மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 01 அக்டோபர் 2026

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 01 அக்டோபர் 2026
Updated on: 
2 min read

மேஷம்: எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவி கிட்டும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர். அரசால் அனுகூலம் உண்டு. வியா பாரம் லாபம் தரும். புதிய பங்குதாரரின் ஆலோசனைகளை ஏற்று செயல்படுவீர். அலுவலகத்தில் உங்கள் நிர்வாகத் திறமை வெளிப்படும்.

ரிஷபம்: திடீர் பயணம் அலைச்சல் தரும். திட்டமிட்ட பணியை முடிக்க அதிகம் போராட வேண்டியிருக்கும். போராடுவீர். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்.

மிதுனம்: விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். பிள்ளைகளின் விருப்பங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். வாகனப் பழுது நீங்கும். அலுவலகத்தில் மேலதிகாரி முக்கிய பொறுப்புகளை உங்களிடம் ஒப்படைப்பார். வியாபாரம் சூடு பிடித்து லாபம் தரும்.

கடகம்: தம்பதிக்குள் இருந்து வந்த பிணக்குகள் நீங்கி அன்யோன் யம் அதிகரிக்கும். பணவரவு திருப்தி தரும். பிள்ளைகளின் எண்ணங் கள் அறிந்து நிறைவேற்றுவீர். வியாபாரத்தை பெரிய அளவில் விரிவு படுத்துவீர்கள். அலுவலகத்தில் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.

சிம்மம்: சவாலான விஷயங்களையும் சாதாரணமாக செய்து முடிப்பீர். குடும்பத்தினர் உங்கள் பேச்சுக்கு செவி சாய்ப்பர். திடீர் பயணங்கள் உண்டு. பழைய நண்பர்கள், உறவினர்களை சந்திப்பீர்கள். வியாபாரம் சிறக்கும். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.

கன்னி: குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர். கையில் பணம் புரளும். முக்கிய பிரமுகர்களை சந்திப்பதால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிக்கும் நிலை இருக்கும். அலுவலகப் பிரச்சினை விலகும்.

துலாம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். பேச்சில் நிதானம் தேவை. முன்கோபம் அதிகரிக்கும். வாகனம் செலவு வைக்கும். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க பழகிக் கொள்வது நல்லது.

விருச்சிகம்: எதையும் தாங்கும் மனவலிமை கிட்டும். பணவரவு உண்டு. சகோதரர்கள் பக்கபலமாக இருப்பர். எதிர்ப்பு, ஏமாற்றங்களை முறியடித்து வெற்றி பெறுவீர். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். அலுவலகத்தில் யாரைப் பற்றியும் தலைமையிடத்தில் புகார் கூறாதீர்.

தனுசு: எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிட்டும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த குழப்பங்கள் விலகும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்கி மகிழ்வீர், வியாபாரத்தில் சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலகத்தில் மேலதிகாரிகளை பகைத்துக் கொள்வது நல்லதல்ல.

மகரம்: கையில் பணம் புரளும். ஈகோ பிரச்சினை தீர்ந்து கணவன் -மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். சொந்த ஊர் விசேஷங்களை முன்னின்று நடத்துவீர். அரசாங்க அதிகாரிகள் நேசக்கரம் நீட்டுவார்கள். வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்.

கும்பம்: திடீர் திருப்பம் உண்டாகும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். முன்கோபம் குறையும். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர். வியாபாரத்தில் புதிய பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பர். லாபம் கூடும்.

மீனம்: நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். வழக்கு சாதகமாகும். மனைவிவழி உறவினர்களுடன் இருந்து வந்த ஈகோ பிரச்சினை நீங்கும். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடா மல் இருக்கவும். வியாபாரத்தில் பணியாட்களின் ஆதரவு கிட்டும்.

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 01 அக்டோபர் 2026
ஜோதிட நாள்காட்டி 01.10.2026 | புரட்டாசி 14 - வியாழக்​கிழமை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in