மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 26 செப். 2026

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 26 செப். 2026
Updated on: 
2 min read

மேஷம்: உங்களின் அணுகுமுறையை மாற்றி தடைபட்ட வேலையை முடிப்பீர்கள். சகோதரியின் விசேஷத்துக்கு அதிகம் உழைப்பீர். அலுவலகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். வியாபாரரீதியாக வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டிவரும்.

ரிஷபம்: மற்றவர்களின் ரசனைக்கேற்ப செயல்படுவீர். உறவினர்கள் உங்களை பெருமையாக பார்ப்பார்கள். ஊர் நிகழ்ச்சிகளில் முதன்மைதாங்குவீர். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும் அலுவல கத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பது நல்லது.

மிதுனம்: சவாலான காரியங்களையும் சாதுர்யமாக முடித்து வெற்றி பெறுவீர்கள். தடைகள் யாவும் நீங்கும். முக்கிய முடிவுகள் எடுப்பீர். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். லாபம் அதிகரிக்கும். பங்குதாரரின் கருத்துக்கு முக்கியத்துவம் அளிப்பீர். உத்தியோகம் சிறக்கும்.

கடகம்: கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள். குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை உருவாகும். அலுவலகத்தில் மேலதிகாரியின் ஆதரவைப் பெறுவீர். வியாபாரத்தில் புதிய யுக்தி களைக் கையாண்டு பழைய வாடிக்கையாளர்களைக் கவருவீர்கள்.

சிம்மம்: காரியத் தடைகள், அலைச்சல் வந்து போகும். குடும்பத்தின ரால் செலவு உண்டு. பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்ட முயற்சி மேற்கொள்வீர். வியாபாரத்தில் பழைய பாக்கிகளை போராடி வசூலிக்க வேண்டிவரும். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.

கன்னி: முக்கிய பிரமுகர்களை சந்திப்பதால் மனநிறைவு கிட்டும். ஈகோ பிரச்சினை தீர்ந்து தம்பதிக்குள் நெருக்கம் கூடும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். பங்குதாரரின் ஆலோசனைகளை உதாசீனப் படுத்தாதீர். அலுவலகத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும்.

துலாம்: இழுபறியாக இருந்த வேலைகளை முடிப்பீர். பணப்புழக்கம் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். அலுவலகத்தில் நிம்மதியுண்டு. மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

விருச்சிகம்: பிள்ளைகளின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர். கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். உடன்பிறந்தோரின் ஒத்துழைப்பு உண்டு. வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவல கத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பது நல்லது.

தனுசு: தடைகள் நீங்கி குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். பணவரவு அதிகரிக்கும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வியாபாரரீதியாக சிலரை சந்திப்பீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரியின் ஆதரவு உண்டு. சக ஊழியர் மத்தியில் மதிப்பு உயரும்.

மகரம்: முகத்தில் தெளிவு பிறக்கும். மனைவிவழியில் நற்செய்தி உண்டு. தொல்லை தந்த வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். மக்கள் அதிகம் கூடும் இடத்துக்கு கடையை மாற்றுவீர். அலுவலகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்.

கும்பம்: வருமென நினைத்திருந்த பணம் வந்து சேரும். மனைவியின் விருப்பத்தை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர். பிள்ளைகளால் நிம்மதி உண்டு. வாகன பராமரிப்புச் செலவு குறையும். வியாபாரத்தில் பாக்கி களை விரைந்து வசூலிப்பீர். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பீர்.

மீனம்: குடும்பத்தில் தம்பதிக்குள் மனம்விட்டுப் பேசி, பிரச்சினைகளை தீர்ப்பீர். தாயாரின் உடல்நலத்தில் அக்கறை காட்டவும். பிள்ளைகளின் படிப்பு தொடர்பாக அலைச்சல் வந்து போகும். அலுவலகத்தில் அமைதி காக்கவும். வியாபாரம் சூடு பிடித்து லாபம் பார்க்கலாம்.

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 26 செப். 2026
ஜோதிட நாள்காட்டி 26.09.2026 | புரட்டாசி 09 - சனிக்கிழமை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in