மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 11 நவம்பர் 2026

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 11 நவம்பர் 2026
Updated on: 
2 min read

மேஷம்: பிள்​ளைகளால் கையிருப்பு கரை​யும். பூர்​வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்ட முயற்​சிப்​பீர்​கள். சந்​திராஷ்டமம் தொடர்​வ​தால் வெளிவட்​டாரத்​தில் கவனம் தேவை. வியாபாரம் சிறக்​கும். அலு​வல​கத்​தில் பணியை முடிக்க அதி​கம் போராட வேண்​டி​யிருக்​கும்.

ரிஷபம்: எதி​ரி​களை வீழ்த்​தும் வல்​லமை உண்​டாகும். கறாராக பேசி காரியம் சாதிப்​பீர். சேமிக்​கும் அளவுக்கு வரு​வாய் கூடும். பழுதான சாதனங்​களை மாற்​றி​விட்டு புதி​யது வாங்​கு​வீர்​கள். அலு​வல​கத்​தில் விவாதங்​களை தவிர்க்​கவும். வியாபாரத்​தில் ஓரளவு லாபம் உண்டு.

மிதுனம்: குடும்​பத்​தில் உங்​கள் வார்த்​தைக்கு மதிப்பு கூடும். பெரிய மனிதர்​கள், வெற்றி பெற்​றவர்​களின் நட்பு கிடைக்​கும். எதிர்​பார்த்த விலைக்கே பழைய சொத்தை விற்​பீர்​கள். அலு​வல​கத்​தில் மகிழ்ச்​சி​யுண்டு. வியாபார போட்​டிகளை சமாளித்து வெற்றி பெறு​வீர்​கள்.

கடகம்: அடுக்​கடுக்​காக இருந்து வந்த செல​வு​கள் இனி குறையும். சவாலான காரியங்​களை​யும் திட்​ட​மிட்டு முடிப்​பீர்​கள். முன்​கோபம் நீங்​கும். வியாபாரரீதி​யாக பிரபலங்​களின் உதவியை நாடுவீர்​கள். அலு​வல​கத்​தில் தானுண்டு தன் வேலை​யுண்டு என்று இருப்​பது நல்​லது.

சிம்​மம்: தன்​னம்​பிக்கை பிறக்​கும். பணவரவு திருப்​தி​யாக அமையும். குடும்​பத்​தில் மகிழ்ச்சி பொங்​கும். பிள்​ளைகள் பொறுப்​பாக நடந்து கொள்​வார்​கள். வியாபாரத்​தில் ஓரளவு லாபம் உண்டு. அலு​வல​கத்​தில் அடுத்​தவர் விஷயத்​தில் தலை​யிடா​மல் இருப்​பது நன்மை தரும்.

கன்னி: உறவினர் மத்​தி​யில் மதிப்பு, மரியாதை கூடும். தந்​தைவழி சொத்​துகள் கைக்கு வரக்​கூடும். மூத்த சகோ​தர சகோ​தரி​கள் பண உதவி செய்​வார்​கள். வாக​னப் பழுது நீங்​கும். அலு​வல​கத்​தில் அமைதி காப்​பது நல்​லது. வியாபாரத்தில் ஓரளவு லாபம் பார்க்​கலாம்.

துலாம்: வெளிவட்​டாரத்​தில் மதிப்பு கூடும். பழைய நினைவு​களில் மூழ்​கு​வீர். சிலர் நன்றி மறந்து பேசுவர். பூர்​வீக வீடு, மனை, விவசாய நிலங்​களை விற்​ப​தற்கு முயற்​சிப்​பீர். வியாபாரத்​தில் பாக்​கி​கள் வசூலாகும். அலு​வல​கத்​தில் மேலதி​காரி நேசக்​கரம் நீட்​டுவார்.

விருச்​சிகம்: செல​வு​கள் இருக்​கும். தாயார், பிள்​ளைகளின் உடல்​நிலை லேசாக பாதிக்​கும். குலதெய்வ வழிபாடு செய்​வீர்​கள். வியாபார போட்​டிகள் கூடும். புதிய பங்​குதா​ரர்​களின் கருத்​துக்கு முக்​கியத்​து​வம் அளிக்​கவும். உத்​தி​யோகம் சிறக்​கும்.

தனுசு: புதி​ய​வர்​கள் அறி​முக​மாவர். வர வேண்​டிய பணம் கைக்கு வரும். உடன் பிறந்​தவர்​கள் ஆதரவு தரு​வார்​கள். பூர்​வீக சொத்து வழக்கு சாதக​மாக முடியும். பிள்​ளைகளின் வருங்​காலத்​துக்​காக சேமிப்​பீர். அலு​வல​கரீதி​யாக பயணம் செல்​வீர்.

மகரம்: பணவரவு திருப்​தி​கர​மாக இருக்​கும். சோர்வு நீங்கி மகிழ்ச்​சி​யுடன் செயல்​படுவீர். அரசு காரியங்​களில் வெற்றி உண்டு. வியாபாரத்​தில் புதிய யுக்​தி​களைக் கையாண்டு பழைய வாடிக்​கை​யாளர்​களை கவரு​வீர். அலு​வல​கத்​தில் மேலதி​காரி​யின் பாராட்டை பெறு​வீர்.

கும்​பம்: எதிர்​பார்த்​துக் கொண்​டிருந்த பணம் வரும். வீட்​டில் பழுதான பொருட்​களை மாற்​றி​விட்டு புதிய பொருட்​களால் அலங்​கரிப்​பீர். வியாபார நெளிவு சுளிவு​களைக் கற்​பீர். அலு​வல​கத்​தில் மதிப்பு உயரும். புதிய பத​விக்கு பரிந்​துரை செய்​யப்​படுவீர்​கள்.

மீனம்: சிக்​க​னமாக செல​வழித்து சேமிக்க தொடங்​கு​வீர். தாய்வழி உறவினர்​களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்​தில் இழுபறி​யாக இருந்த பாக்​கி​கள் வசூலாகும். பணி​யாட்​களின் ஆதரவு உண்டு. அலு​வல​கத்​தில் அடுத்​தவர் விஷயத்தில் தலையிடாதீர்.

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 11 நவம்பர் 2026
ஜோதிட நாள்காட்டி 11.11.2026 | ஐப்பசி 25 - புதன்கிழமை

X