

மேஷம்: சொந்த ஊரில் மதிக்கப்படுவீர். கவுரவப் பதவி தேடி வரும். மூத்த சகோதர, சகோதரிகளுடன் இருந்த மனத்தாங்கல் நீங்கும். ஷேர், கமிஷன் வகைகளால் பணம் வரும். வியாபார நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீர். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்க்கவும்.
ரிஷபம்: எதிர்பார்த்த பணம் கைக்கு வருவதால் மனநிம்மதி கிட்டும். மனைவிவழியில் மதிப்பு உயரும். தாயாரின் விருப்பத்தை நிறை வேற்றுவீர். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வியாபாரம் லாபம் தரும். அலுவலகத்தில் யாரையும் பகைத்து கொள்ளாதீர்.
மிதுனம்: குடும்பத்தில் நிலவிய காரசார விவாதங்கள் மறையும். பிள்ளைகளின் சாதனைகளால் பெருமை அடைவீர். நல்லவர்கள் நட்பு கிட்டும். வியாபாரரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திக்கும் வாய்ப்பு ஏற்படும். அலுவலகத்தில் உயரதிகாரி நேசக்கரம் நீட்டுவார்.
கடகம்: மகனின் வேலை, மகளின் திருமணம் என்று அலைச்சல், டென்ஷன் இருக்கும். பூர்வீக வீட்டை விற்க முயற்சிப்பீர். சகோதரர் களிடம் கோபத்தை காட்டாதீர். வியாபாரத்தில் லாபம் உண்டு. அலுவல கத்தில் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பது நல்லது.
சிம்மம்: புதியவர்கள் அறிமுகமாவர். குழப்பம் நீங்கி குடும்பத்தில் அமைதி தங்கும். சகோதர, சகோதரிகள் உதவிகரமாக இருப்பர். வியா பாரத்தில் அலைச்சல் இருக்கும். எதிலும் கவனமாக செயல்படுவது நல்லது. அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர்.
கன்னி: பழைய பிரச்சினைகளை தீர்ப்பீர்கள். சகோதர சகோதரிகள் உங்கள் வளர்ச்சிக்கு சாதகமாக இருப்பர். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் மகிழ்ச்சி உண்டு. வியா பாரத்தில் பங்குதாரர்களின் கருத்துக்கு முக்கியத்துவம் அளிக்கவும்.
துலாம்: வெளிவட்டாரத்தில் புதியவர்களின் அறிமுகம் கிட்டும். ஈகோ பிரச்சினை தீர்ந்து தம்பதிக்குள் நெருக்கம் கூடும். கடனாகக் கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். வாகனப் பழுது நீங்கும். வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்துவீர். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.
விருச்சிகம்: மனக்குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். வெளி வட்டாரத்தில் மகிழ்ச்சி தங்கும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். கேட்ட இடத்தில் இருந்து பணம் கிடைக்கும். தொழிலில் போட்டி கள் குறையும். லாபமுண்டு. அலுவலகத்தில் இருந்த பிரச்சினை தீரும்.
தனுசு: வீட்டில் கல்யாண முயற்சிகள் பலிதமாகும். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பூர்வீக வீட்டை விரிவுபடுத்துவீர். வியாபாரம் திருப்திகரமாக அமையும். அலுவலக ரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும்.
மகரம்: ஆடம்பர செலவுகளைக் குறைத்து சேமிப்பீர். தாய்வழி உறவினர்கள் ஆதரவாக இருப்பர். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடக்கவும். வியாபாரத்தில் போட்டிகளை தகர்ப்பீர். பங்குதாரர் ஆதரவு தருவார். அலுவலகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்.
கும்பம்: கணவன் - மனைவிக்குள் விட்டுக் கொடுத்து போவது நல்லது. பிள்ளைகளின் எதிர்காலம் தொடர்பாக முக்கிய முடிவு எடுப்பீர். வியாபாரத்தில் பாக்கிகளை வசூலிக்க போராடுவீர். அலுவலகத்தில் பணிச்சுமை கூடும். உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும்.
மீனம்: மனதுக்கு இதமான செய்தி வரும். உடல்சோர்வு, வயிற்றுவலி சீராகும். பூர்வீக சொத்து வழக்கு முடிவு பெறும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். பணியாட்கள் ஆதரவாக இருப்பார்கள். அலுவல கத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடுவதை தவிர்க்கவும்.