மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 21 டிசம்பர் 2025

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 21 டிசம்பர் 2025
Updated on
1 min read

மேஷம்: நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த பணம் கைக்கு வரும். சொன்ன சொல்லைக் காப்பாற்ற துடிப்புடன் செயல்படுவீர்கள். பொறுப்புகள், பதவிகள் தேடி வரும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வெளிவட்டாரத்தில் உங்கள் வார்த்தைக்கு மரியாதை கூடும்.

ரிஷபம்: எதிர்ப்புகள், சவால்களைத் தாண்டி முன்னேறுவீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் திட்டமிட்டதை விட அதிகரிக்கும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். நவீன மின்சாதனங்கள் வாங்குவீர்கள். வெளியூர் பயணத்தால் அனுகூலம் உண்டு.

மிதுனம்: எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையும். குடும்பத்தாருடன் விட்டுக்கொடுத்து செல்லுங்கள். வீண் அலைச்சலும் டென்ஷனும் ஏற்படக் கூடும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவுடன் நடந்து கொள்ளுங்கள். பால்ய நண்பரை சந்திப்பீர்கள்.

கடகம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். உறவினர்களின் வருகையால் வீடு களைகட்டும். வாகனப் பராமரிப்பை மேற்கொள்வீர்கள். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல திட்டமிடுவீர்கள்.

சிம்மம்: கணவன் - மனைவிக்குள் இருந்த ஈகோ பிரச்சினை, வீண் சந்தேகம் விலகும். புது பொறுப்புகளும், பதவிகளும் தேடி வரும். உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களால் சில காரியங்கள் நிறைவேறும். கலைப்பொருட்கள் சேரும்.

கன்னி: குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். வியாபாரத்தில் போட்டிகளை சாமர்த்தியமாக எதிர்கொள்வீர்கள். ஆன்மிகக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். தாயார் ஆதரவாக இருப்பார்.

துலாம்: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். அரசால் அனுகூலம் உண்டு. பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண்பீர்கள்.

விருச்சிகம்: வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிகளை மேற்கொள்வீர்கள். குடும்பத்தினருடன் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். வீடு, வாகனத்தை சீர்செய்வீர்கள். விலகியிருந்த சொந்தபந்தங்கள் தேடி வருவார்கள். பணவரவு திருப்தி தரும்.

தனுசு: குடும்பத்தில் ஒருவருக்கொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. கணவன் - மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். எதற்கெடுத்தாலும் அடுத்தவர்களை குறைகூறுவதை நிறுத்துங்கள். தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பது நல்லது.

மகரம்: புதிய முயற்சிகள் வெற்றியடையும். வீட்டில் மகிழ்ச்சிகரமான சூழல் காணப்படும். உறவினர். நண்பர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். விஐபிகள் அறிமுகமாவார்கள். மனைவிவழி உறவினர்கள் உங்கள் உதவியை நாடுவார்கள். வெளியூர் பயணம் உண்டு.

கும்பம்: பளிச்சென்று பேசி எல்லோரையும் கவருவீர்கள். கணவன் - மனைவிக்குள் இருந்துவந்த கருத்துவேறுபாடுகள் முடிவுக்கு வரும். வருங்காலத்துக்கான முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து ஆலோசிப்பீர்கள்.

மீனம்: குடும்பத்தில் எல்லோரையும் அனுசரித்துச் செல்லுங்கள். வீண் செலவுகளை குறைப்பது நல்லது. பிள்ளைகளால் பெருமையுண்டு. பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயம் உண்டு. குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 21 டிசம்பர் 2025
ஜோதிட நாள்காட்டி 20.12.2025 | மார்கழி 05 - விசுவாவசு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in