மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 14 அக்டோபர் 2026

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 14 அக்டோபர் 2026
Updated on: 
2 min read

மேஷம்: வெளிவட்டாரத்தில் கவனம் தேவை. வீண் விவாதங் களை தவிர்க்கவும். பிள்ளைகளால் கையிருப்பு கரையும். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்ட முயற்சிப்பீர். பங்குதாரரின் ஆலோசனைகளை கேட்டு செயல்படவும். அலுவலகத்தில் பணிச்சுமை கூடும்.

ரிஷபம்: எதிரிகளை வீழ்த்தும் வல்லமை உண்டாகும். கறாராகபேசி காரியம் சாதிப்பீர். சேமிக்கும் அளவுக்கு வருவாய் கூடும். பழுதான சாதனங்களை மாற்றிவிட்டு புதிது வாங்குவீர்கள்.அலுவல கத்தில் விவாதங்களை தவிர்க்கவும். வியாபாரம் லாபம் தரும்.

மிதுனம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். எதிர்பார்த்த விலைக்கே சொத்தை விற்பீர்கள். பெரிய மனிதர் கள், வெற்றி பெற்றவர்களின் நட்பு கிடைக்கும். அலுவலகத்தில் மகிழ்ச்சி பொங்கும். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு வெல்வீர்.

கடகம்: அடுக்கடுக்காக இருந்த செலவு இனி குறையும். சவாலான காரியங்களையும் எடுத்து முடிப்பீர். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர். வியாபாரரீதியாக பிரபலங்களின் உதவியை நாடுவீர். அலுவலகத்தில் தேடிய ஆவணம் தென்படும்.

சிம்மம்: பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வர். குடும்பத் தில் மகிழ்ச்சி பொங்கும். வாகனத்தால் செலவு உண்டு. யோகா, ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் பாக்கிகளை வசூலிப்பீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

கன்னி: பழைய நினைவுகளில் மூழ்குவீர்கள். சிலர் நன்றி மறந்து பேசுவார்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். வியா பாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் மேலதிகாரி நேசக்கரம் நீட்டுவார். அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர்கள்.

துலாம்: உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடும். தந்தைவழி சொத்துகள் கைக்கு வரும். மூத்த சகோதரிகள் பண உதவி செய்வர். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க பழகிக் கொள்வது நல்லது. வியாபாரம் சிறக்கும்.

விருச்சிகம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் கையில் இருக்கும் பணம் கரையக் கூடும். வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளின் உடல்நிலை லேசாக பாதிக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும்.

தனுசு: சிக்கனமாக செலவழித்து சேமிக்க தொடங்குவீர். தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. பூர்வீக சொத்து வழக்கில் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பீர்.

மகரம்: சோர்வு நீங்கி மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். பூர்வீக வீடு, மனை, விவசாய நிலம் உள்ளிட்டவற்றை விற்க முயற்சிப்பீர். அரசுக் காரியங்களில் வெற்றியுண்டு. அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார்.

கும்பம்: எதிர்பார்த்துக் கொண்டிருந்த பணம் வரும். வீட்டில் பழுதான பொருட்களை மாற்றிவிட்டு புதிய பொருட்களால் அலங்கரிப்பீர். வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாண்டு வாடிக்கை யாளர்களை கவருவீர். அலுவலகத்தில் உங்களின் தரம் ஒருபடி உயரும்.

மீனம்: வர வேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். வருங்காலத் துக்காக சேமிக்கத் தொடங்குவீர். புதியவர்களின் அறிமுகம் கிட்டும். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 14 அக்டோபர் 2026
ஜோதிட நாள்காட்டி 14.10.2026 | புரட்டாசி 27 - புதன்கிழமை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in