மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 09 பிப்ரவரி 2026
மேஷம்: கணவன் - மனைவிக்குள் விட்டுக்கொடுத்துச் செல்லுங்கள். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் இருந்தாலும், சமாளிப்பீர்கள். வாகன வகையில் தேவையற்ற செலவுகள் ஏற்படும். நாடி வந்தவர் களுக்கு உங்களால் இயன்ற உதவிகளைச் செய்வீர்கள்.
ரிஷபம்: தடைபட்டு வந்த கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வெளி வட்டாரத்தில் மரியாதை, அந்தஸ்து உயரும். வீடு, கடையை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். வியாபாரம் திருப்திகரமாக அமையும். கேட்ட இடத்தில் பண உதவிகள் கிடைக்கும்.
மிதுனம்: பிரபலங்களின் வீட்டு விசேஷங்களில் கலந்துகொள்ளும் அளவுக்கு நெருக்கமாவீர்கள். ஆன்மிகம், தியானம், யோகாவில் நாட்டம் அதிகரிக்கும். தொழிலில் உங்களுக்கு எதிராக செயல்பட்ட பணியாளர்களை இனம்கண்டு மாற்றுவீர்கள். பல வகையில் பொருட்கள் சேரும்.
கடகம்: குடும்பத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு, மகிழ்ச்சியும், அமைதியும் திரும்பும். வெளிநாட்டு பயணத்துக்கான விசா கிடைக்கும். புதிய நபர்களால் ஆதாயம், அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் புதிய உத்திகளைக் கையாளுவீர்கள். யாரையும் எடுத்தெறிந்து பேசக் கூடாது.
சிம்மம்: வீட்டு உபயோகப் பொருட்கள், புதிய மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். மனைவி வழி உறவினர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள். வாகனப் பழுது நீங்கும். வியாபார ரீதியாக சில முக்கிய நபர்களைச் சந்திப்பீர்கள். இந்த சந்திப்பால் ஆதாயமும் உண்டு.
கன்னி: பிரச்சினையில் இருந்து விடுபடுவதற்கான மாற்று வழியைக் கண்டறிவீர்கள். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உற்சாகம், தோற்றப் பொலிவு அதிகரிக்கும். உடல்நலம் சீராகும். மருத்துவச் செலவுகள் குறையும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு உண்டு.
துலாம்: உங்களது வெளிப்படையான, சாதுர்யமான பேச்சால் சில காரியங்களை முடித்துக் காட்டுவீர்கள். எதிலும் மகிழ்ச்சி கிடைக்கும். கணவன் மனைவிக்குள் மனஸ்தாபங்கள் நீங்கி, அன்யோன்யம் பிறக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரியிடம் பாராட்டு பெறுவீர். பண வரவு உண்டு.
விருச்சிகம்: குடும்பத்தில் சற்று விட்டுக்கொடுத்துச் செல்லுங்கள். முன்கோபம், காரியத் தடைகள் வரக்கூடும் என்பதால், எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். கேட்ட இடத்தில் இருந்து உரிய நேரத்தில் உதவிகள் கிடைக்கும்.
தனுசு: நீங்கள் எதிர்பார்த்திருக்கும் நல்ல செய்தி வந்துசேரும். உடல் சோர்வு, வயிற்றுவலி குணமாகும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். பணியாளர்கள் ஆதரவாக இருப்பார்கள். பெரியவர்கள், மகான்களைச் சந்தித்து ஆசி பெறுவீர்கள். நீண்டகால பிரார்த்தனைகள் நிறைவேறும்.
மகரம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். வீண், ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிப்பில் கவனம் செலுத்துவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்த சில முக்கிய நபர்களைச் சந்திப்பீர்கள். அலுவலக ரீதியான பிரச்சினைகள் ஓயும். ஆன்மிகம், யோகாவில் ஈடுபாடு அதிகரிக்கும்.
கும்பம்: வெளி வட்டாரத்தில் உங்கள் மதிப்பு, மரியாதை உயரும். குடும்பத்தில் நல்ல காரியங்கள் ஏற்பாடாகும். நண்பர்கள் தக்க சமயத்தில் ஓடோடி வந்து உதவுவார்கள். தொழில், வியாபாரம் சூடுபிடிக்கும். புதிய ஆர்டர்கள் கிடைக்கும். விலகிச் சென்ற உறவினர்கள் விரும்பி வருவார்கள்.
மீனம்: சொன்ன சொல்லைக் காப்பாற்ற துடிப்புடன் செயல்படுவீர்கள். பெற்றோர் உடல்நலம் சீராகும். உறவினர்கள், நண்பர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். பிள்ளைகளால் மதிப்பு, மரியாதை கூடும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வருங்கால வளர்ச்சிக்காக முக்கிய முடிவு எடுப்பீர்கள்.
