

மேஷம்: வெளியூரில் இருந்து நல்ல செய்திகள் வரும். குடும்பத்தினரின் ஆசைகள், விருப்பங்களை அறிந்து நிறை வேற்றுவீர்கள். அடிக்கடி பழுதாகும் வாகனத்துக்காக இனிமேல் செலவு செய்யாமல், வாகனத்தை மாற்றுவீர்கள்.
ரிஷபம்: புதிய மின்னணு, மின்சார சாதனங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தில் மனநிம்மதி கிடைக்கும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்திருந்த ஒருவர் உங்களைத் தேடி வருவார். பண வரவு உண்டு.
மிதுனம்: எதிர்பாராத பணவரவால் பழைய கடனை பைசல் செய்வீர்கள். சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். உத்யோகத்தில் வேலைச் சுமை குறையும். பேச்சில் பொறுமை தேவை.
கடகம்: குடும்பத்தினருடன் கலந்துபேசி முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். விலகிச் சென்ற நண்பர்கள் உங்களைப் புரிந்து கொள்வார்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும்.
சிம்மம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். தங்கம், வெள்ளி ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். உத்யோகத்தில் உயர் அதிகாரிகள் உங்களை நம்பி சில பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். காரியத்தில் நிதானம் அவசியம்.
கன்னி: நெருங்கிய சொந்த பந்தங்களால் வீண் செலவுகள் வரக்கூடும். கணவன் - மனைவிக்குள் மனஸ்தாபம் உண்டாகும். திடீர் பயணங்களால் அலைச்சல், அசதி ஏற்படும். அலுவலகத்தில் வேலைச் சுமை அதிகரிக்கும். ஆன்மிக நாட்டம் கூடும்.
துலாம்: எடுத்த வேலையை முடிக்க முடியாமல் திணறு வீர்கள். வீண் விவாதங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. வியாபாரத்தில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். முக்கிய கோப்புகளை கவனமாக கையாள வேண்டும்.
விருச்சிகம்: புதிய முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்தினரின் எண்ணங்களைப் பூர்த்தி செய்வீர்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். அரசு, வங்கி வேலைகள் முடிவுக்கு வரும். பொருட்கள் சேரும்.
தனுசு: குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டு. கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். சகோதர வகையில் இருந்த அலைச்சல் விலகும். புதிய வேலை அமையும். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிப்பீர்கள். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
மகரம்: வருங்கால வளர்ச்சிக்காக புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். நாடி வந்தவர்களுக்கு இயன்ற உதவிகளைச் செய்வீர்கள். அதிகாரிகளின் நட்பும், அதனால் ஆதாயமும் கிடைக்கும். யாரையும் எடுத்தெறிந்து பேசக் கூடாது.
கும்பம்: பழைய பிரச்சினைகளை சுமுகமாக பேசித் தீர்ப்பீர் கள். பிள்ளைகளின் உடல்நலம் சீராகும். வியாபாரத்தில் அனுபவமிக்க ஊழியர்கள் கிடைப்பார்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும். ஆன்மிக நாட்டம் கூடும்.
மீனம்: எடுத்த வேலை தாமதமாவதால் பதற்றத்துடன் காணப் படுவீர்கள். குடும்பத்தில் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. வியாபாரத்தில் அலைச்சல் இருந்தாலும், ஆதாயமும் உண்டு. வாகனப் பயணத்தில் கவனம் தேவை.