

மேஷம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர். பிள்ளைகள் ஒத்துழைப்பு தருவார்கள். நண்பர்கள் உங்களைப் புரிந்து கொள்வர். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கவும்.
ரிஷபம்: பேச்சில் கம்பீரம் பிறக்கும். சகோதர வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தாயாரின் மருத்துவச் செலவுகள் படிப்படியாக குறையும். பிள்ளைகள் படிப்பு தொடர்பாக அலைச்சல் இருக்கும். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.
மிதுனம்: இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். தந்தையாரின் உடல்நிலை சீராகும். அரசு சம்பந்தப்பட்ட காரியம் சாதகமாகும். நண்பர்கள் மத்தியில் மதிப்பு உயரும். வியாபாரத்தில் சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.
கடகம்: சந்திராஷ்டமம் இருப்பதால் விரயம், டென்ஷன் வரலாம். அவசர முடிவுகளை தவிர்த்துவிடுவது நல்லது. தாயார், பிள்ளைகளின் உடல்நலத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர். அலுவலக ரீதியாக பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரும்.
சிம்மம்: எதிலும் மகிழ்ச்சி கிட்டும். வெளிப்படையான பேச்சால் சில காரியங்களை முடித்துக் காட்டுவீர். ஈகோ பிரச்சினை தீர்ந்து தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார். வியாபார ரீதியாக பிரபலங்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும்.
கன்னி: பணப்பிரச்சினையை சமாளிக்க வழி கிடைக்கும். குடும்பத்தினரால் மனநிம்மதி உண்டு. வியாபாரத்தில் முக்கிய பிரமுகர்கள் அறிமுகமாவர். வரவு செலவுகளில் கவனமாக இருக்கவும். அலுவலகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள்.
துலாம்: கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர். மனநிறைவுடன் காணப்படுவீர். குடும்பத்தில் அனுசரித்துப் போவீர். வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாள்வீர். அலுவலகத்தில் மேலதிகாரிகள் ஆலோசனை தருவர்.
விருச்சிகம்: புதிய கோணத்தில் சிந்தித்து செயல்படுவீர். உறவினர், அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர். வியாபாரத்தில் புதியவர்களின் அறிமுகம் கிடைக்கும். அலுவலகத்தில் சக ஊழியர் மத்தியில் மதிப்பு உயரும்.
தனுசு: உடன்பிறந்தோர் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கொடுப்பர். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவர். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். வாகனத்தை சீர் செய்வீர். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரம் சூடு பிடித்து லாபம் பார்க்கலாம்.
மகரம்: புது வேலைவாய்ப்புகள் தேடி வரும். குடும்ப உறுப்பினர்களுடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர். வீட்டை அழகுப்படுத்துவீர். நவீன மின்னணு சாதனம் வாங்குவீர். அலுவலகத்தில் மதிப்பு உயரும். வியாபாரம் திருப்தி தரும். பங்குதாரர்கள் அறிவுரை தருவர்.
கும்பம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் செலவுகளை குறைக்க முடியாமல் திணறுவீர். தம்பதிக்குள் விட்டுக் கொடுத்து போவது நல்லது. அக்கம் பக்கத்தினரில் சிலர் உதவுவதை போல் உபத்திரவம் தருவர். அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார்.
மீனம்: தடைப்பட்டிருந்த காரியங்கள் நல்ல விதத்தில் முடிவடையும். பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் நல்ல தீர்வு காண்பீர். அலுவலகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவருவீர்.