

மேஷம்: எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் தீரும். செலவைக் கட்டுப்படுத்தி சேமிப்பீர்கள். தாய்வழி சொந்தங்கள் ஆதரவாக இருப்பார்கள். தொழில், வியாபாரத்தில் போட்டிகளைத் தகர்ப்பீர்கள்.
ரிஷபம்: கடந்தகால நினைவுகளால் மனதில் சந்தோஷம் பொங்கும். பழுதான வீடு, வாகனத்தை சரிசெய்வீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். சரியாக திட்டமிட்டு அலுவலகப் பணிகளை முடித்து, அதிகாரிகளிடம் பாராட்டு பெறுவீர்கள்.
மிதுனம்: எக்காரியத்திலும் நிதானமாக செயல்படுவது அவசியம். குடும்பத்தில் மூத்தோரின் அறிவுரையைக் கேட்டு நடப்பது நல்லது. வாகனம் செலவு வைக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் தேங்கும். பல வகையிலும் பொருட்கள் சேரும்.
கடகம்: நம்பிக்கை, உற்சாகத்துடன் செயல்பட்டு வேலைகளை முடிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். வியாபாரத்தில் பணியாளர்களை அனுசரித்துச் செல்லுங்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு உண்டு. பேச்சில் பொறுமை தேவை.
சிம்மம்: வெளி வட்டாரத்தில் மதிப்பு, மரியாதை உயரும். பெரிய பதவிக்கு உங்கள் பெயர் சிபாரிசு செய்யப்படும். பெற்றோர் உடல்நலம் திருப்திகரமாக இருக்கும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களை பேசி சமாளிப்பீர்கள்.
கன்னி: குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். கையில் காசு பணம் புரளும். புதிய நபர்களின் அறிமுகமும், அதனால் ஆதாயமும் கிடைக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். யாரையும் எடுத்தெறிந்து பேசக் கூடாது.
துலாம்: மனதில் இருந்த குழப்பங்களுக்குத் தீர்வு கிடைக்கும். கணவன் - மனைவிக்குள் மனஸ்தாபம் நீங்கி அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டு. செலவு வைத்த வாகனத்தை மாற்றுவீர்கள். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்.
விருச்சிகம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின் வருங்கால வளர்ச்சிக்கான திட்டங்களை செயல்படுத்துவீர்கள். உத்யோகத்தில் உயர் அதிகாரி நேசக்கரம் நீட்டுவார். நாடி வந்தவர்களுக்கு இயன்ற உதவியை செய்வீர்கள்.
தனுசு: எதிர்பார்த்த பணம் கைக்கு வருவதால் மனநிம்மதி கிடைக்கும். மனைவி வழியில் மரியாதை, அந்தஸ்து உயரும். பெற்றோரின் ஆசையை அறிந்து நிறைவேற்றுவீர்கள். ஆன்மிகம், தியானம், யோகாவில் நாட்டம் அதிகரிக்கும்.
மகரம்: கணவன் - மனைவிக்குள் வீண் வாக்குவாதம் வந்து போகும். வியாபாரத்தில் பழைய பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். அக்கம் பக்கத்தினரின் செயல்பாடுகள் எரிச்சல், கோபத்தை ஏற்படுத்தும். ஆன்மிகத்தில் ஈடுபாடு உண்டாகும்.
கும்பம்: இழுபறியாக இருந்த பழைய பிரச்சினைகளை பேசித்தீர்ப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். கையில் காசு பணம் புரளும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். பணியாளர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
மீனம்: சொந்த ஊரில் மதிப்பு, மரியாதை கூடும். கவுரவப் பதவிகள் தேடி வரும். சகோதர, சகோதரிகளுடன் இருந்த மனத்தாங்கல் நீங்கும். பங்குச் சந்தை, கமிஷன் வகைகளால் ஆதாயம் உண்டு. அரசு, வங்கி காரியங்கள் நடந்து முடியும்.