

மேஷம்: நம்பிக்கை, தைரியம் கூடும். கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். சாதுர்யமாகப் பேசி முக்கியமான காரியங்களை சாதித்துக் காட்டுவீர்கள். எதிர்பாராத வகையில் பணம் வரும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்
ரிஷபம்: அடிப்படை வசதிகள் பெருகும். இழுபறியாக இருந்த பூர்வீக சொத்துப் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகள், பொதுக் காரியங்களில் உங்களுக்கு முதல் மரியாதை கிடைக்கும்.
மிதுனம்: சவாலான காரியங்களைக்கூட சர்வசாதாரணமாக முடித்து, பாராட்டு பெறுவீர்கள். பல வகையிலும் செல்வம், செல்வாக்கு கூடும். போட்டிகள், விவாதங்களில் வெற்றி கிடைக்கும். விஐபிக்களின் அறிமுகத்தால் ஆதாயம் உண்டு.
கடகம்: குடும்பத்தில் கூச்சல், குழப்பத்துக்கு இடம் தராதீர்கள். நண்பர்கள் உங்களை உதாசீனம் செய்தாலும், பெருந்தன்மையுடன் கடந்து செல்லுங்கள். வியாபாரத்தில் லாபம் உண்டு. நாடி வந்தவர்களுக்கு இயன்ற உதவிகளைச் செய்வீர்கள்.
சிம்மம்: விலகிச் சென்ற சொந்த பந்தங்கள் வீடு தேடி வந்து பேசுவார்கள். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். வியாபார ரீதியாக சிலரது அறிமுகம் கிடைக்கும். இழுபறியாக இருந்த பழைய பாக்கிகள் வசூலாகும்.
கன்னி: கம்பீரமாகப் பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். சகோதரர்கள் உறுதுணையாக இருப்பார்கள். சுப நிகழ்ச்சிகளில் குடும்பத்துடன் பங்கேற்பீர்கள். வாகனப் பழுதை சரிசெய்வீர்கள். ஆன்மிகம், தியானத்தில் ஈடுபாடு ஏற்படும்.
துலாம்: எதிரிகளின் கொட்டம் அடங்கும். கணவன் - மனைவிக்குள் மனஸ்தாபம் நீங்கி அன்யோன்யம் அதிகரிக்கும். விருந்தினர்கள், நண்பர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும். வெளியூர் பயணங்கள் திருப்திகரமாக அமையும்.
விருச்சிகம்: உங்களைச் சுற்றி இருப்பவர்களில் நல்லவர்கள் யார், அல்லாதவர் யார் என்பதை உணர்வீர்கள். சொந்த பந்தங்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சுபச் செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் லாபம் உண்டு.
தனுசு: வெளி வட்டாரத்தில் புதிய அனுபவம் கிடைக்கும். குழந்தைகளின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றுவீர்கள். தாய்வழி உறவினர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் விலகும். பொருட்கள் சேரும்.
மகரம்: பிள்ளைகளால் தேவையற்ற மன வருத்தம், டென்ஷன் ஏற்படும். உடல்நலத்தில் அக்கறை காட்டுங்கள். தொழில், வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அக்கம் பக்கத்தினரின் செயல்பாடுகள் கோபத்தை ஏற்படுத்தக்கூடும்.
கும்பம்: வருங்கால வளர்ச்சிக்காக புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். வங்கியில் எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைக்கும். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு, அந்தஸ்து உயரும். உத்யோகத்தில் வேலைச் சுமை குறையும்.
மீனம்: நட்பு வட்டம் விரிவடையும். பழைய பிரச்சினைகளை பேசித் தீர்ப்பீர்கள். பெற்றோருடன் வீண் வாக்குவாதம் வந்துபோகும். நீண்ட நாட்களாகப் பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். குழப்பம் நீங்கி, தெளிவு பிறக்கும்.