

மேஷம்: வருங்காலத்தை கருத்தில் கொண்டு முக்கிய முடிவுகள் எடுப்பீர். தம்பதிக்குள் நெருக்கம் கூடும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை எளிதாக விற்றுத் தீர்ப்பீர். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர். சக ஊழியர்கள் உங்களை புரிந்து கொள்வர்.
ரிஷபம்: பணவரவால் பழைய கடனை அடைப்பீர்கள். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். குழப்பம் தீரும். மனைவி, பிள்ளைகளின் உடல்நிலை சீராகும். வாகனச் செலவு குறையும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.
மிதுனம்: பூர்வீக சொத்துப் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். பால்ய நண்பர்களை சந்திப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வர். தொழிலில் கடையை விரிவுபடுத்துவீர். பங்குதாரர்களின் ஆலோசனைகளை ஏற்பீர். அலுவலகத்தில் உங்கள் கருத்துகள் ஏற்கப்படும்.
கடகம்: தள்ளிப் போய் கொண்டிருந்த சுபநிகழ்ச்சிகள் கை கூடி வரும். தம்பதிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளுடன் நேரத்தை செலவழிப்பீர்கள். சுற்றுலா பயணங்கள் திருப்தி தரும். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.
சிம்மம்: குடும்பத்தில் பழைய சொந்தங்கள் தேடி வரும். புது நண்பர்களின் அறிமுகம் கிட்டும். வியாபாரத்தில் பாக்கி வசூலாகும். மக்கள் அதிகம் கூடும் இடத்துக்கு கடையை மாற்றுவீர். அலுவலகத்தில் மேலதிகாரியின் ஆதரவு கிட்டும். வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள்.
கன்னி: பழைய கசப்பான சம்பவங்களை நினைத்து வருந்த வேண்டாம். குடும்பத்தில் நல்லது நடக்கும். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுப்படுத்தி கட்டுவீர்கள். பிள்ளைகளின் படிப்பில் ஆர்வம் காட்டுவர். வியாபாரம் சிறக்கும். அலுவலகப் பணிகளை விரைந்து முடிப்பீர்.
துலாம்: குடும்பத்தில் சின்னச் சின்ன மனஸ்தாபங்கள் வரக் கூடும். கையிருப்பு கரையும். வாகனத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் பழைய சரக்குகள் தேங்கும். இழுபறியாக இருந்த பாக்கிகளை போராடி பெறுவீர். அலுவலகத்தில் மேலதிகாரியை பகைத்துக் கொள்ளாதீர்.
விருச்சிகம்: ஈகோ பிரச்சினை தீர்ந்து தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். விடாப்பிடியாக செயல்பட்டு சில பணிகளை முடிப்பீர். பணப் பற்றாக்குறை நீங்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். தொழிலை பெரிய அளவில் விரிவுபடுத்துவீர். உத்தியோகம் சிறக்கும்.
தனுசு: ஆளுமைத் திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். அலுவலகத்தில் மதிப்பு கூடும். அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. வியாபாரத்தில் கனிவாகப் பேசி பழைய பாக்கிகளை வசூலிப்பீர்கள்.
மகரம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர். வாகனம் செலவு வைக்கும். வியாபாரரீதியாக திடீர் முடிவுகள் எடுக்க வேண்டாம். பங்குதாரர்களின் ஆலோசனைப்படி செயல்படவும். வியாபாரம் சிறக்கும்.
கும்பம்: குடும்பத்துடன் சென்று சுபநிகழ்ச்சிகளில் பங்கேற்று, நீண்ட நாட்களாக சந்திக்காத உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர். தடைபட்ட அரசாங்க வேலைகள் முடியும். பணவரவு மனநிறைவை தரும். வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்.
மீனம்: குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக் கொடுத்து போகவும். திடீர் செலவுகளால் கையிருப்பு கரையும். வியாபாரத்தில் நிதானம் தேவை. பங்குதாரர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம். பயணங்கள் அலைச்சல் தருவதாக அமையும். அலுவலகத்தில் அமைதி காப்பீர்.