மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 29 நவம்பர் 2026

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 29 நவம்பர் 2026
Updated on: 
2 min read

மேஷம் : எதிர்​பார்ப்​பு​கள் யாவும் நிறைவேறும். பூர்​வீக வீட்டை விற்க முயற்​சிப்​பீர். குடும்​பத்​தில் நிலவி வந்த குழப்​பம் வில​கும். சகோ​தர வகை​யில் உதவியுண்டு. அக்​கம் பக்​கத்​தினரை பகைத்​துக் கொள்​ளாதீர். கூட்​டுத்​தொழில் செய்​பவர்​களுக்கு லாபம் கிட்​டும்.

ரிஷபம் : குடும்​பத்​தில் கல​கலப்​பான சூழல் ஏற்​படும். பிள்​ளைகளால் மகிழ்ச்​சி​யுண்டு. நண்​பர்​களின் வீட்டு விசேஷங்​களில் பங்​கேற்று நட்பை புதுப்​பிப்​பீர். வியாபாரத்​தில் பாக்​கி​கள் வசூலாகும். புதிய யுக்​தி​களை கையாண்டு பழைய வாடிக்​கை​யாளர்​களை கவரு​வீர்.

மிதுனம் : நெடுநாளாக அடைக்க முடி​யாமல் இருந்த கடனை இப்​போது அடைக்​கும் அளவுக்கு பணம் வரும். மனைவி​யின் விருப்​பத்தை நிறைவேற்​று​வீர். மக​னுக்கு வேலை கிடைக்​கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். வியாபாரத்​தில் பாக்​கி​களை வசூலிப்​பீர்​கள்.

கடகம் : குடும்​பத்​தில் விட்​டுக் கொடுத்​துப் போவது நல்​லது. அண்டை, அய​லார் சிலரின் செயல்​பாடுகளால் கோபம், எரிச்​சல் அடைய​லாம். யாருக்​கும் எந்த வகை​யிலும் உறுதி​மொழி தர வேண்​டாம். வியாபார போட்​டிகளை சமாளிப்​பீர். பங்​குதா​ரர்​கள் ஆதரிப்​பர்.

சிம்​மம் : நீண்ட நாள் கனவு நனவாகும். பிள்​ளைகளால் மகிழ்ச்​சி​யும், உறவினர்​களால் ஆதாயமும் உண்​டாகும். விலை உயர்ந்த மின்​னணு, மின்​சார சாதனம் வாங்​கு​வீர். வியாபாரத்​தில் நிம்​மதி உண்டு. பங்​குதா​ரரின் ஆலோ​சனைப்​படி கடையை வேறு இடத்​துக்கு மாற்​று​வீர்.

கன்னி : குடும்​பத்​தினரின் விருப்​பங்​களை கேட்​டறிந்து பூர்த்தி செய்​வீர். பணவரவு உண்டு. பிள்​ளைகளால் பெரு​மையடைவீர்​கள். முன்​கோபம் வில​கும். சொந்த ஊர் விசேஷங்​களை முன்​னின்று நடத்​து​வீர். வியாபார ரீதி​யாக வெளியூர் பயணம் மேற்​கொள்​வீர்​கள்.

துலாம் : தடைகள் உடைபடும். கணவன் மனைவிக்​குள் இருந்த பனிப்​போர் வில​கும். வருங்​காலத்​துக்​கான முடிவு​களை எடுப்​பீர்​கள். வரவேண்​டிய பணம் வரும். வியாபாரத்​தில் நுணுக்கங்களைக் கற்று வெல்​வீர்​கள். பங்​குதா​ரர் உதவி​கர​மாக இருப்​பார்.

விருச்​சிகம் : பழைய நண்​பர்​கள் உங்​களிடம் வந்து பேசுவார்​கள். மனைவிவழி உறவினர் மத்​தி​யில் மதிப்பு, மரியாதை கூடும். வாக​னத்தை சீர் செய்​வீர்​கள். குலதெய்வ பிரார்த்​தனைகளை நிறைவேற்​று​வீர்​கள். வியாபாரத்​தில் பாக்​கி​களை போராடி வசூலிப்​பீர்.

தனுசு : குடும்பத்​தா​ரிடம் விட்​டுக் கொடுத்து போகவும். கையிருப்பு கரையக் கூடும். யாரை​யும் விமர்​சனம் செய்ய வேண்​டாம். அக்​கம் பக்​கத்​தினரை அனுசரித்து நடந்து கொள்​வது நல்​லது. வியாபாரத்​தில் இழுபறி​யாக இருந்த பாக்​கி​களை போராடி வசூலிப்​பீர்​கள்.

மகரம் : புதிய சிந்​தனையால் சில பிரச்​சினைகளை முடிப்​பீர். உறவினர், நண்​பர்​கள் வீட்டு விசேஷங்​களை முன்​னின்று நடத்​து​வீர். பூர்​வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்​டுவீர். வியாபாரத்​தில் பங்​குதா​ரர்​களின் ஆலோ​சனைகளை நிராகரிக்க வேண்​டாம்.

கும்​பம் : பழைய நல்ல சம்​பவங்​களை நினைவு​கூர்ந்து மகிழ்​வீர்​கள். ஈகோ பிரச்​சினை தீர்ந்து தம்​ப​திக்​குள் அன்​யோன்​யம் பிறக்​கும். வீடு, வாக​னப் பராமரிப்​புச் செல​வு​கள் இருக்​கும். தொழி​லில் பாக்​கி​கள் வசூலாகும். வியாபார நெளிவு சுளிவு​களை கற்​று வெல்​வீர்.

மீனம் : நீண்​டநாட்​களாக தடைபட்ட சுபநிகழ்ச்​சிகள் கைகூடி வரும். பிள்​ளைகள் மனம் விட்​டுப் பேசுவர். பண விஷயத்​தில் கறாராக இருப்​பீர்​கள். அக்​கம் பக்​கத்​தினரை அனுசரித்து நடந்து கொள்​ளவும். வியாபாரத்​தில் வேலை​யாட்​களின் ஆதரவு கிட்டும்.

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 29 நவம்பர் 2026
ஜோதிட நாள்காட்டி 28.11.2026 | கார்த்திகை 12 - சனிக்​கிழமை

X