மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 03 நவம்பர் 2026

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 03 நவம்பர் 2026
Updated on: 
1 min read

மேஷம்: தடைபட்ட வேலைகளை விரைந்து முடிப்​பீர். குழப்​பம் நீங்கி குடும்​பத்​தில் மகிழ்ச்சி பொங்​கும். பிள்​ளைகளின் சாதனைகளால் பெரு​மையடைவீர்​கள். வியாபார போட்​டிகளை சமாளிப்​பீர்​கள். அலு​வல​கத்​தில் விவாதம் வேண்​டாம்.

ரிஷபம்: குடும்​பத்​தில் மகிழ்ச்சி தங்​கும். அரசாங்​கத்​தால் ஆதாயம் உண்டு. புது பணி​யில் அமர்​வீர்​கள். நெருங்​கிய உறவினர், நண்​பர்​கள் விரும்பி வந்​துப் பேசுவர். வியாபாரம் சூடு பிடித்து ஓரளவு லாபம் தரும். அலு​வல​கத்​தில் அமைதி காப்​பது நல்​லது.

மிதுனம்: தாய்​வழி உறவினர்​களால் ஆதாயம் உண்டு. சிக்​க​னமாக செல​வழித்து சேமிக்​கத் தொடங்​கு​வீர். பூர்​வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்​டுவீர். அலு​வலக ரீதி​யாக முக்​கிய பிர​முகர்​களை சந்​திப்​பீர். வியாபாரத்​தில் பாக்​கி​கள் வசூலாகும்.

கடகம்: எதிர்​பார்த்​துக் கொண்​டிருந்த பணம் இன்று வரும். வீட்​டில் பழுதான பொருட்​களை மாற்​றி​விட்டு புதிய பொருட்​களால் அலங்​கரிப்​பீர்​கள். அலு​வல​கத்​தில் உங்​கள் தரம் ஒருபடி உயரும். வியாபாரத்​தில் வாடிக்​கை​யாளர்​களை கவரு​வீர்.

சிம்​மம்: ராசிக்​குள் சந்​திரன் இருப்​ப​தால் உடல் உஷ்​ணம் அதி​கரிக்​கும். குடும்​பத்​தில் விட்​டுக் கொடுத்து போகவும். வியாபாரத்​தில் ஓரளவு லாபமுண்டு. பங்​குதா​ரர்​களின் கருத்​துக்கு முக்​கியத்​து​வம் கொடுக்​கவும். அலு​வல​கத்​தில் மேலதி​காரி பாராட்​டுவார்.

கன்னி: தாயாரின் மருத்​து​வச் செல​வு​கள் குறையும். உடன்​பிறந்​தோர் ஒத்​தாசையாக நடந்து கொள்​வார்​கள். யோகா, தியானத்​தில்மனம் லயிக்​கும். பாக்கி வசூலாகும். அலு​வல​கத்​தில் தானுண்டு தன் வேலை உண்டு என்று இருக்க பழகிக் கொள்​ளவும்.

துலாம்: எதிர்​பார்த்த வகை​யில் பணம் வரும். பால்ய நண்​பர்​கள், உறவினர்​கள் உதவி​கர​மாக இருப்​பார்​கள். வேற்​றுமொழிப் பேசுபவர்​களால் ஆதாயமடைவீர். அலு​வல​கத்​தில் தேடிய ஆவணம் தென்​படும். வியாபாரத்​தில் யாரை​யும் பகைத்​துக் கொள்​ளாதீர்.

விருச்​சிகம்: வெளியூர் பயணங்​களால் ஆதாயம் உண்டு. உறவினர், நண்​பர்​கள் ஆதர​வாகப் பேசத் தொடங்​கு​வர். வியாபாரத்தை விரிவுபடுத்த முக்​கிய பிர​முகர்​களின் உதவி கிட்​டும். அலு​வல​கத்​தில் யாருக்​கும் எந்த வகை​யிலும் உறுதி​மொழி தர வேண்​டாம்.

தனுசு: வீடு, மனை விற்​பது, வாங்​கு​வது லாபகர​மாக முடியும். சோர்வு நீங்கி, உற்​சாக​மாக புது முயற்​சிகளில் இறங்​கு​வீர்​கள். ஈகோ பிரச்​சினை தீர்ந்து தம்​ப​திக்​குள் அன்​யோன்​யம் கூடும். வியாபாரம் ஓரளவு லாபம் தரும். அலு​வல​கத்​தில் அமைதி காப்​பது நல்​லது.

மகரம்: கணவன் மனைவிக்​குள் பனிப்​போர் ஏற்​படும். முன்​கோபத்தை குறைத்​துக் கொள்​ளவும். சந்​திராஷ்டமம் தொடர்​வ​தால் செல​வு​கள் கட்​டுக்​கடங்​காமல் போகும். அலு​வல​கத்​தில் பணிச்​சுமை கூடும். வியாபாரத்​தில் பாக்​கி​களை போராடி வசூலிக்க வேண்​டிவரும்.

கும்​பம்: நீண்ட நாள் பிரச்​சினைகளுக்கு தீர்வு கிடைக்​கும். உறவினர் மத்​தி​யில் மரியாதை கூடும். தங்க ஆபரணங்​களை கவனமாக கையாளவும். வியாபாரத்​தில் பல யுக்​தி​களைக் கையாண்டு வெல்​வீர். அலு​வல​கத்​தில் புதிய பத​விக்கு பரிந்​துரைக்​கப்​படுவீர்.

மீனம்: குடும்​பத்​தில் கல​கலப்​பான சூழல் உரு​வாகும். கையில் பணப்​புழக்​கம் அதி​கரிக்​கும். வேலை​யாட்​கள் அன்​பாக நடந்து கொள்​வார்​கள். அலு​வல​கத்​தில் அடுத்​தவர் விஷயத்​தில் தலை​யிடாதீர். மேலதி​காரி​களை பகைத்துக் கொள்ளாதீர்.

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 03 நவம்பர் 2026
ஜோதிட நாள்காட்டி 03.11.2026 | ஐப்பசி 17 - செவ்வாய்க்கிழமை

X