மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 24 செப். 2026

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 24 செப். 2026
Updated on
2 min read

மேஷம்: திடீர் பணவரவு உண்டு. குடும்பத்தினரின் வார்த்தைக்கு மதிப்பு கொடுக்கவும். பிள்ளைகளால் நிம்மதி உண்டு. வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். புதிய யுக்திகளைக் கையாண்டு வாடிக்கையாளர் களை கவருவீர். அலுவலகத்தில் மேலதிகாரி ஆதரவு தருவார்.

ரிஷபம்: நம்பிக்கைக்கு உரியவரை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். குடும்பத்தில் நிம்மதியுண்டு. பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர். வியாபாரத்தில் பணியாட்களை மாற்றுவீர். அலுவலகத்தில் நிம்மதியுண்டு. மேலதிகாரி பாராட்டுவார்.

மிதுனம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க பழகிக் கொள்ளவும்.

கடகம்: அலைச்சல், உடல்சோர்வு வரும். குடும்பத்தில் அனுசரித்துப் போகவும். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர். வியாபாரத் தில் நிதானம் தேவை. புதிய பங்குதாரர்களின் கருத்து களுக்கு முக்கியத்துவம் அளிக்கவும். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.

சிம்மம்: பிரச்சினைகளில் இருந்து விடுபடுவதற்கான மாற்றுவழியை கண்டறிவீர். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். தாயாரின் உடல் நலத்தில் முன்னேற்றம் உண்டு. வியாபாரம் சூடு பிடித்து நல்ல லாபம் பார்க்கலாம். அலுவலகத்தில் மேலதிகாரியின் ஆதரவைப் பெறுவீர்.

கன்னி: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிரபலங்கள் வீட்டு விசேஷங் களில் கலந்து கொள்வீர்கள். யோகா, ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் பணியாட்களை மாற்றுவீர். அலுவல கத்தில் தேடிய ஆவணம் தென்படும். சக ஊழியர்கள் மதிப்பர்.

துலாம்: உறவினர், நண்பர்கள் வீட்டு சுபநிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர். பூர்வீக சொத்து வழக்கில் வெற்றி உண்டு. பழைய பிரச்சினை களுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரம் லாபம் தரும். பங்குதாரர்களை பகைத்துக் கொள்ளாதீர். அலுவலகத்தில் விவாதங்கள் வேண்டாம்.

விருச்சிகம்: தாயாரின் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். பூர்வீக வீடு, மனை விற்க முயற்சிப்பீர். அலுவலகத்தில் பெரிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர். வியாபாரத்தில் பங்குதாரர்களை பேசி சமாளிப்பீர்கள்.

தனுசு: நெடுநாட்களாக இழுபறியாக இருந்த காரியம் இன்று முடிவுக்கு வரும். தாயாரின் உடல்நிலை சீராகும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபாரத்தில் எதிர்பார்த்தபடி லாபம் கிடைக்கும். அலுவலகத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும்.

மகரம்: முக்கிய பிரமுகர்கள் அறிமுகமாவர். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிட்டும். வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்த வங்கிக் கடன் கிடைக்கும். பழைய பங்குதாரர்கள் மீண்டும் வந்து இணைவார்கள். அலுவலகத்தில் உங்களின் கோரிக்கைகள் ஏற்கப்படும்.

கும்பம்: வாகன பராமரிப்பு செலவு அதிகரிக்கும். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளவும். சொந்த ஊர் விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு வெல்வீர். அலுவலகத்தில் உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கிட்டும்.

மீனம்: மற்றவர்களால் செய்ய முடியாத காரியங்களை முடித்துக் காட்டுவீர்கள். பிள்ளைகள் பொறுப்புடன் நடப்பார்கள். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நன்மை தரும். வியாபாரத்தை விரிவுபடுத்தும்விதமாக வங்கிக் கடனுதவியை நாடுவீர்.

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 24 செப். 2026
ஜோதிட நாள்காட்டி 24.09.2026 | புரட்டாசி 07 - வியாழக்கிழமை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in