள்வீர். பழுதான எலக்ட்ரானிக் பொருட்களை மாற்றுவீர். தீவிரமாக உழைத்து வியாபாரத்தில் பெரிய இடத்தைப் பிடிப்பீர். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.

மீனம்: உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் இப்போது ஆதரவாக நெருங்கி வர வாய்ப்பு உண்டு. பணவரவு திருப்தி தரும். சொத்து வழக்கில் சாதகமான தீர்ப்பு கிட்டும். வியாபாரத்தில் நல்ல லாபம் பார்ப்பீர். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 11 பிப்ரவரி 2026
ஜோதிட நாள்காட்டி 11.02.2026 | தை 28 - விசுவாவசு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in